ஶ்ரீரங்கம்: ஜன.10-ல் வைகுண்ட ஏகாதசி- இன்று திருநெடுந்தாண்டகம் நிகழ்வு-நாளை முதல் பகல் பத்து உற்சவம்!
திருச்சி: ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி (அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில்) கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள் திருநெந்தாண்டகம் எனும் நிகழ்வுடன் இன்று தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் திருமொழி திருநாள் நிகழ்வுடன் நாளை முதல் 21 நாட்கள் நடைபெறும். ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு ஜனவரி 10-ந் தேதி நடைபெறும்.
ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில்- பூலோக வைகுண்டம் என பக்தர்கள் போற்றப்படுகிற, வணங்கப்படுகிற திருத்தலம். ஶ்ரீரங்கம் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி என்கிற திருஅத்யயன உற்சவம்தான் சிறப்புக்குரியதாகும்.

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது பகல் பத்து-ராப் பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று முதல் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் தொடங்கியது. திருநெடுந்தாண்டகம் என்ற நிகழ்ச்சியுடன் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது.
இதனையடுத்து பகல் பத்து நிகழ்வுகள் நாளை, திருமொழி திருநாள் நிகழ்வுடன் நாளை தொடங்கும். நாளை செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுவார். முதலில் காலை 8.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார் நம்பெருமாள். இதனையடுத்து காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திவ்யபிரந்த பாடல்களை அரையர்கள் பாடுவர். அர்ஜூன மண்டபத்தில் இருந்து இரவு 7 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். நாளை முத்தங்கி சேவையில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தர இருக்கிறார்.
மொத்தம் 21 நாட்கள் பகல் பத்து உற்சவம் நடைபெறும். பகல் பத்தின் 10-வது நாள் உற்சவமானது ஜனவரி 9-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் மோகினி அலங்காரம் அல்லது நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள் எழுந்து அருள் பாலிப்பார்.
பகல் பத்தைத் தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கும். இதன் முதல்நாள்தான் வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். அன்று ரத்தின அங்கியுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் அருள் பாலிப்பார்.
இந்த வைகுண்ட ஏகாதசி- சொர்க்கவாசல் திறப்பு நாளில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்கேற்பர். இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications