Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி.. நாளை சொர்க்கவாசலில் நம்பெருமாள்.. மோட்சத்திற்கு வழி காட்டும் மோகினி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: வைகுண்ட எகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. பகல்பத்து விழாவின் பத்தாம் நாளான இன்றைய தினம். நம்பெருமாள் நாச்சியார் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Vaikunta ekadasi Sorgavasal Tiruapu tomorrow in Srirangam Sri Ranganathar Temple

மோகினி அலங்காரம்: பகல்பத்து விழாவின் கடைசி நாளான இன்று காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ரத்தினக்கிளி தலையில் நாகாபரணம்,பவளமாலை,அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

நாச்சியார் திருக்கோலம் காரணம்: பல்வேறு சிறப்புகளுடைய இத்திருவிழாவில் நாச்சியார் திருக்கோலத்துக்கு ஒரு காரணமும் உண்டு. ரங்கநாதர் தன்னை தரிசிக்க வந்தவர்களை " மம மாயா துரத்யா என்னுடைய மாயையைக் கடக்க சொன்னாராம். மண்ணாசை பொன்னாசை, பெண்ணாசை. இந்த மூன்று ஆசைகளிலும் பெண்ணாசையை ஒழிப்பது கடினம். ஏனெனில் ஒரு ஜீவன் சரீரமெடுக்க ஆரம்பித்த காலம் முதல் பெண்ணாசை இருந்து வருகிறது.

மாயையில் மயங்க வேண்டாம்: நான் பூண்டிருக்கும் மோகினி வேஷத்தில் மயங்கியதால் அசுரர்கள் அமிர்தத்தையடைவதை இழந்தார்கள். எனவே நீங்களும் பெண்ணாசையில் மயங்காமல் " பரம்த் ருஷ்ட்வா நிவர்த்தந்தே " என்றும் , " மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள்கைவிட்டு " என்றும் சொல்லுகிறபடி நாளைய தினம் ஏகாதசியன்று தான் காட்டிக் கொடுக்கும் மார்க்கத்தைக் கண்டுரைத்து அனுஷ்டித்தால் எல்லாவி தமான மாயையில் இருந்தும் விடுபட்டு, எனது வைகுந்த நாட்டை அடைவீர்களென்று உபதேசிப்பதாகும்.

Vaikunta ekadasi Sorgavasal Tiruapu tomorrow in Srirangam Sri Ranganathar Temple

சொர்க்கவாசல் திறப்பு: வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

நம்பெருமாள் அலங்காரம்: இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நாளை அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வெளியில் வருவார்.
தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

சொர்க்கவாசல் திறப்பு: முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளுவார். அதனைத் தொடர்ந்து காலை 4.30 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வருவார்.

பக்தர்கள் தரிசனம்: அங்கு நம்பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் காலை 7 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுவார். காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும்.

விடிய விடிய தரிசனம்: சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் நம்பெருமாளை தரிசனம் செய்து பரமபத வாசல் வழியாக எழுந்தருள தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பூலோக வைகுண்டம்: சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் திறப்பு தினமான, 23ஆம் தேதி முதல், ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது. கோவில் கோபுரங்கள் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Vaikunta ekadasi Sorgavasal Tiruapu tomorrow in Srirangam Sri Ranganathar Temple

பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட உள்ளனர். நாளைய தினம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அன்று கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

விடுமுறை: கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உடன், கூடுதலாக, 100 கேமராக்கள் இணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், விழா நாட்களில், காவிரிப் பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு போலீசார் பணியில் ஈடுபடுத்த உள்ளனர். வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+