வசம்பு வாசம்.. பணத்தை வசியப்படுத்தும் அற்புதமான வசம்பு தீபம் பரிகாரம் தெரியுமா? வேப்ப எண்ணெய் போதுமே
சென்னை: ஏராளமான மருத்துவ குணம் கொண்ட வசம்பு, ஆன்மீகத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.. அந்தவகையில் கண் திருஷ்டி எடுப்பது முதல் பரிகாரம்வரை வசம்பின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது. இதில் சிலவற்றை பார்ப்போம்.
வசம்பு ஒரு ஆண்டிபயாடிக் மூலிகையாகும்.. நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் தன்மை இந்த வசம்புக்கு உண்டு.. பொதுவாக, நேர்மறை ஆற்றலை பெருக்கக்கூடிய பொருட்களை வீட்டில் வைத்திருப்பதால், தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வீட்டிற்குள் வைத்திருந்தாலே, குடும்பம் வறுமையிலிருந்து தப்பித்துவிடும் என்பார்கள்.

பணம் ஈர்ப்பு: அந்தவகையில், பண வரவையும் ஈர்க்கும் சக்தி வசம்புக்கு உண்டு.. வசம்பு என்ற வாசனை மூலிகையை பரிகாரங்களுக்கு பயன்படுத்தலாம். ஒரு மண் பானையில் கல் உப்பை நிரப்பி, அதில், ஒரு துண்டு வசம்பு போட்டு, அதன்மீது உப்பைக் கொட்டி மூடிவிட வேண்டும். இந்த பாத்திரத்தில் 520 என்ற எண்ணை மேல்புறத்திலும், 741 என்று எண்ணை கீழ்புறத்திலும் எழுதி, இதனை யாரும் பார்க்காதவாறு, பூஜையறையில் சாமி படங்களுக்கு பின்புறம் மறைத்துவிட வேண்டும். மாதம் ஒருமுறை இந்த பானையை வெளியே எடுத்து, அதிலிருக்கும், உப்பு, வசம்பு இரண்டையும் எடுத்துவிட்டு, வேறு வசம்பு, உப்புவை மாற்றிவிட்டு, மறுபடியும் யார் கண்ணிலும் படாமல் வைக்க வேண்டும். இப்படி செய்துவரும்போது வீட்டில் பணம் தங்குதடையின்றி வந்து கொண்டே இருக்குமாம்.
வசம்பு பொடி: வசம்பு பொடியை ஒரு வெள்ளை நிறத் துணியில் போட்டு, பச்சை கற்பூரம் சிறிய துண்டு, ஏலக்காய் 2, கிராம்பு 2, சிறிது கல் உப்பு போன்றவற்றை வைத்து பச்சை நிற நூலால் சிறிய முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். இந்த முடிச்சை பணப்பெட்டி, பீரோ போன்ற இடங்களில் வைக்கலாம். இதனால், உங்களிடமுள்ள பணம் பன்மடங்காகப் பெருகும்.
நகைப்பெட்டியில் வைக்கும்போது, நகைகள் வாங்கும் யோகமும் கூடும். குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் வைக்குமிடத்திலும் இந்த முடிச்சை வைக்கலாம். இதனால் குழந்தைகள் புத்திக்கூர்மையுடனும், நினைவுத்திறனுடனும் படிப்பார்கள்.
வசம்பு தீபம்: வசம்பு கொண்டு வசம்பு தீபம் ஏற்றுவதாலும் கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். பெரிய அகல்விளக்கில் வேப்ப எண்ணெயை ஊற்றிக்கொண்டு, 6 நெல்லிக்காய் கொட்டை, 2 சிட்டிகை வசம்பு பொடியையும் சேர்க்க வேண்டும். பின்னர் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி வருவதால், வியாபாரத்தில் உள்ள தொல்லைகள் நீங்கி, நஷ்டங்களும் விலகும். எதிரிகளின் தொல்லையும் நீங்கும்.
ஒருவேளை எதிரிகளின் செய்வினை கோளாறுகள் இருந்தால், வேப்பெண்ணை தீபத்தில் நெல்லி கொட்டைகளுக்கு பதிலாக 9 வேப்பம் கொட்டைகளை சேர்ந்து தீபம் ஏற்ற வேண்டும். அல்லது மேற்கண்ட 2 பிரச்சனைகள் இருந்தால், 2 தீபத்தையும் தனித்தனியாக ஏற்றி பூஜை செய்யலாம்.
இரட்டிப்பு பலன்: செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இந்த தீபத்தை ஏற்றுவது சிறந்த பலனை தரும். விளக்கேற்றும்போது, தென்மேற்கு திசையில் தீபம் ஏற்றிவைத்து தீபத்தின் முன்பு அமர்ந்து, தீப ஒளியின் மையத்தை பார்த்தவாறு மனதில் உள்ள பிரச்சனைகளை சொல்லி வேண்டி கொள்ளலாம். இந்த விளக்கில் உள்ள கொட்டைகளை மாதத்திற்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications