வாஸ்து டிப்ஸ்.. மறந்தும் கூட கிச்சனுடன் சேர்த்து பாத்ரூம் கட்டாதீர்கள்.. மீளவே முடியாத பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குளியலறை தானே என்று ஏதாவது ஒரு இடத்தில் கட்டி வைத்து விடுவார்கள். இடம் இருக்கிறதே என்று கண்ட இடங்களில் பாத்ரூம் கட்டக்கூடாது என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமியின் அருள் கிடைக்கப் பெற வேண்டுமானால் முதலில் நாம் வாழும் வீடு வாஸ்துப்படி அமைந்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

வாஸ்து பகவானை திருப்திப்படுத்தினால் தான் வீட்டில் மகாலட்சுமியின் அருளால் செல்வ வளம் பெருகும். ஒருவர் வீட்டில் பணம் பெருகுவதற்கு வாஸ்து ஒரு முக்கிய காரணம். எனவேதான் பணத்திற்கும், வாஸ்துவிற்கும் தான் சம்பந்தம் உண்டு என்று கூறப்படுகிறது. பஞ்ச பூதங்களையும் சரிசமமாக பாவித்து நாம் வீடு கட்ட வேண்டும்.

Vastu Tips Attached Bathroom and with Kitchen in your house What is the remedis

சிலரது வீடுகளில் சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். சிலரது வீடுகளில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவு வந்து கொண்டே இருக்கும். மனம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க நாம் வாஸ்து படி வீட்டினை கட்ட வேண்டும். வாடகை வீடாக இருந்தாலும் நாம் வாஸ்து படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டைக் கட்டும்போது இந்த பஞ்சபூதத்தை கணக்கில் கொள்வது தான் வாஸ்து. ஒரு வீட்டில் எட்டு திசைகளிலும் காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும். இந்த சமநிலையே வாழ்க்கைக்கு செழிப்பைக் கொண்டுவருகிறது. செழிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் வீட்டில் மன நிம்மதி குடியேறும். எதையும் நேர்மறையாகவே சிந்திப்பார்கள்.

ஒரு வீட்டில் சமையல் அறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் குளியலறையை கட்டினால் கெடு பலன்கள் அதிகமாகும். ஒரு சிலர் சமையல் அறை அமைக்கக்கூடிய தென்கிழக்கு பகுதியில் குளியலறை கட்டியிருப்பார்கள். இது நோய்களை அதிகரிக்கும். ஆரோக்யக் கெடுதியை உண்டாக்குவதோடு ஏராளமான மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.

Vastu Tips Attached Bathroom and with Kitchen in your house What is the remedis

தென்கிழக்கு எனப்படும் அக்னி மூலையில் குளியலறை கட்டி அங்கு அதிக அளவில் தண்ணீரை செலவு செய்தால் பணம் அதிகம் செலவாகும். மீள முடியாத அளவிற்கு கடன் சேரும். வருமானம் குறையும்

கிழக்குப் பகுதியில் மையத்தில் அமைந்த குளியலறையும் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையைத் தரும். மருத்துவச் செலவுகளைக் குறைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். அதே நேரத்தில் கடன் பிரச்சினையோ நோய் பாதிப்புகளையோ கொடுக்காது என்பதால் கிழக்கு பகுதியின் மையத்தில் குளியலறை அமைக்கலாம். எந்த பிரச்சினை வந்தாலும் எதையும் சமாளிக்கலாம் என்கிற மன உறுதி வரும்.

அதே போல தெற்கு திசையின் மையத்தில் குளியலறை அமைந்திருந்தாலும் நல்லதே. அந்தக் குடும்பத்தில் பெண்குழந்தைகள் கலை தொடர்பான துறையில் புகழ் பெறுவார்கள். காரணம் தெற்கு, பெண் ஆதிக்க திசை. இன்னும் சிலருக்கு தாங்கள் விரும்பிய குடும்ப வாழ்க்கை அமையவும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் குடும்பத்தின் பெண்களுக்கு சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் ஏற்படும்.

மேற்கு மையத்தில் குளியலறை அமைந்திருந்தாலும் பெண்களுக்கு சிறப்பையே தரும். ஆனால் இது ஆண் ஆதிக்க திசை என்பதால் இது ஆண்களுக்குரிய பலன்களைத் தரும். அயல் நாடுகளில் வேலை வாய்ப்பு அல்லது திருப்திகரமான சொந்தத் தொழில், அந்தஸ்து போன்றவை அமையும். அந்த வீட்டின் நவீன பொருட்களின் சேர்க்கை இருக்கும்.

பொதுவாக மேற்கு என்பது வருண திசையாக இருப்பதால், மேற்கு மையமும், வடமேற்கும், குளியலறை அமைப்பதற்கு ஏற்ற இடம்.
குளியல் மற்றும் கழிவறை அமைப்புக்கு 90% சதவீதம் சிறப்பைத் தரும் பகுதி வடமேற்கு. இதனை வாஸ்து மொழியில் வாயுமூலை என்று அழைப்பார்கள். இந்தப் பகுதியில் குளியலறை அமையப் பெற்றால் வீட்டிற்கு வாஸ்து யோகத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் தடையற்ற பொருளாதரம், திருப்திகரமான இல்லற வாழ்க்கை, நல்லவர்களின் நட்பு போன்ற பலன்கள் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு கிடைக்கும்.

Vastu Tips Attached Bathroom and with Kitchen in your house What is the remedis

எந்த ஒரு வீட்டில் குளியல் அறை சமையல் அறையுடன் ஒட்டி கட்டப்பட்டு இருக்கிறதோ அந்த வீட்டில் நகை, இரண்டு/நான்கு சக்ர வாகனம், வீடு, மனை ஆகிய பொருட்களை விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பொருட்களை விற்பனை செய்வதில் சில சிரமங்கள் சந்தித்து பின் விறக்கப்படும். இந்த வாஸ்து அமைப்பு சில பெண்களுக்கு கருகலைதல் அல்லது கருப்பை நீர்கட்டிகளை உருவாக்கும். சிலருக்கு அதிக சோர்வு மற்றும் சந்தேக குணம் அதிகரிக்க செய்யும். இந்த அமைப்பில் இருக்கும் குளியறையை உபயோகம் செய்யாமல் வேறு குளியல் அறையை உபயோகம் செய்ய வேண்டும்.

வீடுகள், அலுவலக கட்டிடங்களில் குளியலறை அமையக் கூடவே கூடாத மூன்று இடங்கள் உள்ளன. பிரம்ம ஸ்தானம் எனப்படும் வீட்டின் வயிற்றுப்பாகம். வீட்டின் மையத்தில் குளியலறை அமைப்பது தவறாகும். இதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளை உண்டாகும். அதுபோல மற்ற இரு பகுதிகள் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு. இவ்விடங்களில் குளியலறை மற்றும் கழிவறை அமைந்தால், மருத்துவ செலவுகள், ஆபத்தான அறுவை சிகிச்சைகள், திடீர் விபத்துகள், பெரும் கடன் தொல்லை, பொருள் இழப்பு போன்றவை அதிகம் தரும். எனவே குளியலறைதானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். வாஸ்து படி சரியான திசையில் குளியலறையை கட்டி வளமாக வாழலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+