வாஸ்து டிப்ஸ்: வாசல் கதவை இந்த நேரத்தில் திறந்து வைத்தால் அதிர்ஷ்டம்.. ஜன்னல் வைக்க பெஸ்ட் திசை எது?
சென்னை: வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீடுகள் கட்டும்போது, வாசல்கள், ஜன்னல்கள் அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த சொல்கிறார்கள் நிபுணர்கள்.. வாசல் எப்படி அமைப்பது? எத்தனை வாசல் வைப்பது? ஜன்னல் எப்படி அமைக்க வேண்டும்? என்பதையும் வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஜன்னல், வாசல்கள் சரியாக இருந்தாலே, அந்த வீட்டில் சுபிட்சம் நிறைந்து வழியும் என்பது நம்பிக்கையாகும்.
ஒரு வீட்டின் வளத்தை தீர்மானிப்பது தலைவாசல் ஆகும்.. எனவே, தலைவாசல் தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளில் வைத்தால், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் கெடும் அல்லது மரணம்வரை செல்லக்கூடும். அதாவது, முழுமையான தெற்கு திசையைவிட, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் வாசல் இருந்தாலே அது குடும்பத்துக்கு ஆகாது என்பார்கள்

தலைவாசல் முக்கியம்
ஒரு வீட்டிற்கு முன்புறம், பின்புறம் என 2 வாசல்கள் இருக்கலாம். இதனால் காற்று உள்ளே நுழைந்து வெளியேற முடியும்.. எனவே, கிழக்கு மற்றும் தெற்கில் இந்த வாசல்களை வைக்கலாம். அதிலும் பின்பக்க வாசல் என்றாலே ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அந்த குடும்பத்தில் தங்கியிருக்கும் என்பார்கள்.
எத்தனை வாசல்கள்
கிழக்கு, மேற்கு, வடக்கு என 3 திசையில் வாசல்கள் வைக்கலாம்.. அதற்கு மேல் வாசல் வைத்தால், நிதி நெருக்கடி சூழ்ந்துவிடும்.. 3 வாசல்களில் கண்டிப்பாக தெற்கு திசையில் மட்டும் வாசல் வரவே கூடாது.. அப்படி வாசல் தென்பட்டால் அதை அடைத்துவிடலாம்.அதேபோல, கட்டிடத்தின் தலைவாசலை நீச்சத்தில் அமைக்கக்கூடாது..
வடக்கு பார்த்த கட்டிடத்துக்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசலும், கிழக்கு பார்த்த கட்டிடத்துக்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசலும், மேற்கு பார்த்த கட்டிடத்துக்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசலும் அமைக்கக்கூடாது என்பார்கள்.
ஜன்னல்கள் எத்தனை
அதேபோல ஜன்னல்களை பொறுத்தவரை, வீட்டின் வடக்குப் பகுதியில் வைப்பது அவசியம். வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகள் ஜன்னல் வைக்கலாம்.. முக்கியமாக ஈசானிய மூலையில் ஜன்னல் வைத்தாக வேண்டும் என வாஸ்து கூறுகிறது.
அறிவியல் ரீதியாக திசைகளை பார்த்தோமானால், வடகிழக்கு, தென்மேற்கு திசைகளில்தான் அதிக ஆக்சிஜன் வாயு அதிகம் கிடைக்கிறது. எனவே, ஈசான்ய மூலையில் வைக்கும் ஜன்னலால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம்
அதே போல குபேர மூலை எனப்படும் தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. அந்த மூலையில் ஜன்னல் அமைத்தால் அது வீண் விரைய செலவுகளை கொண்டு வரும் என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், ஜன்னல்களுக்கு என்று எண்ணிக்கை எதையும் வாஸ்து சாஸ்திரம் தனியாக குறிப்பிடவில்லையாம்.. அந்த காலத்திலிருந்தே ஒற்றைப்படையை பயன்படுத்தியதால் வீடுகளில் வைக்கப்படும் ஜன்னல்களின் எண்ணிக்கைக்கும் அதனையே மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
சூரிய உதயமாகும் நேரமான பிரம்ம நேரத்தில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவார் என்பதால், இந்த நேரத்தில் வீட்டின் கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பது குடும்பத்துக்கு நல்லது என்பார்கள்.












Click it and Unblock the Notifications