நிம்மதியான சுகமான தூக்கம் வேண்டுமா..உங்க பெட்ரூம் இப்படி இருக்கணும்..வாஸ்து டிப்ஸ்
சென்னை: மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என்று மனம் வெறுத்து பாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். கோடி கோடியாக சம்பாதித்தாலும் படுத்த உடனே நிம்மதியான உறக்கம் வரவேண்டும் அதுதான் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வேலைக்காக வெளியே சுற்றினாலும் வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்கும் இடம் படுக்கை அறைதான். நம்முடைய வீட்டில் படுக்கை அறை எப்படி இருந்தால் நிம்மதியான சுகமான உறக்கம் கிடைக்கும் என்று சொல்கிறது வாஸ்து சாஸ்திரம். வாழ்க்கை வளமாக இந்த வாஸ்து டிப்ஸ்படி உங்கள் பெட்ரூம் இருக்கிறதா என்று பாருங்கள்.
குடும்பத்தலைவரின் படுக்கை அறை பொதுவாக தென்மேற்கு மூலை எனப்படும் கன்னி மூலையில் இருப்பது சிறப்பு. மேற்குப்பகுதி, தெற்குப்பகுதியில் படுக்கை அறை அமைப்பது சிறப்பு. பொதுவாக மாஸ்டர் பெட்ரூம் தென்மேற்கு பகுதியில் அமைப்பது சிறப்பு. குழந்தைகளின் படுக்கை அறை வடமேற்கு பகுதியில் அமைப்பது சிறப்பு. நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

வடகிழக்கு எனப்படும் ஈசான்ய மூலையில் படுக்கை அறையை அமைக்கக் கூடாது. ஈசான்யம் என்பது சிவபெருமானுக்கு உரிய இடம். தூய்மையான இடம். எப்போதுமே சுத்தமாகவும் வெளிச்சமும் காற்றும் வீட்டிற்குள் வரக்கூடிய வகையில் இருக்க வேண்டும். தம்பதியர் வடகிழக்குப் பகுதி படுக்கை அறையில் உறங்கக் கூடாது. வடகிழக்கு பகுதியில் படுக்கை அறை அமைத்தால் அங்கு உறங்கும் புதுமண தம்பதியினருக்கு உடல் நல பாதிப்பு உள்ள குழந்தைகள் உருவாகும்.
கிழக்குப் பகுதியில் படுக்கை அறை அமைத்தால் சூரிய ஒளி வீட்டிற்குள் வருவது தடைபடும் எனவே செல்வ வளம் வருவது தடைபடும்.
தென்கிழக்கு என்பது அக்னி மூலை. சமையல் செய்வதற்கு உரிய இடம். அங்கு உறங்குபவர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்காது. தம்பதியர்களுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும். அக்னி மூலை உஷ்ணம் அதிகம் இருக்கும் இடம். இந்த இடத்தில் உறங்கினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். புதுமண தம்பதியர்களுக்கு அக்னிமூலை படுக்கை அறையில் சுகம் தடை பட வாய்ப்பு உள்ளது. வீட்டின் மையப்பகுதி பிரம்மஸ்தானம். இந்த இடத்தில் படுக்கை அறை அமையக்கூடாது.
படுக்கை அறைக்கு எப்படி வாஸ்து உள்ளதோ அதே போல நாம் படுக்கும் திசையானது எப்படி இருக்க வேண்டும் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக நாம் உறங்கும் திசை கிழக்கு அல்லது தெற்கு திசையாக இருப்பது சிறப்பு. இது உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். படுக்கும் கட்டிலை கிழக்கு வடக்கு பகுதியில் அதிக இடம் விட்டு அமைப்பது சிறப்பு.

தூங்கும் போது தலையானது மேற்கு அல்லது தெற்கு பக்கம் வைத்து படுக்கலாம். ஒருபோதும் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது.
வடக்கு மேற்கில் தலை வைத்து படுத்தால் கெட்ட கனவுகள் வரும். படுக்கை அறையில் தொலைக்காட்சி, கம்யூட்டர் போன்றவைகளை அமைக்க நேர்ந்தால் வடகிழக்கு பகுதியில் வைக்கலாம்.
காதல் ஓவியங்கள்..ரதி மன்மதன் சிலையை படுக்கை அறையில் தென்மேற்கு மூலையில் வைப்பது மனதிற்கு இதம் தரும். உறக்கமும் நிம்மதியாக இருக்கும். இரவு நேர விளக்கு சிவப்பு நிறத்திலோ இளம் ஊதா நிறத்திலோ சிறப்பு. படுக்கை அறை பெயிண்ட் இளம் வண்ணங்களில் இருப்பது சிறப்பு. இளம் நீளம், பிங்க், இளம் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசுவது சிறப்பு. அதே போல படுக்கை அறையின் சீலிங் வெண்மை நிறத்தில் இருப்பது சிறப்பு.
மனமும் உடலும் ஓய்வெடுக்கும் இடத்தில் எந்தவிட இடைஞ்சலும் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் உறக்கம் தடைபடும். எனவே நாம் ஓய்வெடுக்கும் படுக்கும் அறையை வாஸ்து படி அமைத்து கொண்டு நிம்மதியாக உறங்குவோம்.












Click it and Unblock the Notifications