வாஸ்து டிப்ஸ்: தலைவாசலில் பதிக்கும் இந்த ஒரு பொருள்..சகல ஐஸ்வர்யத்தையும் தரும்..வலம்புரி சங்கு பூஜை
சென்னை: காக்கும் கடவுளுக்கு விருப்பமானது சங்கு. மகாலட்சுமியின் அம்சம் தான் வலம்புரிச் சங்கு. வீட்டில் வலம்புரி சங்கை வாங்கி வைத்தாலே செல்வம் சேரும் என்பார்கள். இந்த வலம்புரி சங்கு ஐஸ்வர்ய லட்சுமியின் அம்சமாகவும் நம்பப்படுகிறது. வீட்டின் தலை வாசலில் சங்கு பதிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
நம்முடைய முன்னோர் வீட்டை கட்டும்போது அதனுடைய தலைவாசலில் சங்கு பதிப்பதை பாரம்பரியமாக வைத்திருந்தனர். இன்றைக்கு பலரும் சங்கு பதிப்பதை மறந்து விட்டனர். மகாவிஷ்ணுவின் அம்சமான சங்கை வீட்டின் தலை வாசலில் பதிப்பதால் வீட்டில் தெய்வ சக்தி குடியேறும்.

நம்முடைய வீட்டின் தலை வாசலில் சங்கு பதித்தால் வீட்டிற்குள் கெட்ட சக்திகள் வராது என்பது ஐதீகம். வீட்டின் மீது எவருடைய கண் திருஷ்டியும் படாது. எந்த வீட்டின் தலைவாசலில் சங்கு பதித்திருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி தொடர்பான எந்த பாதிப்புகளும் ஏற்படாது.
பழங்காலத்தில் மக்கள், செல்வ செழிப்போடு இருக்க வீடுகளின் தலை வாசலில் சங்கு பதித்து வைப்பது வழக்கம். அதாவது, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசல் படியில் பதித்து விடுவார்கள். அதன் மூலம் குறைகள் இல்லாத வாழ்க்கை அமையும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது. இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர்.
வலம்புரி சங்கினை பூஜை அறையில் வைத்தும் வழிபடலாம். தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தார் அவருடனே தோன்றியது இந்தச் சங்கு. அதனை தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார் மகா விஷ்ணு. 'பாஞ்சஜன்யம்' என்னும் அந்தச் சங்கு உயிர்களின் சலனங்களை எடுத்துக்கூறும் சின்னமாக இருந்து வருகிறது.
கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள். திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள். கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.
ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்குதான் இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரே ஒரு 'சலஞ்சலம்' என்னும் விசேஷ சங்கு தோன்றும். ஆயிரமாயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரே ஒரு 'பாஞ்சஜன்யம் சங்கு' தோன்றும் என்பார்கள். சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும்.
புதுமனை வாங்கி அங்கு வீடுகட்டிக் குடியேறுபவர்கள் நன்றாக வாழ்ந்தாலே கண் திருஷ்டியால் வியாபாரச் சரிவு ஏற்படும். கடன்கள் தொழில் கூடங்களில் தொய்வு சிலருக்கு ஏற்படும். எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற பிரச்சினைகளையும் வலம்புரி சங்கு வழிபாடு தீர்த்து வைக்கும்.
வலம்புரிச் சங்கினை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். சொந்தமாக தொழில் செய்பவர்கள் அவர்களின் வியாபார தலங்களில் இச்சங்கினை வைத்தால் தொழில் மேன்மையடைவதோடு பணம் தங்குதடையின்றி புரளும்.
தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது.
பூஜை அறையில் உள்ள வலம்புரிச் சங்கை, வெள்ளிக்கிழமைகளில் புனித நதி நீர் இருந்தால்,சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.
வீட்டில் வலம்புரி சங்கிற்கு பூஜை செய்தால் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சங்கு பூஜை செய்யலாம். இதற்கு ஒரு வாழை இலையில் அரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மீது சங்கை வைத்து சந்தனம், குங்குமம், பூக்கள் ஆகியவை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பின்னர் நம் வீட்டிற்குள் லட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்பதை பிரார்த்தனை செய்து, லட்சுமிக்கான போற்றி பாடலை பாராயணம் செய்யலாம். லட்சுமி அஷ்டோத்திரமும் சொல்லலாம். இதனால் உங்கள் வீட்டிலுள்ள திருஷ்டி தோஷங்கள் விலகும். செல்வ செழிப்பு பெருகும்.
ஆடி மாத பூரம், புரட்டாசி மாத பவுர்ணமி, ஆனி மாத சுக்லபட்ச அஷ்டமி, சித்திரை மாத பவுர்ணமி எல்லாம் சங்கு பூஜை செய்வதற்கு உரிய நாள்கள். வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணிவரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் சங்கு பூஜை செய்யலாம். வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களுக்கு பிரம்மஹத்திதோஷம் இருந்தாலும் விலகி விடும்.
வாஸ்து குறைகள் முற்றிலுமாக நீங்கவும், நினைத்த காரிய வெற்றி உண்டாகவும், ஆவி பிரச்னைகளை தீர்க்கவும் வலம்புரிச் சங்கு வழிபாடு இல்லத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். கடன் தொல்லையால் சிரமப்படுபவர்கள் பௌர்ணமி தினத்தில் சங்குக்கு குங்குமம், அர்ச்சனை செய்து வந்தால் கடன் பிரச்சினை தீரும். வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும். தினமும் வலம்புரி சங்கில் நீர் ஊற்றி துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் - மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டும். வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும். கண்திருஷ்டி நெருங்காமல் வலம்புரி சங்கு காக்கும் என்பது நம்பிக்கை.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications