வீட்டு தோட்ட வாஸ்து டிப்ஸ்..ஆரோக்கியம் தரும் கருங்காலி, வில்வம்..எந்த திசையில் வளர்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு என்பது சுட்ட செங்கல், மணல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள், மரம் போன்ற வஸ்துகளால் இணைந்து கட்டப்பட்ட கட்டிடம் மட்டும் அல்ல. அன்பு, பாசம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, பல உயிர்களின் நேசம், பல உணர்வுகள், இறை சக்தியோடு இணைந்து இயங்கும் அற்புத ஆற்றல் வீடு என்பதாகும். வீட்டிற்குள், தோட்டத்தில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் செடிகளை வளர்த்தால் செல்வ வளத்தோடு மன நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

வீட்டு தோட்ட வாஸ்து: வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கையில் உள்ள நல்ல சக்திகளை நம் பஞ்ச பூதங்களாலான நம் வீடு உட்கிரகித்து நமக்கு இயற்கையாக பெற உதவும். மனிதன் நோயற்ற வாழ்வு வாழவும், மன நிம்மதியுடன் வாழவும் வழிவகை செய்யும் ஒரு பண்டைய கட்டிடடக் கலையே வாஸ்து சாஸ்திரமாகும். வாஸ்து சாஸ்திர முறைப்படி தோட்டம் அமைப்பதன் மூலம் கண்களுக்கு குளிர்ச்சி மற்றும் மனதுக்கு ஆனந்தம் ஏற்படுவதோடு குடும்பம் குதூகலம் அடையும். உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பல நோய்கள் மலர்கள், செடிகளால் குணமாக்கப்படுகின்றன.

Vastu tips for Veetu Thottam: Karungali tree and Vilvam Tree Vastu tips for house Garden

என்ன செடிகள் வளர்க்கலாம்: வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் இருப்பிடத்தை தேர்ந்தெடுப்பதற்கு பலர் ஆசைப்படுகிறார்கள். பலரோ வீட்டையே பசுமையாக மாற்றிக்கொள்கிறார்கள். வீட்டு தோட்டத்தில், வீட்டை சூழ்ந்திருக்கும் பகுதியில் வளர்க்கும் மரங்கள், செடிகள் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

ஈசான்யம்: ஈசான்யம் எனப்படும் வடக்கு, கிழக்கில் சிறு செடிகளும், புதர்களும் இருக்கலாம். வடக்கில் மஞ்சள் வண்ணம், கிழக்கில் இளம் பிங்க் வண்ணம், தெற்கில் சிவப்பு வண்ணம், மேற்கில் நீலம், அடர் வர்ணம் கொண்ட பூக்களை கொடுக்கும் செடிகளைப் பராமரிக்கலாம். வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ள செடிகள் வீட்டு ஜன்னல் அடி மட்டத்தை விட தாழ்வாக வளர விட வேண்டும். வடகிழக்கில் வீட்டை உரசியவாறு உள்ள மரம், செடி, கொடிகளால் வீட்டிலுள்ளோருக்கு எலும்பு தேய்வு, எலும்பு முறிவு, நரம்புத் தளர்ச்சி நோய்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. தோட்டத்தின் வடகிழக்கில் குப்பைகூளம், எரு போன்றவற்றைச் சேர்த்து வைக்கக்கூடாது. இவை நம் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிடும்.

பவளமல்லி: வீடுகளில் மந்தாரை, பவள மல்லி மரங்களை தெற்கு, மேற்கில் வளர்த்தால் முன்னோர்கள் ஆசி கிடைப்பதோடு குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும். வியாபாரிகள் கணக்கு பிசகாமல் நல்ல லாபம் ஏற்படும்; வியாபாரம் பெருகும். பவளமல்லி செடி, ராமர்பாணம் எனப்படும் ஜாதிமல்லி கொடிகளை தெற்கு, மேற்கில் அமைப்பது நல்லது.

உயரமான மரங்கள்: சீந்தில் கொடி வளர்க்க இது இதய சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுப்பதுடன் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும்.
கனமான மரம் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் அமைய வேண்டும். தெற்கு, மேற்கு பகுதிகளில் வீட்டு உயரம் வரை வளரக்கூடிய மரங்களை வளர்க்கலாம். தலைவாசல் கதவுகளுக்கு நேர் எதிரில் மரங்கள் இருக்கக் கூடாது.

கருங்காலி மரம்: ஆல், அரசு, புங்க மரம், வேம்பு, வில்வ மரம், புன்னை மரம், கருங்காலி, செம்மரம், சந்தன மரம், பவளமல்லி ஆகியவை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். இவற்றில் ஐந்து மரங்கள் சூழ்ந்திருக்கும் கட்டிடத்தை பஞ்சவடி என்பார்கள். இவை தெற்கு, மேற்கு, வடமேற்கில் வளர்க்க அதிக நன்மைகள் கிடைக்கும். வாழை மரம், எலுமிச்சை மரம், மாதுளை மரம், கொய்யா மரங்களையும் வளர்க்க ஆரோக்கியம் பெருகும்.

துளசி செடி: துளசி செடியை மாடத்தில் வைத்தும் வளர்க்கலாம். மண் பரப்பிலும் துளிர்விட செய்யலாம். தொட்டிகளிலும் வளர்க்கலாம். மருத்துவ குணங்களை தன்னகத்தே பெற்ற மூலிகை செடியாக இருப்பதால் கட்டாயம் வீட்டு தோட்டத்தில் துளசியை வளர்க்க வேண்டும்.

வில்வம்: வீட்டில் வில்வ மரம் அல்லது இலைகளை வாஸ்துப்படி பயன்படுத்தினால், வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என கூறப்படுகிறது. வீட்டில் வில்வ மரம் இருந்தால், குடும்பம் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கும் என்பது வழக்கமான நம்பிக்கை. வீட்டில் இருந்து தீய சக்திகள் நீங்கும். மகாலட்சுமியின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். வீட்டின் வடமேற்கு மற்றும் வடக்கு தெற்கு பகுதியில் வில்வ மரங்களை நடுவது குடும்பத்திற்கு நல்லது. அதன் விளைவால் உலகில் உள்ள தீய சக்திகளை நீக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கருங்காலி மரத்திற்கு எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. இதன் வேர் பட்டை ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இதனுடைய பட்டை ரத்தம் சம்பந்தமான நோய்களிலிருந்து நலம் பெற உதவுகிறது. கருங்காலியை வளையல்கள், மாலைகள், கைப்பட்டைகள் உள்ளிட்ட வடிவங்களில் பயன்படுத்தலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வல்லமை கருங்காலிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது. கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட பொருட்களை அணிந்து கொள்பவர்களுக்கு ரத்தம் தொடர்புடைய நோய்கள் குணமடையும் என்பது நம்பிக்கை. வீட்டில் கருங்காலி மரத்தை தென்கிழக்கில் வளர்க்க ரத்தம் தொடர்புடைய நோய்கள் குணமடையும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+