பழைய நியூஸ் பேப்பர் இருக்கா? மொட்டை மாடியில் இதை வெளியே போட்டுடுங்க! பணக்கஷ்டம் வரும்! வாஸ்து டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடு இருப்பது தெரிந்தாலும், அதை முதலில் நிவர்த்தி செய்துவிட வேண்டும்.. கிச்சன், படுக்கையறை, பூஜையறை போன்றவைகள் என எந்த திசையில் இருக்க வேண்டும்? என்னென்ன பொருட்களை எந்த திசையில் வைத்து பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் வாஸ்துவில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தவகையில், மொட்டை மாடி பற்றியும் வாஸ்துவில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. மேலும், மொட்டை மாடியில் சில வகையான பொருட்களை எந்த சூழ்நிலையிலும் அங்கு வைக்கக்கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் சொல்கிறார்கள். அவைகளை குறித்து இங்கு பார்ப்போம்.
வாஸ்துப்படி, வீட்டின் கூரை அல்லது மாடியை சாய்வாக இருக்குமாறு கட்ட வேண்டாம்.. அப்படி கட்டினால், அது மனச்சோர்வையும், ஆரோக்கிய பிரச்சனைகளையும் கொண்டுவந்துவிடுமாம்..

தண்ணீர் தொட்டி
வீட்டின் மொட்டை மாடியில் வைக்கும் தண்ணீர் தொட்டி, தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். அதாவது இந்த பகுதியானது வீட்டின் மற்ற பகுதிகளை விட சற்று உயரத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். எப்போதுமே ஒரு வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால், தண்ணீர் தொட்டியை தென்மேற்கு திசையில் அமைக்க வேண்டும்.
வீட்டின் மொட்டைமாடி சனி பகவானின் காரணியாக கருதப்படுகிறது. எனவே, மொட்டை மாடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. அசுத்தத்துடன் மாடி இருந்தால், அது வியாபாரத்தை பாதித்துவிடும்..
பயன்படுத்தாத பொருட்கள், உடைந்த பொருட்களை போட்டு வைக்கக்கூடாது.. இதனால் வீட்டின் நிதி நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.. வீட்டு மொட்டை மாடியில் குப்பைகளை சேகரித்து வைத்தால், எதிர்மறை ஆற்றல் பெருகி, வீட்டிற்குள் லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழையவிடாமல் தடையை ஏற்படுத்தும். இதன் காரணமாக வீட்டில் பண தட்டுப்பாடு அதிகரிக்கும்..
உடைந்த மரச்சாமான்கள்
உடைந்த மரச்சாமான்கள், நாற்காலிகள் மற்றும் மேஜைகளை வீட்டின் மேல் மாடியில் போட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும். பயனற்ற மற்றும் உடைந்த தளவாடங்கள், நாற்காலிகள் மற்றும் மேஜைகளை மாடியில் வைத்திருப்பது நல்லதல்ல. அப்படிப்பட்ட பொருட்களை மாடியில் வைத்தால் பணப்பிரச்சினைகள் வரும்.
வீடு கட்டும் கம்பங்கள், மூங்கில்களும் மேல்மாடியில் வைக்கக்கூடாது. இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை குலைந்து, மனஸ்தாபம் பெருகும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. அதேபோல, பழைய உலோகப் பொருட்கள், கம்பிகள், கருவிகள் போன்றவை மேல் மாடியில் வைப்பதை தவர்க்க வேண்டும். இதுபோன்ற பொருட்களால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
பழைய நியூஸ் பேப்பர்
அதேபோல, உடைந்த பானைகளை தரையில் வைத்தாலும், வீட்டில் அமைதியின்மை ஏற்படுமாம்.. அதே போல தரையைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் துடைப்பத்தை தரையில் வைத்தால் நிதி நெருக்கடி ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோல, மொட்டை மாடியில் துடைப்பம், பழைய நியூஸ் பேப்பர்களையும் சேர்த்து வைக்க கூடாது.. பழைய நியூஸ்பேப்பரை மொட்டை மாடியில் வைப்பது லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும்.
மொட்டை மாடியில் துணி காயவைப்பதற்கு கயிறு கட்டும்போது, ஒரு பக்கத்தில் கயிற்றின் மூட்டையை விட்டுவிடக்கூடாது.. காரணம், கயிற்று மூட்டையை வைப்பது அபசகுணமாக கருதப்படுகிறது..
துருப்பிடித்த இரும்புப் பொருட்களை மொட்டை மாடியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றலை ஈர்த்துவிடும்.. இதனால் நிதி சிக்கல்களும் வீட்டில் அதிகமாகும்..
துளசி, சாமந்தி
பலர் வீட்டின் மொட்டை மாடியில் செடிகளை வளர்ப்பார்கள். இதில், துளசி, சாமந்தி, அல்லி, புதினா, மஞ்சள் போன்ற செடிகளை வைப்பதாக இருந்தால், அதை வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வைக்க வேண்டும். நீல நிற பூக்களை தரும் செடிகளாக இருந்தால், அவைகளை வடக்கு திசையில் நட்டுவைத்து வளர்க்கலாம்..
வெள்ளை நிற பூக்களைத் தரும் மல்லிகை செடியை வைப்பதாக இருந்தால், அதை மேற்கு திசையில் வைக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும், ரோஜாவை தவிர, முட்கள் நிறைந்த செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படுவதுடன், குடும்பத்தில் உள்ளவர்களின் அமைதியும் குலைந்துவிடும்.












Click it and Unblock the Notifications