தங்க நகைகளை..இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..அள்ள அள்ள குறையாத செல்வம் சேரும்..வாஸ்து டிப்ஸ்
சென்னை: தங்கமும் வெள்ளியும் மதிப்பு மிக்க உலோகங்கள். குருபகவான், சுக்கிரபகவானின் ஆசி இருந்தால் தங்கமும், வெள்ளியும் தானாக சேரும். ஒருசிலர் வீடுகளில் தங்கம் வாங்கினால் தங்கவே தங்காது. அடகு கடைக்கு போய்விடும். சிலர் வீடுகளில் தங்க நகைகள் திருடு போகும். தங்கத்தையோ பணத்தையோ சரியான இடத்தில் சேகரித்து வைத்தால் மேன்மேலும் பெருகும் செல்வ வளமும் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
தங்கம் வாங்க நல்ல நாட்கள், நல்ல நேரம் உள்ளது போல தங்க நகைகளை நகை பெட்டகத்தில் வைக்கும் இடமும் சரியான நல்ல இடமாக இருக்க வேண்டும். கண்ட இடங்களில் நகைகளை கழற்றி வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அந்த நகை நம்மிடம் தங்காமல் போய்விடுமாம்.
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், ஐந்தாம் வீட்டில் உள்ள கிரகம் இரண்டாம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.
மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளி நகை வாங்கலாம். ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளி நகை வாங்கலாம். மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு,திங்கள், புதன் நகை வாங்கலாம். சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளியும், கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் துலாம் ராசிக்காரர்கள் திங்கள் வெள்ளியும் தங்கம் வாங்கலாம்.
விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமையும், கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும் மீனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்க நல்ல நாட்கள். இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
தொழில் முதலீட்டுக்காக நகைகளை வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை நாட்களில் தங்கம் வாங்கலாம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது. நாம் வாங்கும் தங்கத்தை வைக்கும் பெட்டி, பீரோ போன்றவைகளை நாம் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு மூலையில் உள்ள அறையில் கிழக்கு, வடக்கு நோக்கிய திசைகளில் நகை வைக்கும் பீரோ அல்லது பெட்டகத்தை வைக்க வேண்டும். பொதுவாக தென்மேற்கு மூலையில்தான் பணம், நகை வைப்பதற்கான பீரோவை, பெட்டகத்தை வைக்க வேண்டும். தங்கம், வெள்ளி வைக்கும் அறைக்கு இளம் மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கலாம். நாம் நகை வைக்கும் பெட்டகம் இளம் மஞ்சள் நிறத்தில் இருப்பது சிறப்பானது.
தங்க நகைகளை ஒருபோதும் கிச்சனில் உள்ள அரிசி, பருப்பு, அஞ்சறை பெட்டிகளில் வைக்கக்கூடாது. அடுப்பங்கரையில் அக்னி மூலையில் வைக்கும் தங்க நகைகள் ஒருபோதும் பெருகாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அடுப்பங்கரையில் சேமித்து வைக்கும் நகைகள் விரைவில் அடகுக்கடைக்கு போகும் அல்லது திருடு போக வாய்ப்பு உள்ளது. அதே போல வட மேற்கு மூலையில் உள்ள அறையிலும் தங்க நகைகளை சேமித்து வைக்கக் கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications