வாஸ்து டிப்ஸ்.. கண்ணாடி.. மகாலட்சுமியின் அம்சம்.. தெரியாமல் செய்யும் தவறால் தலைமுறையும் பாதிக்கும்
சென்னை: நம்முடைய வீட்டில் கண்ணாடி திடீரென உடைந்து சில்லு சில்லாக சிதறி விடும். இது நல்லதா? கெட்டதா, ஏதேனும் அசுப காரியம் நடைபெறுவதற்கான அறிகுறியாக இருக்குமோ என்று பலரும் பதற்றப்படுவார்கள். கண்ணாடி உடைவதால் என்ன நடக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
நம்முடைய இந்து சாஸ்திரத்தில் சகுனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். நாம் வெளியே கிளம்பும் போது நல்ல காரியத்திற்கு செல்லும் போது பூனை குறுக்கே போகக்கூடாது என்று நினைப்பார்கள். நிறைகுடம் எதிரே வந்தால் நாம் செல்லும் காரியம் சுபமாக நடக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. இன்னும் எத்தனையோ சகுனங்கள் பற்றி சகுன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது கண்ணாடி.

கண்ணாடி மகாலட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது. நம்முடைய வீட்டில் உள்ள கண்ணாடியை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சிலர் வீட்டில் கண்ணாடி அழுக்கடைந்து காணப்படும். சிலர் ரசம் போன பழைய கண்ணாடியை கூட பயன்படுத்துவார்கள். எப்போதுமே நாம் பழைய அழுக்கான உடைந்து போன கண்ணாடியை முகம் பார்க்க பயன்படுத்தக்கூடாது.
நம்முடைய வீட்டில் சதுரமான அல்லது செவ்வகமான கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வட்ட வடிவத்தில் உள்ள அல்லது நீள் வட்ட வடிவத்தில் உள்ள கண்ணாடிகளை பயன்படுத்தக்கூடாது. அது நேர்மறை ஆற்றலை குறைத்து எதிர்மறை ஆற்றாலை அதிகரித்து விடும்.
நம்முடைய வீட்டில் நாம் பயன்படுத்தும் கண்ணாடி எந்த சூழ்நிலையிலும் உடையக்கூடாது. அது நல்லதல்ல. நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் ஏன் சில நேரங்களில் உயிரிழப்பை கூட அது ஏற்படுத்தும் என்கின்றனர். பொதுவாக நாம் நம்முடைய வீட்டில் உடைந்த பொருட்களை வைத்திருக்கக் கூடாது. அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
ஒரு சிலர் கட்டிலில் கண்ணாடி வைத்திருப்பார்கள். இது சரியானதல்ல. கணவன் மனைவிக்கு இடையே ஓயாத சண்டை வந்து கொண்டே இருக்கும். எனவே கட்டிலில் கண்ணாடி வைப்பதை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொருவரின் படுக்கையறையில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி உடைந்தாலோ அல்லது விரிசல் ஏற்பட்டாலோ நீங்கள் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும். பொதுவாக உடைந்த கண்ணாடியை எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக்கூடாது. அதை குப்பையில் போட்டு விட வேண்டும் இல்லாவிட்டால் அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
கண்ணாடி உடைந்து போனாலோ, ஜன்னல் கண்ணாடி உடைந்து போனாலே அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். சிலருடைய வீட்டில் ஜன்னல் கண்ணாடி காற்று வேகமாக வீசும் போது உடைந்து போகும். அந்த கண்ணாடியை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் பொருளாதார நஷ்டத்தை சந்திக்கப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
நம்முடைய வீட்டின் கதவு, ஜன்னல்களில் அழகுக்காக வைக்கப்பட்டுள்ள கண்ணாடி உடைந்தால் அதை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் நிதி சிக்கலை சந்திக்கப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும். சிலர் சாமி படங்களுக்கு கண்ணாடி பிரேம் போட்டிருப்பார்கள். அந்த படங்கள் எதிர்பாராத விதமாக உடைந்து விடும். அந்த படங்களை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவதுதான் நல்லது. கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள் அழகாக இருக்கிறதே என்று உடைந்த பின்னாலும் பயன்படுத்தக்கூடாது அது நமது தலைமுறையையும் பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications