பாசிட்டிவ் எனர்ஜி.. வீட்டின் தென்மேற்கு திசையில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: வடகிழக்கில் கிணறு, சம்ப், போர்வெல் உள்ள வீட்டில் இறைவன் நிச்சயம் குடியேறுவான். உங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. தென்மேற்கு திசையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திர விதி: அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வசிக்கும் வீட்டில் உள்ள மேடு பள்ளங்களே ஒருவரின் ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கின்றன. வாஸ்து சரியாக இருந்தால் வெற்றியும் தேடி வரும். ஒருவரை கோடீஸ்வரர் ஆக மாற்றுவதே மேடுபள்ளங்கள் என்கின்றன. வீட்டின் வடகிழக்குப் பகுதியான ஈசான்யம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இந்த தென்மேற்கு திசை எனப்படும் நைருதி மூலை முக்கிய இடம் வகிக்கிறது. வடகிழக்கு எவ்வளவு வெட்ட வெளியாய் இருக்க வேண்டுமோ அதேபோல் தென்மேற்கு மூடப்பட்டிருக்க வேண்டும் என்கிறது வாஸ்து சாஸ்திர விதி.

சரியான வாஸ்து: இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைவரும் வாஸ்து நாளில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும்.
ஆகம விதி: தென்மேற்கு திசை மூலம் எதிர்மறை சக்திகள் என்பதால் தென் மேற்கு திசையில் வீட்டின் தலைவாசல் கதவு இருக்க கூடாது. பெரிய ஜன்னல், திறப்பு எதுவும் தென்மேற்கு திசையில் வைக்கக்கூடாது என்பது வாஸ்து சாஸ்திர விதி. தென்மேற்கு திசை எனப்படும் நைருதி மூலை சரியான வாஸ்துபடி அமைக்கப்படுவது அவசியம்.
பொதுவாக வீட்டின் தென்மேற்கினை உயரமாகவும் வடகிழக்கு பகுதியை தாழ்வாகவும் திறந்த வெளியாக வைக்கவும் நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். வீட்டின் வட கிழக்கு திசையில் செருப்புகளை வைக்கக் கூடாது. வடகிழக்கு திசையில் செருப்புகளை வைப்பது இறைவனை அவமதிப்பது போன்றதாகும். எனவே அந்த இடத்தில் மறந்து கூட செருப்புகளை கழற்றி வைக்காதீர்கள்.
வீட்டில் வடக்கு திசையை சுத்தமாகவும் அழகாகவும் வைக்க வேண்டும். குழந்தைகள் வடக்கு திசை நோக்கி அமர்ந்து படிக்கும் வகையில் அவர்களின் படிப்புக்கான மேஜையை அமைக்க வேண்டும். மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
வீட்டின் தெற்கு, மேற்கு பகுதிகளில் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.
பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். ஈசான்ய மூலையில் மாலை நேரத்தில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும். ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கட்டக் கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்து வைக்க் கூடாது.
ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் அது அந்த வீட்டின் உரிமையாளருக்கு கெடுதியை உண்டாகும். வீட்டில் உள்ள சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும். நைருதி எனப்படும் கன்னி மூலை உயரமாகவும்,ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.
ஒரு வீட்டின் தெற்குப் பகுதியில் தெற்கும், தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் இருந்தால் பணம் தாராளமாக வரும். நீண்ட ஆயுள், சந்தானம் விருத்தி ஏற்படும். தென்மேற்கும் மேற்கும், உயரமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும். ஒருவரின் வீட்டில் தென்மேற்கு பகுதியில் வாஸ்து தவறாக இருந்தால் துர்மரணம், புற்றுநோய் பாதிப்பினால் மரணம் உண்டாகும். உங்களுடைய வீடு, கடைகளில் , தொழில் செய்யும் இடங்களில் வாஸ்து எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்யுங்கள்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications