வாஸ்து டிப்ஸ்.. உங்க வீட்டுல செல்வம் மலை போல குவியணுமா? வாழை மரத்தை இந்த திசையில் வைத்து பாருங்கள்
சென்னை: வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டும் என்பதற்காக சுப காரிய நிகழ்ச்சிகளின் போது வீட்டின் முன்பாக வாழை மரம் கட்டுவார்கள். நம்முடைய வீட்டில் வாழை மரத்தை வளர்த்தால் செல்வ வளம் பெருகும் ஐஸ்வர்யம் அதிகரிக்கும். வாழை மரத்தை எந்த திசையில் வளர்த்தால் நன்மைகள் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
வாழை மரம் மகாவிஷ்ணு, மகாலட்சுமி, குரு பகவானுடன் தொடர்புடையதாக நம்பப்படுவதால், வாழை மரத்தை முறையாக பராமரிக்கவில்லை எனில் தொழில் நஷ்டத்திலும் கடன் பிரச்சினையிலும் தள்ளிவிடும். வாழை வழிபாட்டுக்கும் சில முறைகளும், விதிகளும் இருக்கின்றன. வாழைமரம் வைத்துள்ள இடத்தை எப்போதுமே தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இந்த மரமே வியாழன் கிரகம், விஷ்ணு ஆசியில் வளர்கிறது என்பது ஐதீகம்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையில் எழுந்து நீராடி மஞ்சள் வஸ்திரம் உடுத்தி வாழை மரத்தை வணங்குங்கள். வீட்டில் வாழை மரம் இருந்தால் குரு தோஷம் நீங்கிவிடும். திருமணத்தில் இருக்கும் தடைகளை நீக்கிவிடும். வாழைமரத்தின் முன்பு நெய் தீபம் ஏற்றி வாழை மரத்தை ஒன்பது முறை சுற்றி வாருங்கள். குரு பகவானின் மந்திரங்களை பாராயணம் செய்யுங்கள்.
வாழை மருத்துவ குணம் கெண்டது. மருத்துவத்தில் மட்டுமின்றி வாழையின் எல்லா பாகங்களும் நமது அன்றாட வாழ்வில் பல வகைகளிலும் பயன்படுபவை ஆகும். வாழைப்பழம், மிக முக்கியமான பழ வகையாகும், முக்கனிகளுள் ஒன்று. வாழைப்பழம் இன்றி செய்யப்படும் சடங்கு முழுமை பெறுவதில்லை. முகம் பொலிவு பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் இலையில் சாப்பிடுவது மிகுந்த பயன் தரும். பண்டிகைகள், விழாக்கள், சடங்குகளின்போது, வாழை இலையில் பரிமாறப்படும் சாப்பாடே சிறப்பிடம் வகிக்கின்றது.
வாஸ்து குறிப்புகளின்படி, உங்கள் வீட்டில் வைக்கும் வாழை மரத்தை வடகிழக்கு திசையில் வையுங்கள். தென்கிழக்கு, தெற்கு அல்லது மேற்கு ஆகிய திசையில் வைக்கவேகூடாது. வடக்கு திசையை ஆளுபவர் வியாழன் பகவான் ஆவார். மகாவிஷ்ணு பனைமரத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
வாழை மரம் நடுவதற்கு சரியாக அமையவில்லை என்றால், கிழக்குப் பகுதியில் நடலாம். வாழை மரத்தின் அருகில் துளசி செடியை நட்டு வளர்ப்பது சிறப்பு. பகவான் விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தது துளசி செடி எனவே, வீட்டில் வாழையை நட்டால், அதற்கு அருகில் துளசியை நடுவது சிறப்பானது. இதனால் அந்த வீட்டுக்கும், வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் விஷ்ணுவின் அருள் நிரந்தரமாக கிடைக்கும். மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
வாழை செடியை வீட்டின் முன்புறம் அல்ல, பின்புறம் தான் நட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாழைக்கு அருகில் முள் செடியை நடக்கூடாது. செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாழை மரத்தை வெட்டக்கூடாது. அதை போல பௌர்ணமி அமாவாசை நாட்களிலும் வாழை மரங்களை மறந்தும் வெட்ட கூடாது. மேலும், வாஸ்து தோஷம் ஏற்படாமல் இருக்க வாழை மரத்தைச் சுற்றி தூய்மையுடன் இருக்க வேண்டும். வாழை மரத்துக்கு அசுத்தமான நீரை ஊற்றக் கூடாது. வாழை மரத்துக்கு குளியலறை கழிவுகள், பயன்படுத்தப்பட்ட தண்ணீரை விடக்கூடாது.
வாழை மரத்தை நட்டு வளர்ப்பது பெரிய விசயமில்லை. அதை வாஸ்து படி பராமரிக்க வேண்டும். எனவே வாஸ்து சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள விதிகளை கடைபிடித்து வீட்டில் வாழை மரத்தை வளர்த்தால் நம்முடைய குடும்பத்தில் செல்வ செழிப்பு ஏற்படும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.


Click it and Unblock the Notifications
