உங்க கடையில் பணப்பெட்டியை இப்படி வைத்தால் பண மழை பொழியுமாம்.. அலுவலகம் வாஸ்து டிப்ஸ்
சென்னை: வியாபாரம் செய்யும் இடத்திலோ, அலுவலகத்திலோ மிகப்பெரிய கடைகளிலோ நாம் பணம் வைக்கும் பெட்டியை சரியான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் பணம் மழையாக பொழியும் கல்லா பெட்டி நிறையும். இல்லாவிட்டால் கல்லா பெட்டியில் பத்து ரூபாய் கூட தங்காது. பண வருமானம் அதிகரிக்க வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
மகாலட்சுமி அருள்: வீடோ, கடையோ மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும். ஒரு சிலர் தொழில் தொடங்கிய நேரத்தில் வியாபாரம் அள்ளும். வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரிக்கும். ஒரு சிலரது கடையில் ஒருவர் கூட எட்டிப்பார்க்க மாட்டார்கள் எல்லாம் கடை திறந்த நேரம். கடையில் இருக்கும் வாஸ்துதான். கடையில் எந்தெந்த பொருட்களை எப்படி வைக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

குபேரன் அருள்: வடக்கு திசை குபேரன் அருள் கொண்ட திசை. பொதுவாகவே வடக்கு வாசல் கொண்ட கடையாக இருந்தால் அந்த கடையில் வளமான வாஸ்து இருக்கும். வருமானமும் அதிகம் இருக்கும். எல்லோருக்குமே வடக்கு திசை கொண்ட கடை அமையாது என்பதால் பணம் வைக்கும் பெட்டியை நாம் வடக்கு திசை பார்த்து வைக்க வேண்டும். பிரபல கடைகளைப் போல நமது கடையில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கவில்லையே என்று ஒருசிலர் எண்ணுவார்கள். இதற்கு காரணம் முழுக்க முழுக்க அந்த கடையின் வாஸ்து அமைப்புதான். கிழக்கு பார்த்த கடைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது, கிழக்கு பார்த்த கடைகள் கதவு என்பது வடகிழக்கில் வைத்திருக்க வேண்டும்.
சாமி படம்: எந்த ஒரு கடையாக இருந்தாலும் சதுரமாகவோ, செவ்வக வடிவமாகவோ இருக்க வேண்டும். கடையில் சாமி படம் வைக்கும் போது ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

பணப்பெட்டி: கடையிலோ, வியாபார ஸ்தலத்திலோ பணம் வைக்கும் பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது பண வருமானத்தை அதிகரிக்கும். கல்லாபெட்டியை தென்மேற்கு மூலையில் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு. வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் வரவுக்கு மிறிய செலவு வரும். தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் அக்கினியில் போட்ட மாதிரி உடனே கரையும். பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும். அதில் வைத்து எடுக்கிற அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது.
கிழக்கு பார்த்த கடை: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கம் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய திசைகளில் அமரக்கூடாது.
கேசியர்: வடக்கு பார்த்த கடையாக இருந்தால் வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். கேசியர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமரக் கூடாது.

வடமேற்கு மூலை: தெற்கு பார்த்த கடையாக இருந்தால் வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் கண்டிப்பாக அமரக் கூடாது.
மேற்கு பார்த்த கடை : வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கை புறம் பண பெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக் கூடாது.
திருஷ்டி: எந்த திசை பார்த்த கடையாக இருந்தாலும், அந்த கடையின் வடகிழக்கு பகுதி என்பது, அதிக உயரமில்லாத, ஒரு பள்ளம் சார்ந்த நிகழ்வாக இருக்க வேண்டும். அமாவாசை தினங்களில் கடைகளுக்கு திருஷ்டி சுற்றி போடுவதால் கடைகளின் வாஸ்து குறைபாடுகள் நீங்கி வியாபாரம் செழிக்கும் லாபம் அதிகரிக்கும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications