உங்க வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கா?.. முருகனின் வாகனம் மயில் இறகை இப்படி வைத்து பாருங்கள்
சென்னை: தமிழ் கடவுள் முருகப்பெருமானின் வாகனம் மயில். அந்த மயிலை நாம் புகைப்படமாகவோ அல்லது சிலையாகவோ வீட்டில் வாங்கி வைத்திருப்போம். இது நமது வீட்டிற்கு அழகாக இருப்பதோடு ஆன்மீக ரீதியாக நேர்மறை சக்தியை அதிகரிக்கும். மயில் தோகை வாஸ்து தோஷத்தையும் கிரக தோஷத்தையும் போக்கக்கூடிய ஒரு பொருளாக உள்ளது. அதை நம்முடைய வீட்டில் எங்கே எப்படி வைத்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
மயிலிறகு: தைப்பூசம் திருநாளான இன்றைய தினம் முருகனுக்கு பலரும் காவடி எடுத்து வழிபட்டு வருகின்றனர். முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கும் பொழுது மயிலிறகு தான் பயன்படுத்துவார்கள். சிலர் மயிலிறகில் விசிறி வாங்கி பயன்படுத்துவார்கள். மயிலிறகை நம்முடைய வீட்டில் சில இடங்களில் வைப்பதன் மூலம் நமக்கு நேர்மறை எண்ணங்களும் நேர்மறை சக்திகளும் அதிகரிக்கும்.

நேர்மறை ஆற்றல்: நம்முடைய வீடு நேர்மறை ஆற்றல்கள் நிரம்பியதாக இருக்க வேண்டும். எனவே நம் வீட்டிற்கு முன்பாக நிலை வாசலுக்கு எதிராக மயிலிறகை வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஒன்றை மட்டும் வைக்காமல் நான்கு அல்லது 5 மயிலிறகினை சேர்த்து வைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எதிர்மறை ஆற்றலை வீட்டிற்கு நுழைய விடாமல் தடுக்கும்.
பணப்பெட்டி: நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரைய செலவாகிறதா? நாம் அதற்கு பணம், நகை வைக்கும் அலமாரியில், பிரோவில் மயிலிறகை வைக்க வேண்டும். இதன் மூலம் வருமானம் கூடும் செல்வம் பெருகும். பணம், நகை அலமாரியில் ஒரு மயிலிறகை வையுங்கள். பணம் வீட்டில் நிலைக்கவும் செய்யும்.
மதிப்பு கூடும்: மயிலிறகு அழகானது மட்டுமல்ல நமது மதிப்பையே அழகாக்கும். அலுவலத்தில் ஏதாவது பிரச்சினை என்றாலோ, உங்களின் மதிப்புக்கு ஏதாவது பங்கம் வந்து விட்டதாக நீங்கள் நினைத்தாலோ உங்களுக்கு எளிமையான பரிகாரம் மயிலிறகுதான். வீட்டில் மயிலிறகை வைத்து அதை நீங்கள் பார்த்து விட்டு வெளியே சென்றால் போதும் உங்களின் மீதான மதிப்பு மரியாதை சமூகத்தில் கூடும். மயிலிறகை சின்னதாக நமது ஹேண்ட்பேக், பர்ஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் அது நல்ல பலனை தரும்.
நினைவாற்றல் கூடும்: நம்முடைய சிறு வயதில் புத்தகத்திற்குள் சின்னதாக ஒரு மயிலிறகை வைத்து அது குட்டிப்போடுமா என்று பார்த்துக்கொண்டிருப்போம். அப்படி அடிக்கடி பார்க்க பார்க்க நமக்கு நேர்மறை சக்தி அதிகரித்து படிப்பின் மீதான நாட்டம் கூடும். மயிலிறகை பார்க்கும் போதே புத்தகத்தினை புரட்டிப் பார்த்து படிப்போம். படிப்பிலும் கெட்டிக்காரத்தனம் அதிகரித்து இருக்கும்.
படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் மயிலிறகுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் மயில் இறகுகளை வைக்கலாம். குழந்தைகள் படிக்கும் ஸ்டடி ரூமில் மயிலிறகை வைத்து தினமும் வணங்கிவிட்டு படிக்கத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
வாஸ்து தோஷம் நீங்கும்: மயிலிறகு வாஸ்து தோஷங்களை மட்டுமல்லாது கிரஹ தோஷங்களையும் நீக்கும். மயிலிறகை படுக்கை அறையில் நாம் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நெருக்கமும் கூடும். தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும்.
பூஜை அறையில் மயிலிறகு: நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு அறையில் வாஸ்து குறைபாடு இருந்தால் அந்த வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கு மயிலிறகு பயன்படும். எட்டு மயிலிறகை எடுத்து ஒன்றாகச் சேர்த்து ஒரு வெள்ளை நிறக் கயிற்றினால் கட்டி பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். " ஓம் சோமாய நமஹ" என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வர வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும். எல்லாமே நம்பிக்கைதான். நம்பிக்கையோடு நாம் செய்யும் எந்த பரிகாரமும் நமக்கு நன்மையை கொடுக்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications