சிரிக்கும் புத்தர்.. மனசே லேசாகும்.. வாழ்க்கையை செழிப்பாக்கும் குபேரன்.. வளம் தரும் வாஸ்து டிப்ஸ்

மகிழ்ச்சியோடு இருந்தாலே அன்னை மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்று சொல்வார்கள். அழுகையும் ஒப்பாரியும் கேட்கும் வீடுகளில் மகாலட்சுமியின் அருள் இருக்காது. சண்டை சச்சரவாக இருக்கும் வீட்டிற்குள் ஒருபோதும் செல்வத்திற்கு அதிபதி குபேரனின் ஆசி இருக்காது என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அப்படித்தான் நாம் சிரித்து கொண்டு இருக்கும் புத்தர் பொம்மையை பார்க்கும்போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர் நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும். புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். இன்றைக்கும் பலரது வீடுகளில் ஏதாவது ஒரு இடத்தில் சிரிக்கும் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கும்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு சீன ஜென் துறவியை அடிப்படையாகக் கொண்டு சிரிக்கும் புத்தரின் சிலைகள் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. துறவியின் பெரிய வயிறு மற்றும் புன்னகை பூத்த முகத்தின் காரணமாக அவரை சிரிக்கும் புத்தர் என்று மக்கள் அழைத்தனர். சீனா மற்றும் ஜப்பானில் உள்ள பல கோவில்கள், உணவகங்கள் மற்றும் வீடுகளை சிரிக்கும் புத்தரின் சிலைகள், படங்கள் படம் அலங்கரிக்கிறது.
புராணத்தின் படி, சிரிக்கும் புத்தரின் கொழுத்த வயிற்றில் தடவினால் செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. எனவேதான் மகிழ்ச்சியோடு இருக்கும் சிரிக்கும் புத்தர் சிலையை வீடுகளில் வைத்திருக்கின்றனர். சிரிக்கும் புத்தரைப் போலவே குபேரனும் தொந்தி வயிரோடு சிரித்த முகத்தோடு இருக்கிறார். சிரிக்கும் புத்தரை குபேரனுடன் ஒப்பிடுகின்றனர் மக்கள்.
பணத்தேவை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பணம் இல்லாதவர்களுக்கு பல பிரச்சினைகள் வருகிறது. எளிமையான வாழ்க்கை வாழ அதற்கு ஏற்ப பணம் தேவைப்படும். வசதியாக வாழ்வதற்கு பணம் அதிக அளவில் தேவைப்படும். இன்றைக்கு பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. நாம் வசிக்கும் வீட்டில் வாஸ்து சரியாக இருந்தால் செல்வ நிலையை அதிகரிக்க முடியும்.
வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிய பணப்பெட்டியை திறக்கும் போது செல்வம் பெருகும். வடக்கு குபேரனின் திசை இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும் குபேரனின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நம்முடைய வீட்டில் சிரிக்கும் குபேர பொம்மையை வைத்தால் செல்வ செழிப்பு உண்டாகும். ஒரு சிலர் அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழி பட்டால் செல்வம் குவியும் என்றும் கூறப்படுகிறது.
வீட்டின் கிழக்கு திசைதான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை அல்லது சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும். வீடு மகிழ்ச்சியாக இருந்தாலே அன்னை மகாலட்சுமியின் ஆசியினால் செல்வ வளம் அதிகரிக்கும். சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறையான எண்ணங்களை நமக்குள் அதிகரிக்கும்.
குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.
எட்டு திசைகளில்,ஒன்றான வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமனம் செய்தார் பார்வதி தேவி. செல்வத்தையும்,வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன். அவரை வணங்கினால்,செல்வம் பெருகும்,வளம் கொழிக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.
குபேர பூஜையினை வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமையில் செய்யலாம். குபேர பூஜையை புதன் ஓரையில் செய்வது மிகுந்த செல்வ வளத்தினை தரும். மேலும் குபேரன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திர நாளில், வியாழக்கிழமை மாலை நேரத்திலோ வழிபாடு செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications