7 குதிரைகள் ஓடும் போஸ்டரை எந்த திசையில் வைக்க வேண்டும்? "இந்த" இடத்தில் மட்டும் மாட்டிடாதீங்க?
சென்னை: வீட்டில் செல்வம் பெருக 7 குதிரைகள் ஓடுவது போன்ற ஓவியத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது குறித்து தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இந்த குதிரை படத்தை எங்கே மாட்ட வேண்டும், எங்கே மாட்டக் கூடாது என்பது குறித்த தகவல்களும் கிடைத்துள்ளது.
இதுகுறித்து குவோரா இணையதளத்தில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஏழு குதிரைகள் ஓடும் படத்தை வீட்டின் எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும். நம்முடைய வீட்டிலும் நம்மை சுற்றியும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக் கூடிய சில விசயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்

அதில் முக்கியமானது ஏழு குதிரைகள் கொண்ட புகைப்படங்களை வீட்டில் வைப்பதன் மூலம் நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சூரிய பகவான் ஏழு குதிரை ரதத்தில் சவாரி செய்யும் படத்தை வீட்டில் வைத்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.
வீட்டில் நல்ல காரியங்கள் நடப்பதற்கு, நாம் கிழக்கு திசையை நோக்கி அந்த படத்தை மாட்டிவைக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால் வடக்குத் திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்ட வேண்டும்.
வாழ்க்கையில் பெயர், புகழ், மரியாதை பெற வேண்டுமானால் வீட்டின் தெற்கு திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்டி வைக்கலாம்.
இது உங்களுக்கு வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தைத் தரும் உங்களின் புகழும் செல்வமும் பாராட்டப்படும். கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் ஒரு ஜோடி குதிரை பொம்மைகளை மேற்கு திசையில் வைக்கலாம். இதனால் மகாலட்சுமியின் அருள் வீட்டில் தங்கும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஏழு குதிரை ஓவியங்களின் பின்னணியில் சூரியன் உதிக்கும் வகையில் இருப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இது ஒருவருடைய வாழ்க்கையில் வெற்றியையும் செல்வ வளத்தையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
சிவப்பு நிற பின்னணியோடு இருக்கக்கூடிய ஏழு குதிரைகளின் ஓவியம் செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமூகத்தில் ஒருவருக்கு மரியாதையை அதிகம் ஏற்படுத்திக் கொடுக்கும். நீல நிறப் பின்னணியில் இருக்கக்கூடிய ஏழு குதிரைகள் ஓவியம் சனி கிரகத்தை குறிக்கிறது. இது நல்லிணக்கத்தையும் அமைதியையும் அதிகரித்துக் கொடுக்கும். படுக்கையறையில் இந்த ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வைக்கக் கூடாது.
பூஜை அறை, படிக்கும் அறை, கழிப்பறையை எதிர்கொள்ளும் சுவர்கள், பிரதான கதவு ஆகியவற்றில் ஏழு குதிரை ஓவியத்தை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியானதல்ல. ஏழு குதிரைகள் அடங்கிய இந்த ஓவியத்தை உங்களுடைய வரவேற்பறையில் வைக்கலாம். இந்த குதிரைகள் தண்ணீரில் ஓடாமல் திறந்த நிலத்தில் ஓடுவதுபோல இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications