Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரபிக்கு பதில் தமிழில் ஓதவேண்டுமென கூற முடியுமா? வேதத்தை மொழிமாற்றம் செய்ய கூடாது- தருமபுரம் ஆதினம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:இறைவனால் சொல்லப்பட்டது வேதம். வேதம் நமக்கு புரிகிறதோ இல்லையோ நாம் பின்பற்ற வேண்டும் என்று தருமபுரம் ஆதினம் கூறியுள்ளார். வேதத்தில் உள்ளதை அப்படியே ஏற்றுக்கொண்டு கூற வேண்டும் அதை மாற்றுவதற்கு நமக்கு உரிமையில்லை என்றும் தருமபுரி ஆதினம் தெரிவித்துள்ளார்.

பட்டினப்பிரவேசத்திற்கு அரசு தடை விதித்தது சர்ச்சையானது தொடங்கி பிரதமர் மோடிக்கு செங்கோல் கொடுத்தது வரை தருமபுரம் ஆதினம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. நமது ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு தருமபுரம் ஆதினம் அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு தகவல்கள் மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் கூறினார்.

ஆதினம் என்பது சுவாதீனம். சொத்துக்களை பாதுகாத்தல். இறைவன் உபதேசம் செய்கின்றன மரபு,கோவில் சொத்துக்கள். இரண்டையும் பாதுகாப்பது நூற்றாண்டுகால பாரம்பரியமாக இருக்க நேற்றைக்கு மடம் ஆரம்பித்தவர்கள் எல்லாம் ஆதினம் என்று போட்டுக்கொள்கின்றனர். அப்படி போடக்கூடாது என்று நான் சொல்ல முடியாது என்றும் தருமபுரம் ஆதினம் கூறியுள்ளார்

செங்கோல் பற்றி திருக்குறள், சிலப்பதிகாரத்தில் உள்ளது. நம்முடைய மடங்களில் நமக்கு முன்னாள் செங்கோல் வரும். கட்டியம் என்று சொல்வார்கள். வைணவம் என்றால் சங்கு சக்கரம் இருக்கும். சைவம் என்றால் நந்தி இருக்கும். மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுத்தது பற்றிய ஆதாரங்கள் இல்லை. நேருவிடம் கொடுத்திருக்கின்றனர். அது நீண்ட நாட்களாக பிரபலம் இல்லாமல் இருந்தது தற்போது அதனை நாடாளுமன்றத்தில் நிறுவியுள்ளனர்.

 Vedas are word of God we have no right to change them says Dharmapuram Adheenam

செங்கோலை அரசியல் செயல்பாடாக வாங்குகின்றனரா? அல்லது ஆன்மீக செயல்பாடாக வாங்குகின்றனரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆதினம்,
பிரதமர் நடந்து கொண்ட முறை சிறப்பாக இருந்தது. அவரது இல்லத்திற்கு அனைவரையும் அழைத்து மரியாதை செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். மறுநாள் செங்கோலை வைத்து சாஷ்டாங்கமாக வணங்கினார். இதுவரை எந்த பிரதமரும் அப்படி செய்யவில்லை. ஆதினங்கள் அனைவரும் அட்சதை தூவி ஆசி கொடுத்தோம்.

செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. அந்த முறை சிறப்பானது. தமிழ் சங்கமத்திற்கு நான் செல்லவில்லை. அன்றைய தினம் பிரதமர் மோடி தருமபுரம் ஆதினத்தின் சிறப்புகளை பேசினார். செங்கோல் கொடுத்த போது கூட தருமபுரம் ஆதினத்தின் சிறப்புகளை பிரதமர் தெரிவித்தார். சமயம் மட்டும் பரப்பவில்லை. பொருளாதார நிலை பற்றியும் தெரிவித்தார். இன்றைக்கு மணி டிரான்ஸ்பர் போல அன்றைக்கு தருமபுர ஆதின மடத்தில் பணத்தை கட்டினால் காசியில் போய் பெற்றுக்கொள்ளலாம். வழிப்பறி கொள்ளையர்களிடம் பணத்தை பறி கொடுப்பதில் தப்பிக்க அன்றைய காலத்திலேயே பணம் பரிமாற்ற முறை இருந்ததை பிரதமர் அறிந்து வைத்திருக்கிறது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

செங்கோல் வைத்து ஆட்சி செய்ய இது மன்னராட்சி கிடையாது மக்களாட்சிதான். செங்கோல் நல்லவைகளை செய்ய வேண்டும் என்றும் ஆதினம் கூறினார். நந்தி என்பது தர்மதேவதை. நல்ல வழிக்கு செலுத்த வேண்டும். அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்று பிரிந்திருக்க கூடாது என்றும் ஆதினம் தெரிவித்தார்.

பட்டின பிரவேசத்தை ஆங்கிலேய அரசாங்கமோ, காங்கிரஸ் அரசாங்கமோ, கருணாநிதி காலத்திலோ தடை செய்யவில்லை. பட்டின பிரவேசத்தை தடை செய்ய வேண்டும் என்று பெரியாரிடம் போய் சிலர் கேட்டதற்கு தமிழன் பல்லாக்கில் வரவேண்டும் என்றுதான் போராடினோம் நீங்களும் போய் பல்லாக்கு சுமக்க வேண்டும் என்று சொன்னார் பெரியார்.

மு.க ஸ்டாலின் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்ட போது நாங்கள் இந்த விளக்கங்களை அளித்தோம். நாங்கள் அளித்த விளக்கத்தை ஏற்று முதல்வர் பட்டினப்பிரவேசம் நடத்த உத்தரவிட்டார் நீதிமன்றத்திலும் எங்களுக்கு சாதகமாக உத்தரவிட்டார். நான் விமானம், சொகுசு வாகனம், பாதயாத்திரை, பல்லாக்கு என பயணம் செய்திருக்கிறேன். நல்லவையும் தீயவையும் ஒரே நோக்கத்தோடு என இரண்டடையும் ஒரே நோக்கத்தோடு பார்க்கிறோம்.

தென் தமிழ்நாடு முழுக்க சமஸ்கிருத வேத மறுப்பில் இருந்துதான் உருவாக்கினார்கள். இந்த வேத மறுப்பில் தமிழ் மெய்யியல் இப்போதும் உறுதியாக இருக்கிறார்களா என்று கேட்டதற்கு பதில் சொன்ன ஆதினம், வேதத்தை விட்டால் அறமில்லை என்று திருமூலம் கூறியுள்ளார்.

வேதம் சொல்லியே ஒரு நாயன்மார் இருக்கிறார். சிவாச்சாரியார்தான் பூஜை செய்ய வேண்டும் என்று சேக்கிழார் சொல்கிறார். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆனவையெல்லாம் சிவ வேதியர்கே உரியது என்று சேக்கிழார் சொல்கிறார். சேக்கிழாரை விட நாம் ஒன்றும் படித்தவர்கள் அருளாளர்கள் இல்லையே. திருமுறை படித்து திருமுறை சொல்பவர்கள் சேக்கிழார் சொல்வதையும் நாயன்மார்கள் சொல்வதையும் நாம் பின்பற்ற வேண்டும்.

இறைவனால் சொல்லப்பட்டது வேதம். வேதம் நமக்கு புரிகிறதோ இல்லையோ நாம் பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு விமானத்தில் செல்லும் போது அதைப்பற்றி எல்லாம் தெரிந்தால்தான் நான் விமானத்தில் செல்வேன் என்று சொல்ல முடியுமா? அதுபோல வேதம் நம்முடைய நாட்டில் இருக்கிறது. முஸ்லீம் பள்ளிவாசல்களில் அரபி மொழியில் ஓதுகின்றனர் அதை தமிழில்தான் ஓத வேண்டும் என்று சொல்ல முடியுமா? முடியாது இல்லையா? பிறகு ஏன் நம்மிடம் மட்டும் போராடுகின்றனர்.

அரசு எப்படி அதற்கு இடம் கொடுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார் ஆதினம். வேதம் என்பது யார் காலத்தில் வந்தது என்று சொல்ல முடியாது இறைவனால் சொல்லப்பட்டது. "வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி பூதம் சூழ பொலிய வருவார் புலியினுரித்தோலார்" என்று ஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

இறைவனுக்கு நாம் முத்திரைகள் தருகிறோம் இது தமிழில் இல்லை. வேதத்தில் இருப்பதை மொழி பெயர்க்கின்றனர். ஏன் மொழி பெயர்க்க வேண்டும்? தமிழில் இருந்தால் அதையே சொல்லலாமே. இருப்பதை மாற்றுவதற்கு நமக்கு உரிமையில்லை. கருணாநிதி காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வந்த போது கூட பிராமணர்களுக்கும் ஆதி சைவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் கூறினோம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் கருணாநிதி என்றும் ஆதினம் சொன்னார். யாரையும் துன்புறுத்த நினைக்க மாட்டார்.

சைவம் இந்து மதத்திற்குள் வராது அது தனிப்பட்ட வாழ்வியல்.. தனித்துவமானது என்று தற்போது பேசத் தொடங்கியுள்ளனரே என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த ஆதினம், சைவம் என்பது அனைத்திற்கும் தலைமையானது. சிவத்தோடு சம்பந்தமானது என்று திருமூலர் கூறியுள்ளார். இது எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாது. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. சிவபூஜை செய்யும் போதே அனைவரையும் சேர்ந்து வழிபடுகின்றோம் என்றும் தருமபுரம் ஆதினம் கூறினார்.

பல நாடுகளிலும் சிவ ஆலயங்கள் எழுப்பி சிவ லிங்கம் வைத்து வழிபடுகின்றனர். ஹவாய் ஆதின மடம் உள்ளது 200 சைவ துறவிகள் உள்ளனர். மெக்கா, மதினாவை கூட சைவ சமயமாக ஏற்றுத்தான் அப்பர் சாமிகள் பாடியுள்ளார் என்றும் தருமபுரம் ஆதினம் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+