கிச்சனில் குபேர பொம்மையை வைக்கலாமா? வீட்டில் குபேர பொம்மையை எந்த திசையில் வைத்தால் நன்மை? ஹேப்பிமேன்
சென்னை: செல்வத்தின் கடவுளான குபேரரின் உருவத்தை குறிக்கும் சிலைகள் மற்றும் பொம்மைகள், ஆன்மீகத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.. இந்த பொம்மைகளை வீட்டில் வைப்பதால், நிதி நெருக்கடி தீர்ந்து வளமும், செழிப்பும், அதிகரிக்கும் என்பது நம்பப்படுகிறது.. நேர்மறை ஆற்றலை பரப்பக்கூடிய இந்த குபேர பொம்மைகளை பூஜையறையில் வைக்கலாமா? சிரிக்கும் குபேரர் பொம்மையால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கவும் குபேரன் பொம்மையை எந்த திசையில் வைக்கலாம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
மகிழ்ச்சி, செல்வம், செழிப்பின் சின்னமாக கருதப்படும் நம்மூரின் குபேர பொம்மைகளை உலக நாடுகளில் "ஹேப்பி மேன்" (Laughing Buddha) என்று அழைக்கிறார்கள்.. சிரித்து கொண்டேயிருக்கும் இந்த பொம்மையை பார்க்கும்போதே, பிறருக்கும் சிரிப்பு வரும்.. மனதிலுள்ள பாரங்கள், அழுத்தங்கள் நீங்கும். எனவேதான் இந்த குபேர பொம்மைகளை வீட்டில் வைக்கிறார்கள்.

மகாலக்ஷ்மி தேவியின் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்து நமக்கு தருவதுதான் குபேரனின் செயல். எனவே வீட்டிலுள்ள பூஜை அறையில் குபேரரை முறையாக வழிபட்டாலே, நம்முடைய வீடும் வளமாக காணப்படும்.. அதேபோல, குபேரரை எப்படி வழிபட்டாலும் வடக்கு நோக்கியே வணங்க வேண்டும்.
குபேர பொம்மைக்கு உரிய திசை
இந்த பொம்மையை வீட்டில் வைத்திருப்பதால், குடும்பத்திலுள்ள குழப்பங்கள், சண்டைகள், சச்சரவுகள் தீரும்.. உறவுகள் வலுப்படும்.. எப்பேர்ப்பட்ட பிரச்சனையை எதிர்நோக்குவதற்கான, தைரியமும், நம்பிக்கையும் மனதில் தோன்றும்.. கடன் பிரச்சனையும் விலகும்..
எனவே, இந்த குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.. இதனால் பாசிட்டிவ் எண்ணங்களை மனதிற்குள் வரும். அதிலும், தென்கிழக்கு திசையில் வைக்கும்போது, எதிர்பாராத அதிர்ஷ்டம் கிட்டும் என்பார்கள்.. குபேர பொம்மையை வீட்டில் எங்கேயும் வைக்கலாம்..
சமையலறையில் வைக்கலாமா
ஆனால், வீட்டின் பிரதான கதவுக்கு முன்பு அதாவது எல்லாரும் பார்க்கும்படியாக இந்த குபேர பொம்மையை வைப்பது நல்லது.. எக்காரணம் கொண்டும், படுக்கையறை, கிச்சனில் மட்டும் இந்த பொம்மையை வைக்கக்கூடாது.. குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை நிலவ, குபேர பொம்மையை வடகிழக்கு திசையில் வைக்கலாம்.
எப்போதுமே, குபேர பொம்மையை கைகளை உயர்த்திய நிலையில் இருப்பது வீட்டிற்கு நல்லதல்ல என்பதால், லாஃபிங் புத்தா, பைகளை ஏந்தியிருக்கும் குபேர பொம்மை, உலோகத்தால் செய்யப்பட்ட குபேர பொம்மை போன்றவைகளை இவைகளை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது. இரண்டரை முதல் மூன்றடி உயரத்திலுள்ள குபேர பொம்மைகளை வாங்கலாம்.
குபேர பூஜை எப்போது செய்யலாம்
இந்த குபேர பொம்மையை இழிவுப்படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.. உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும்.. அதேபோல, பூஜையில் வைக்கப்படும் குபேரனின் திருவுருவம் கட்டைவிரல் அளவு மட்டுமே இருக்க வேண்டும். வரவேற்பறையில் குபேரனின் சிலையை வைப்பதாக இருந்தால், அதை எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.
வேலை செய்யும் இடத்தில், மாணவர்கள் படிக்கும் இடத்தில், குபேர பொம்மையை வைத்து வழிபடலாம்.. எப்போதுமே குபேர பொம்மைக்கு பூக்கள், பழங்கள், இனிப்புகள் போன்ற படையல்கள் வைத்து வழிபட வேண்டும்.. குபேர பூஜை செய்வதாக இருந்தால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். குபேரன் பிறந்த நட்சத்திரமாகக் கருதப்படும் பூசம் நட்சத்திர நாளில் வியாழன் மாலையில் வழிபாடு செய்வது மிகுந்த பலன்களைத் தரும் என்பார்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications