வீட்டிற்குள் அணில் வந்து போகுதா? அடி தூள்.. பட்டாம்பூச்சி வீட்டை சுற்றி வருதா? பதற்றம் வேண்டாம்
சென்னை: உங்கள் வீட்டிற்கு அணில் வந்து சென்றால் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தமாம். அணில் கூட்டினை ஒருபோதும் கலைக்கக்கூடாது. அப்படி செய்தால் பட்சி தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மறைந்த முன்னோர்கள் பட்டாம்பூச்சி வடிவத்தில் வீட்டை சுற்றி வட்டமிடுகிறார்கள் என்றும் சொல்கிறது சாஸ்திரங்கள்.
கிராமத்தில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் அணில் பிள்ளை வந்து போகும். நகரங்களில் குடியிருப்புகளில் பட்டாம்பூச்சி சுற்றி வரும். அதை ஆச்சரியமாக நம்முடைய பிள்ளைகள் பார்ப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டிற்கு அணில் அடிக்கடி வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை ஒப்பிடுகையில் அணில் தனித்துவமான குணாதிசயம் கொண்ட உயிரினம் ஆகும். அணில் வீட்டிற்கு வந்து சென்றால் அதிர்ஷ்ட தேவதை வந்துவிட்டார் என்று அர்த்தமாம்.

சிலரது வீடுகளில் சண்டை சச்சரவுகள் இருக்கும். அப்படி ஓயாத சண்டை நடக்கும் வீட்டிற்குள் ஒருமுறை அணில் வந்து சென்றால் அந்த சண்டைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்குமாம். ராமபிரான் அணிலை தடவிக்கொடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. பழ மரங்கள் அதிகம் வளர்க்கும் வீடுகளில் அணில்கள் வரும். கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவை அணிலுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்த மரங்களை வீட்டில் வளர்த்தால் அணில்கள் உங்கள் வீடு தேடி வரும். அணில்கள் வீட்டிற்குள் வருவது மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
வீட்டிற்குள் இருக்கும் பிரச்னைகள் தீரும், பிரிந்து போன சொந்தங்கள் ஒன்றாகச் சேர்வார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். விவாகரத்து வரை சென்றாலும் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. தவறான வழியில் செல்ல இருப்பவர்களுடைய மனநிலையில் நல்ல ஒரு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பொருளாதார நிலை அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரப்போகிறது என்பதை அணில்கள் உணர்த்துகின்றன.
நம்முடைய வீட்டில் குருவிக்கூடு, அணில் கூடு கட்டியிருந்தால் அதை நாம் கலைத்து விடக்கூடாது. தெரிந்தோ, தெரியாமலோ நாம் கூட்டினை கலைத்து விட்டால் நமக்கு பட்சி தோஷம் ஏற்படும். பட்சி தோஷம் பலவிதமான பிரச்சனைகளை நமக்கு கொடுக்கும் என்பதால் அணில் கூட்டை எப்பொழுதும் கலைக்கக் கூடாது.
அதே போல பட்டாம்பூச்சி நம்முடைய வீட்டிற்கு வந்து போவதும் நல்ல செய்தியை கொண்டு வரும். மறைந்த நம்முடைய முன்னோர்கள்தான் பட்டாம்பூச்சி வடிவத்தில் நம்முடைய வீட்டிற்குள் வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது. மஞ்சள் வண்ண நிற பட்டாம்பூச்சி, பொருளாதார நிலையையும் செல்வ வளத்தையும் அதிகரிக்குமாம். பச்சை நிற வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வந்தால் அது ஆரோக்கியத்தினை அதிகரிக்குமாம். வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வருவதன் மூலம் திருமணம் நடைபெறுவதில் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டிருந்தால் அது நீங்குமாம்.

விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்பதைக்கூட பட்டாம்பூச்சிகள் உணர்த்துமாம். நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஏதோ ஒரு நல்ல விசயத்தை சொல்வதற்காக பட்டாம்பூச்சியின் வடிவத்தில் வீட்டிற்குள் வருகிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே வீட்டிற்கு பட்டாம்பூச்சி வந்தால் பதற்றப்பட வேண்டாம். அணில் பிள்ளை வந்தால் அஞ்ச வேண்டாம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
-
Vinayagar Agaval Lyrics in Tamil: விநாயகர் அகவல் வரிகள்: தமிழ் பக்தி இலக்கியத்தின் முக்கிய படைப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications