தைப்பூசம்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. பயபக்தியோடு வானதி சீனிவாசன் செய்த வேல் பூஜை
கோவை: தைப்பூசம் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவையில் முருக பக்தர்கள் நடத்திய வேல் பூஜையில் பங்கேற்று பய பக்தியுடன் பூஜை செய்துள்ளார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
ஆறுமுகனின் பன்னிருகரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. வெற்றிவேல், வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்துவருவது சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளது.

வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. வேலை வழிபடுவோர்க்கும் வினைகள் நீங்கும். இதனைத்தான் வேலுண்டு வினை இல்லை என்பர். வேல் ஞானத்தில் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப் பெருமானை ஞான வேல் முருகன் என போற்றுகின்றனர்.
வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். தமிழ்நாட்டில் வேலை வழிபாடு தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற வேல் பூஜையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
வேல் பூஜை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வானதி சீனிவாசன், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற வேல் பூஜையில் முருக பக்தர்களோடு கலந்து கொண்டேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பதிவிட்டுள்ளார் வானதி சீனிவாசன்.
பூஜைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் கோரிக்கையை இந்த அரசாங்கம் நிறைவேற்றாமல் உள்ளது. மற்ற மாநிலங்களில் அரசாங்கமே பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்கிறது.
பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிநபர்களும், தனியார்களும்தான் அதிகம் உதவுகின்றனர். கோவை, மதுரையில் இருந்து பழநி செல்லும் பக்தர்களுக்கு ஒவ்வொரு 10 கி.மீ தொலைவிலும் இந்து அறநிலையத்துறை சார்பில் பந்தல் அமைத்து, 24 மணி நேரம் தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும்.
திராவிட மாடல் அரசு, கோயில் வருமானத்தை பக்தர்களுக்கு செலவிடுவதைவிட்டு, பா.ஜ.க-வினர் எந்தக் கோயிலுக்கு செல்கிறார்கள், அவர்கள்மீது எப்படி வழக்கு போடலாம் என்பதில் குறியாக உள்ளது. கோயில்களில் நாங்கள் புகுந்து அராஜகம் செய்வதாக, ஓர் அமைச்சர் சொல்கிறார். அவர் பேசுவதெல்லாம் பொய்தான். திராவிட மாடல் அரசு நினைத்தால், மக்களை கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா.
இந்து அறநிலையத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசும் தேவையில்லாமல் கோயில் விவகாரங்களில் தலையிட்டு மன உளைச்சலை கொடுக்கின்றனர். எல்.இ.டி திரையில் கும்பாபிஷேகத்தை பார்த்தால் கலவரத்தை தூண்டுவதாக ஆகிவிடுமா... வயிற்று எரிச்சலில் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்து பக்தர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர்களை குண்டர்கள் என்று அவமானப்படுத்துகிறீர்கள். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். கோவையில் பட்டாசு வெடித்தது, கோயில் சென்றதற்கு எல்லாம் வழக்கு போட்டு, எங்கள் கட்சியினர் 15 பேரை கைதுசெய்துள்ளனர். அமைச்சர் நிகழ்ச்சிகளுக்கு பட்டாசு வெடிக்கும்போது எல்லாம் கைது செய்துள்ளார்களா.
இது அதிகார மமதையின் உச்சம். மகனுக்கு முடிசூட்டும் நிகழ்ச்சியை, ஜனநாயகத்துக்கு விரோதமாக இளைஞரணி மாநாடு என நடத்திவிட்டு, இந்துக்களின் உணர்வை நசுக்க பார்க்கிறது. தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது சொன்ன எதையுமே செய்யாமல் யூடர்ன் அடிக்கிறது. இது யூடர்ன் அரசாங்கம் என்று கூறினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு வேல் அரசியலை கையில் எடுத்தது பாஜக. வட இந்தியாவில் அயோத்தி ராமரை கையில் எடுத்துள்ள பாஜக, தமிழ்நாட்டில் தமிழ் கடவுள் முருகன் வேல் பூஜையை தொடங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பாஜகவிற்கு பதிலடி தரும் வகையில் திமுகவினரும் கையில் வேல் ஏந்தினர். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் முருகப்பெருமானின் வேல் லைம் லைட்டுக்கு வந்துள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications