வேலூரில் தானாகவே சுழலும் எலுமிச்சம் பழம்.. ரங்காபுரம் மலை மீது பைரவர் கோயிலில் அதிசயம்.. ஒரே பரவசம்
சென்னை: இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும், ஒருசில கோயில்களில் மட்டுமே அதிசயங்கள் நிகழும்.. அந்தவகையில், வேலூர் மாவட்டத்திலுள்ள அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவிலும் ஒன்றாகும்.. இந்த கோயிலில் உள்ள சிறப்புகள் என்னென்ன தெரியுமா? இந்த கோயிலில் தானாகவே சுற்றும் எலுமிச்சம்பழத்தை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இந்த அதிசய நிகழ்வு எப்போது கோயிலில் நடக்கும் தெரியுமா? இதை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.. எனவே பைரவருக்கான வழிபாடு தமிழகத்தில் பல இடங்களில் நடத்தப்படுகின்றன.. காவல் தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் பைரவருக்கு பல இடங்களில் தனிக்கோவில்கள் இருந்தாலும், வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோவில் மிகவும் அதிசயமிக்க, சக்தி வாய்ந்த தலமாக கருதப்படுகிறது.

ரங்காபுரம் மலை மீது கோயில்
வேலூர் மாவட்டம் ரங்காபுரம் மலைமேல் உள்ளது, இந்த அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோயிலாகும்.. இந்த கோயிலுக்கு கோபுரங்கள் இல்லை.. மாறாக பாதி சுவர் மட்டுமே இந்த கோயிலில் காணப்படும்.. தனி சன்னதியில் இங்கு கால பைரவர் காட்சி தருகிறார்..
பைரவருக்கு சிவன் கோவில்களில் தனியாகவே சன்னதி இருக்கும். சித்தர்களின் காவல் தெய்வமாக கருதப்படுவதுடன், பக்தர்களின் வேண்டுகோள்களையும் தீர்த்து வைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
வேலூர் மாவட்டம்
அதுமட்டுமல்ல, மலைகளிலிருந்து சுனைகளில் நீர்வரத்தானது விவசாயத்திற்கும், கால்நடைகள் மேய்ப்பதற்கும் தகுந்த இடமாக இருக்கின்றன.,. எனவே, இந்த பகுதியில் ஆடு மாடுகள் மேய்க்க செல்பவர்கள் தங்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்து நேராமல் இருக்க ஊரைக் காக்கும் கடவுளாக இந்த பைரவரை ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகிறார்களாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜையும் இங்கு நடப்பதால், ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்து விடுவார்கள்.. மற்ற நாட்களில் அமானுஷ்யமான நிசப்தத்தில் பைரவர் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
தானாகவே சுற்றும் எலுமிச்சம் பழம்
இந்த பைரவருக்கு ஆண்டுதோறும் அதாவது மே மாதத்தில் பொங்கல் வைத்து வழிபாடுகள் நடக்கின்றன.. அப்போதுதான் அந்த சமயம் நடக்கும்.. அதாவது, பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்ததுமே அவரது தலையில் பூ வைத்து, அதன்மீது ஒரு எலுமிச்சம் பழம் வைப்பார்கள்.
இந்த பழத்தை வைத்ததுமே, ஒரு ஈ அங்கு பறந்து வந்து, எலுமிச்சம் பழத்தின் மீது உட்கார்ந்து கொள்ளும்.. அடுத்த சில வினாடிகளில் அந்த ஈ பறந்து சென்றதுமே, அந்த எலுமிச்சம் பழம் தானாகவே சுற்ற தொடங்குமாம்.. அப்படியே சுழன்று சுழன்று, இறுதியாக கீழே விழும்.. ஆனால், அந்த பழத்தை கீழே விழாதவாறு அங்கேயே காத்திருக்கும் ஒருவர் பிடித்துக்கொள்வார். இதை பார்த்ததுமே பக்தர்கள் பரவசமடைவார்கள்.
பைரவர் தலையில் எலுமிச்சை
பைரவர் தலையில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம் தானாகவே சுற்றும் அதிசயம் நடந்ததுமே, அங்கிருப்போருக்கு அருள்வாக்கு சொல்வது ஆரம்பமாகும்.. பைரவரிடம் உத்தரவை பெற்றபிறகே இந்த அருள்வாக்குகள் சொல்லப்படுகின்றன.. இதனால் பக்தர்களின் மனக்குறைகள், வருத்தங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது.
மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக இது கருதப்படுவதால், ஏராளமானோர் அருள்வாக்கு கேட்டு இந்த கோயிலுக்கு வருவதுண்டு...
வருடம் ஒருமுறை நடக்கும் பொங்கல் விழாவுக்கும், அந்த விழாவில் நடக்கும் அதிசயத்தை பார்க்கவும் ஏராளமான சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரண்டு இந்த மலைக்கோவிலுக்கு வருவார்களாம்..
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications