Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யோகம் தரும் வில்வ காய் விளக்கு பரிகாரம்.. ஊமத்தம் இலையில் தீபம் ஏற்றினாலே செல்வம் மகிழ்ச்சி பெருகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய குடும்பத்தில், நிதி சிக்கலும், ஆரோக்கிய குறைபாடும், வறுமையும் பீடித்திருக்கிறது என்றாலே, மனதுக்குள் சங்கடங்கள் சேர்ந்துவிடும்.. இந்த மனப்பாரத்தை போக்கி, நற்பலனை தருவதற்காகவே சில பரிகாரங்கள் கை கொடுக்கின்றன.. அந்தவகையில், அந்தவகையில், சிவபெருமானுக்கு ஊமத்தங்காய் தீபம், வில்வ காயில் தீபங்களை ஏற்றுவதால், பல உடனடி மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள்.

ஊமத்தங்காயின் செடியின் வேர், இலை, பூக்கள், விதை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. நரம்புகளை பலப்படுத்தக்கூடியது இந்த இலைகள்..

Spiritual Vilva kaai Vilakku Oomathangai Dheepam

ஊமத்தங்காய் நன்மைகள்

சித்த பிரம்மையை நீக்கக்கூடிய ஊமத்தங்காய், வாத நோய்களை கட்டுப்படுத்தக்கூடியது. ஊமத்தை இலைகளை விளக்கெண்ணை தடவி அடுப்பில் வதக்கி, உடம்பில் வலி, ரணங்களில் உள்ள இடங்களில் கட்டினால், வலி, வீக்கம்.. மூட்டு வலிகள், மூட்டு வீக்கங்களும் இந்த இலையில் ஒத்தடம் தரலாம்..

பெண்களுக்கு பிரசவ நேரத்தில் தரப்படும் மயக்க மருந்துகளில், மூலப்பொருளாகவும், தாய்ப்பால் கட்டிக்கொண்டாலோ ஊமத்தை இலைதான் பயன்படுகிறது.

சிவபெருமானுக்கு அர்ச்சனை

இப்படி பல மருத்துவ நன்மைகளை தரக்கூடிய ஊமத்தங்காய்கள் ஆன்மீகத்திலும் தனித்துவம் வாய்ந்து காணப்படுகிறது.. ஊமத்தை இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்து வரும்போது, நம்மை துன்பம் அண்டாது என்பார்கள்..

ஊமத்தங்காயின் மேற்புறம் முட்கள் அதிகமாக காணப்படும்.. இந்த காயில் தீபத்தை ஏற்றினால், வாழ்வில் ஏற்றமும், வளமும் பெருகுவதுடன் பணக்கஷ்டமும் நீங்கும்..

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த ஊமத்தை காயை வாங்கி, வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகாரம் செய்யலாம். இதற்கு மஞ்சள் துணியில், 1 ரூபாய் நாணயம், ஊமத்தங்காய், ஊமத்தம்பூவை சேர்த்து முடிச்சாக கட்டி, வீட்டின் நிலைவாசலில் கட்டி தொங்க வைத்துவிட வேண்டும்.

வீட்டில் தீபம் ஏற்றி ஊதுபத்தி காண்பிக்கும்போது இந்த முடிச்சுக்கும் ஊதுபத்தி காண்பித்து வரும்போது, விரைவில் பலனை எதிர்பார்க்கலாம்.

ஊமத்தம் பூக்கள் - ஊமத்தை காய் தீபம்

அதேபோல ஊமத்தம் பூக்களையும் ஒற்றைப்பட எண்ணிக்கையில், பிள்ளையாருக்கு வீட்டில் சூட்டி வரலாம்.. திங்கட்கிழமைகளில் 3 வாரத்துக்கு விநாயகருக்கு ஊமத்தை இலை அர்ச்சனை, ஊமத்தம் பூவை சாற்றி, உங்களது பிரார்த்தனையும் வேண்டிக்கொண்டால், நல்ல மாற்றம் விரைவில் குடும்பத்தில் தெரியும்..

அதிலும், சிவராத்திரி நேரங்களில் ஊமத்தங்காய் பரிகாரத்தை கட்டாயம் செய்ய வேண்டும். அதேபோல, இந்த ஊமத்தங்காய்களிலுள்ள காம்பினை நீக்கி விட்டு, சிறிய துளையிட்டு, அதனுள் இருக்கும் விதையை நீக்கிவிட வேண்டும்.

பின்னர், சிறிய மண் அகல் விளக்கின் மீது வெண்கடுகு, உமத்தங்காய்களை போட்டு, அதற்குள் இலுப்பை எண்ணெயை மட்டுமே ஊற்றி பஞ்சு திரி போட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றிவைத்துவிட்டு சிவபெருமானை மனமுருக வேண்டி கொள்ள வேண்டும். இப்படி 9 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ச்சியாக இந்த தீபத்தை ஏற்றி வந்தால், கண் திருஷ்டி, வறுமை, பணப்பற்றாக்குறை என அனைத்துமே விலகிவிடும் என்பது நம்பிக்கையாகும்.

அதேபோல, வில்வ மரத்தில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் சிவபெருமானுக்கு உரிய பொருட்களாகவே கருதப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால், வில்வ பழம், காய்களை கொண்டு தீபம் ஏற்றினால் நன்மை கிட்டும்.

அலுவலகம் அல்லது கடை அல்லது தொழில் செய்யக்கூடிய இடங்களில் வில்வ பழத்தையோ அல்லது காயையோ வைத்து, அதன்மீது நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றி வைக்கலாம்.. ஒருவேளை வில்வ பழம், காய்கள் கிடைக்காவிட்டால், வில்வ இலைகளை வைத்தும் தீபம் ஏற்றலாம். இதனால் சிவபெருமானின் அருள் கிடைத்து தொழிலில் உள்ள கஷ்டங்களும், சங்கடங்களும் விலகும். மகாலட்சுமியின் அருளும் சேர்ந்து கிடைப்பதால் தொழிலில் நல்ல லாபம் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+