Vinayagar Agaval: ஔவையாருக்கு கைலாயத்தை காட்டிய விநாயகர் அகவல்! பாடல் வரிகள் இதோ!
சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், எள் உருண்டை ஆகியவற்றுடன் விநாயகர் அகவலையும் படித்து யானைமுகத்தானின் அருளைப் பெறலாம். இந்த அகவலை ஔவையார் அருளியுள்ளார்.
விநாயகருக்கு ஔவையார் அன்றாடம் பூஜை செய்து வந்தார். ஒரு நாள் வேக வேகமாகப் பூஜை செய்தாராம். அப்போது விநாயகர், "என்ன பாட்டி, எங்கே போகப் போகிறாய், இவ்வளவு வேகமாகப் பூஜை செய்கிறாயே?" எனக் கேட்டாராம்.

அதற்கு ஔவை பாட்டியோ, "பிள்ளையாரப்பா, சேரமான் நாயனாரைக் கூட்டிக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் போகிறாராம். நான் மட்டும் போனால் யார் என்னை உள்ளே விடுவார்கள்? கைலாய தரிசனம் வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் அல்லவா? அதனால்தான் அவர்களுடன் செல்வதற்காக இன்று கொஞ்சம் வேகமாகப் பூஜை செய்தேன்" என்றாராம்.
அதற்குப் பிள்ளையார், "பாட்டி, பொறுமையாகப் பூஜை செய். உனக்கு என்ன, கைலாயத்தைத்தானே பார்க்க வேண்டும்? நான் இருக்கிறேன், கவலைப்படாதே!" என்று சொல்லிவிட்டு, வழிபாட்டுக்காக அமர்ந்துவிட்டார். பாட்டியும் பொறுமையாக விநாயகர் அகவலைப் பாடிப் பூஜை செய்தாராம்.
"நம்பினோர் கைவிடப்படார்" என்பார்கள். அந்த வகையில் விநாயகரும், ஔவை பாட்டிக்கு வாக்களித்தபடியே, கைலாயத்தைக் காண்பித்தார். இப்படி வேண்டும் வரங்களைக் கொடுக்கும் விநாயகர் அகவலை, விநாயகர் சதுர்த்தி அன்று பாடினால் நிச்சயம் விநாயகரின் அருள் கிடைக்கும்.
இதோ அதன் வரிகள்:
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளி
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்து
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந்தம்அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications