ஆச்சரியம் தரும் அருகம்புல்.. விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது ஏன் தெரியுமா? வியப்பூட்டும் ஆன்மீகம்
சென்னை: பிரபஞ்சத்தில் முதன்முதலில் முளைத்த மூலிகையே அருகம்புல் என்பார்கள்.. தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்ற பழமொழியே உண்டு. ஆன்மீகத்தில் அருகம்புல்லுக்கு என்று மகத்துவம் உண்டு.. விநாயகருக்கு பிடித்தமானது அருகம்புல் என்று சொல்ல என்ன காரணம் தெரியுமா? அருகம்புல் வைத்து வணங்கும்போது கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? அவைகளை பற்றி இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
அருகம்புல்லில் உள் சத்துக்களை பட்டியலிட முடியாது. மாவுச்சத்து, உப்புச்சத்து, நீர்த்த கரிச்சத்து, அசிட்டிக் அமிலம், கொழுப்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், அருண்டோயின், P சிட்டோஸ்டர், கார்போஹைட்ரேட், கவுமாரிக் அமிலச்சத்து, பெரூலிக் அமிலச்சத்து, நார்ச்சத்து, லிக்னின், மெக்னீசியம், பொட்டாசியம், பால்மிட்டிக் அமிலம், செலினியம், டைட்டர் பினாய்ட்ஸ், வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் C சத்தும் அடங்கியுள்ளன..

மருத்துவ குணங்கள்
உடல் எடையை குறைக்க வேண்டுமானால், அருகம்புல்லே போதும். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.. இதற்கு அருகம்புல்லை நீர் விட்டு அலசி, பிறகு சுத்தமான தண்ணீரை சேர்த்து இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்தோ, சாறு எடுத்து குடிக்கலாம். இதில் சிறிது துளசியை சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது.
நினைவுத்திறனை பெருதுக்கக்கூடியை திறன் இந் அருகம்புல்லுக்கு உண்டு.. எனவே, அருகம்புல்லை நிழலில் உலர்த்தி தூள் செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் பெருகும்.
ஆன்மீகத்தை பொறுத்தவரை, விநாயகருக்கு பிடித்தமானது அருகம்புல்தான்.. இந்த அருகம்புல்லை கொண்டு எந்த வேண்டுதல் வைத்தாலும், அது விரைவில் நிறைவேறிடும் என்பார்கள்.. தன்னுடைய செல்வங்களுக்கு மேலானது அருகம்புல் என்று அந்த குபேரரே கூறியுள்ளார். பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட அமிர்தம் அருகம்புல்லின் மீது விழுந்ததால் அதற்கு அழிவென்பதே கிடையாது .
புராண காரணம்
நல்ல சக்தியை தேக்கி வைத்து கொண்டு, கெட்ட சக்தியை விலக்கி வைக்கும் தன்மை இந்த அருகம்புல்லுக்கு உண்டு..இதற்கு ஒரு புராண காரணமும் சொல்லப்படுகிறது.. யாஷினி தேவி என்ற தேவ மங்கை விநாயகரை திருமணம் செய்ய நினைத்து தவம் இருந்தாராம்.. ஆனால் இதற்கு சம்மதிக்காத விநாயகர் அருகம்புல்லாக மாறி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இருந்து கொள் என்று வரம் தந்தாராம்..
அதேபோல, பார்வதியும் சிவனும் தாயம் விளையாடியபோது நடுவராக இருந்த நந்தி, சிவனுக்கு ஆதரவாக பேசிவிட்டதாம்.. இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, நந்திக்கு சாபம் கொடுத்தார். பிறகு விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகருக்கு விருப்பமான பொருளை சமர்ப்பித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறவே அருகம்புல்லை படைத்து சாப விமோசனம் பெற்றாராம்.
சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர், சதுர்த்தியிலும் தூர்வாஷ்டமியிலும் பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும் என்பார்கள்.
கடன் தொல்லை நீங்க
அதேபோல அதிக கடன் உள்ளவர்கள் அருகம்புல்லை வைத்து எளிய பரிகாரம் செய்வதால் விரைவில் பலன் கிட்டும்.. இதற்கு இரவில் பசுந்தயிரில் 16 அருகம்புல்லை நுனி உடையாமல் போட்டு, 3 நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு மறுநாள் குளித்தவுடன் பூஜை அறையில் விளக்கேற்றி, தயிரில் ஊற வைத்திருந்த அருகம்புல்லை சுத்தமான நீரில், மீண்டும் காய்ச்சாத பசும்பாலில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த அருகம்புல்லை பூஜையறையில் விநாயகருக்கு "ஓம் ருண விமோசன கணபதியே போற்றி" என்று கூறி ஒவ்வொரு அருகம்புல்லாக அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி 27 நாட்கள் செய்து வந்தால் கடன் தொல்லை எளிதில் நீங்குமாம்.
அருகம்புல்லை விநாயகருக்கு சாற்றும் பழக்கம் ஏற்பட காரணம்
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை,, எனவே, அவர்கள் சிவ பார்வதியை சந்தித்து முறையிட்டனர்.. சிவனும், விநாயகரை அழைத்து அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் அனலாசுரனை அழிக்க முயன்றார்.. ஆனால் முடியவில்லை.. இதனால் கோபத்தில் அவனை விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார்.
வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் வெப்பமடைய செய்யவும், அந்த வெப்பத்தை விநாயகரால் தாங்க முடியவில்லை.. இதையடுத்து, விநாயகருக்கு குடம் குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.. அப்போதும் வெப்பம் தணியவில்லை.
அப்போதுதான் ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலை மீது வைத்தார். அப்போது உடனே எரிச்சல் அடங்கியது.. அனலாசுரனும் வயிற்றுக்குள்ளேயே ஜீரணமாகிவிட்டான். அப்போது முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென்று விநாயகர் கட்டளையிட்டாராம். இப்படித்தான் விநாயருக்கு அருகம்புல் சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications