பிரம்மோற்சவம்.. புரட்டாசி சனிக்கிழமை.. ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி வரும் பக்தர்களுக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களிலும், புரட்டாசி சனிக்கிழமையின் போதும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படுவது திருமலை ஏழுமலையான் கோவில். திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள். தினசரியும் பக்தர்கள் வருகை தந்தாலும் பிரம்மோற்சவம், தெப்ப உற்சவ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

VIP darshan canceled at Tirupati Balaji Temple Brahmotsavam and Puratasi Saturday

நடப்பாண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதனையடுத்து அக்டோபர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவ கொடியேற்ற விழா நடக்கிறது. அதே நாளில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 22ஆம் தேதி கருட சேவை 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் 5 லட்சம் பக்தர்கள் வரை திருப்பதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். தங்க தேரோட்டம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதேபோல நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19ஆம் தேதி கருட சேவை நடக்கிறது.
செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. ஏழுமலையான் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் அவதரித்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வருவார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு 2 பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விஐபி தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்களை ஏற்க திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. அன்றைய நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதனிடையே 308வது பிறந்தநாளை கொண்டாடும் லட்டு எடை குறைவாக இருப்பதாக பக்தர்கள் புகார் கூறியுள்ளனர். திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டை பக்தர்கள் மகா பிரசாதம் என்று அழைக்கப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5, ரூ.10, ரூ.25 விலைகளில் 3 வகையான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது ரூ.50க்கு லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஏழுமலையான் கோவிலில் 3 வகையான லட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன. அஸ்தானம் என்ற லட்டு விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுகிறது. 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. கல்யாண உற்சவ லட்டு கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டுக்கு பக்தர்களிடையே வரவேற்பு அதிகம் உள்ளது. இதனால் கல்யாண உற்சவ லட்டை பெற பக்தர்கள் போட்டி போடுவார்கள். இதேபோல் புரோக்தம் என்ற லட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதான் தினமும் அதிகமாக வழங்குகின்றனர். இதன் எடை 175 கிராம் இருக்க வேண்டும். ஆனால் பக்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் லட்டு எடை குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. லட்டின் எடை நாளுக்கு நாள் அதன் எடை குறைந்து கொண்டே வருகிறது என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சரியான எடை அளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+