Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உகாதி பண்டிகை..திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து..பஞ்சாங்கம் வாசிப்பதை கேட்கலாம்

ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையொட்டி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் விஐபி தரிசனம்,ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 21ஆம் தேதி செவ்வாய்கிழமையன்று ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் 5 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

யுகாதி புத்தாண்டு தினத்தன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. இந்தாண்டு உகாதி பண்டிகை வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஏழுமலையான் கோவில்

ஏழுமலையான் கோவில்

உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு புரட்டாசி மாத பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், யுகாதி புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

யுகாதி பண்டிகை கொண்டாட்டம்

யுகாதி பண்டிகை கொண்டாட்டம்

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி பண்டிகை. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

 ஏழுமலையான் கோவிலில் உகாதி

ஏழுமலையான் கோவிலில் உகாதி

இந்த ஆண்டு தெலுங்கு ஆண்டு பிறப்பு வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. யுகாதி ஆஸ்தானத்தையொட்டி வரும் 21 ஆம் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோயில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

 விஐபி தரிசனம் ரத்து

விஐபி தரிசனம் ரத்து

ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையொட்டி ஏழுமலையான் கோவிலில் வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 22 ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவ சேவை, ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

யுகாதி ஆஸ்தானம்

யுகாதி ஆஸ்தானம்

யுகாதி ஆஸ்தானம் நடைபெறும் அன்று கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்படும் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது. கோவில் யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது. ஊர்வலமாக வந்து தங்க கதவு அருகே கொலு வைக்கப்படும். மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் வாசிக்கப்படும். இதனையடுத்து அனைவருக்கும் உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்படும்.

 பஞ்சாங்கம் பலன்

பஞ்சாங்கம் பலன்

பொதுவாக பஞ்சாங்கத்தில் புது வருடத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெறும் என்று கணிக்கப்பட்டிருக்கும். அதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மலையப்பசுவாமி முன்பாக வாசித்து காட்டுவார்கள். பஞ்சாங்கம் வாசிப்பதை கேட்பது புண்ணியம் என்று சொல்லப்படுவதால் ஏராளமானோர் யுகாதி பண்டிகை நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+