Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில் வாஷிங் மெஷினில் துணி துவைக்கலாமா? இதை செய்தால் வறுமை வந்துடும்.. பெஸ்ட் வாஸ்து திசை இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாஸ்துப்படி நம்முடைய வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளுமே நம்முடைய வாழ்வில் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியவை.. அதனால்தான் ஒவ்வொரு பொருளையும், வாஸ்துமுறைப்படி பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.. அந்தந்த பொருளுக்குரிய அதற்குரிய திசையும், பலனும்கூட வாஸ்துவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.. அந்தவகையில்,வாஷிங் மெஷினை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.. அதனை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

எந்தவொரு வீட்டிலும் வாஷிங் மெஷினை சரியான முறையில் வைத்து, பயன்படுத்தாவிட்டால், குடும்பத்தில் பல சறுக்கல்கள் வரலாம்.. தொழிலிலும் நஷ்டங்கள் வரலாம்.. ஆரோக்கியத்தில் குறைபாடு வரலாம்..

Spiritual Washing Machine Vastu Direction

வாஷிங் மெஷினுக்கு உரிய திசை என்ன

எப்போதுமே வாஷிங் மெஷினை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.. இதனால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகமாகும்.. குடும்ப உறுப்பினர்களின் நலனும் காக்கப்படும்.. ஒருவேளை தென்கிழக்கில் முடியாவிட்டாலும், வடமேற்கு திசையிலும், வாஷிங் மெஷினை வைக்கலாம்.. இதனால் குடும்ப உறவுகள் தழைக்கும். இந்த திசையிலும் வைக்க முடியாத சூழலில் மேற்கு திசையில் வாஷிங் மெஷினை வைக்கலாம்.

தவறியும் செய்ய கூடாதவை

ஆனால் எக்காரணம் கொண்டும், வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையிலும், தெற்கு, மற்றும் தென்கிழக்கு திசையிலும் வாஷிங் மெஷின் இருக்கக்கூடாது.. இதனால் குடும்பத்தில் உடல்நலக்கேடு ஏற்படும்.. சண்டை சச்சரவுகள் வெடிக்கும்.. தொழிலில் தடைகளை ஏற்படுத்திவிடும்.. இதனால் பணப் பிரச்சனையும், மருத்துவ செலவும் அதிகரிக்கும்.. அத்துடன் மரியாதை, புகழ், பெயர் அனைத்துமே களங்கமாகிவிடும்.

குளியலறையில் அழுக்கு துணிகளை, ஈரத்துணிகளை போட்டு வைக்கக்கூடாது என்பார்கள்.. அதுபோலவே, வாஷிங் மெஷினிலும் அழுக்குத் துணிகளை சேர விடக்கூடாது.. இரவு முழுவதும் அழுக்கு துணிகளை ஊற வைக்கவும் கூடாது.. இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகிவிடும்.. அது குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிடும்.. சின்ன சண்டைகூட, பெரிதாக விஸ்வரூபமெடுத்துவிடும்.

எந்த நாளில் துணி துவைக்கலாம்

அதேபோல, துணி துவைப்பதாக இருந்தால், திங்கட்கிழமை, செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துவைக்கலாம்..

மேற்கண்ட நாட்களில் துணிகளை துவைப்பது செல்வத்தை அதிகரிக்க துணை புரியும்.. மனதில் தெளிவும், அமையும் பிறக்கும்.. எக்காரணம் கொண்டும், வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் துணி துவைக்கக்கூடாது.. இது லட்சுமி, விஷ்ணு மற்றும் சனி பகவான்களுக்கு ஒவ்வாத செயலாகும்.. குடும்பத்தில் சொல்ல முடியாத இன்னல்கள் வரலாம்.

துணி துவைக்க உகந்த நேரம்

அதேபோல அமாவாசை நாளிலும், பௌர்ணமி நாளிலும் துணி துவைக்கக்கூடாது., அப்படி செய்வது, லட்சுமி தேவிக்கு கோபத்தை தந்துவிடுமாம்..

அதேபோல துணிகளை துவைக்க வேண்டுமானால் காலை 7 மணி முதல் 11 மணி வரை துவைக்கலாம்.. இரவில் துணிகளை துவைத்தால் பணக்கஷ்டம் வந்துவிடும்.. மனநல பாதிப்பும் வருமாம்.

மூடி வைக்க வேண்டும்

அதேபோல, வாஷிங் மெஷினை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. லிக்விட் ஊற்றுவதற்கென்றே உள்ள பகுதியை மாதம் ஒரு முறையாவது எடுத்து சுத்தம் செய்து பிறகு பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த இடம் உப்புக்கறை படிந்து சீக்கிரம் பழுதடைந்து விடவாய்ப்பு உள்ளது.

வாஷிங் மெஷினை பகல் நேரங்களில் திறந்து வைக்கவேண்டும். அப்போது தான் அதில் வாடை வராமல் இருக்கும். வாஷிங் மெஷினில் உள்ள அழுக்குகளை அடிக்கடி நீக்கிவிட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+