வீடு கட்ட பிளானா? எந்தெந்த மாதத்தில் கட்டினால் என்ன பலன்னு தெரிஞ்சிகோங்க! மார்கழி மட்டும் வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த மாதத்தில் வீடு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். வீடு கட்டும் போது நல்ல நாள் பார்ப்பதோடு சரி, இதையெல்லாம் யார் பார்ப்பது என அலட்சியம் வேண்டாம்.

இதுகுறித்து ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எந்த மாதத்தில் வீடு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

spirtuality tamil

சித்திரை மாதம் வீடு கட்டினால் வீண் செலவு நடைபெறும். வைகாசியில் வீடு கட்டினால் செய்யும் செயல் வெற்றியடையும். ஆனியில் வீடு கட்டினால் மரண பயம் ஏற்படும். ஆடியில் வீடு கட்டினால் வீட்டில் உள்ள கால்நடைகளான ஆடு, பசு மாட்டிற்கு நோய் ஏற்படும்.

ஆவணியில் வீடு கட்டினால் குடும்ப உறவில் ஒற்றுமை ஏற்படும். புரட்டாசியில் வீடு கட்டினால் குடும்பத்தவர்களுக்கு நோய் ஏற்படும். ஐப்பசியில் வீடு கட்டினால் உறவினர்கள் கலகம் செய்வர். கார்த்திகையில் வீடு கட்டினால் லட்சுமி தேவி அருள் கிடைக்கும்.

மார்கழி வீடு கட்டினால் வீடு எழுப்ப முடியாமல் தொடர் தடை வரும். தை மாதம் வீடு கட்டினால் அக்னி பயம், கடன் தொல்லை ஏற்படும். மாசியில் வீடு கட்ட சவுபாக்கியம் உண்டாக்கும். பங்குனியில் வீடு கட்டினால் பொன், பண விரயம் ஏற்படும்.

அட வீடு கட்டுவதே பெரிய விஷயம். இதையெல்லாம் யார் பார்ப்பது என்று நினைக்காதீர்கள். வாஸ்துபடி இவைகளை பின்பற்றினால் நலம் பெறுவதோடு வாழ்வில் அமைதி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

வீட்டை கட்டி பார், கல்யாணத்தை செய்து பார் என்பார்கள். அந்த அளவுக்கு இரண்டுமே கஷ்டம் என்பது அனைவரும் அறிந்ததே. வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. நம்பிக்கை இருப்போர் வாஸ்து பார்த்து கட்டிவருகிறார்கள்.

எந்தெந்த அறை எங்கு வைக்கலாம், ஜன்னல் எங்கு இருக்க வேண்டும், கதவு எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் வாஸ்து சொல்கிறது. கழிப்பறை கூட இந்த திசை நோக்கிதான் நாம் அமர்ந்திருக்க வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது.

மாறியிருந்தால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை எழும். இன்று அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவோர் கூட வீட்டை வாஸ்துபடி கட்டியுள்ளதாக வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள். இப்படி பல லட்சங்கள், கோடிகளை போட்டு வீடு வாங்கும் நிலையில் அதை நல்ல மாதங்களில் வாங்குவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+