ஆடி மாதம் அம்மனுக்கு புடவை சாற்ற போறீங்களா? அப்போ ஒரு நிமிஷம் இருங்க! இதை படிங்க!
சென்னை: ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி அடுத்த வாரம் 16 ஆம் தேதி வருகிறது. அன்றுடன் ஆடி மாதம் முடியவுள்ள நிலையில் அம்மனுக்கு எந்த நிறத்தில் புடவைகளை சாற்ற வேண்டும். அவ்வாறு நிறங்களில் அணிவிக்கப்படும் புடவைகளுக்கு என்னென்ன பலன் என்பதை பார்க்கலாம்.
ஆடி மாதம் என்றால் அது இறைவனுக்கு உரிய மாதம். அதிலும் குறிப்பாக அம்மனுக்கு ஏற்ற மாதம் இது என சொல்லலாம். அதற்காக யாரும் மற்ற கடவுளை வழிபடக் கூடாது என்றில்லை. அவரவர் குலத்தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்க வேண்டும்.

புரட்டாசி மாதங்களில் எப்படி பெருமாளுக்கு விரதம் இருக்கிறோமோ அது போல் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டும். சிலர் ஆடி மாதங்களில் கூழ் வார்த்தல், குலதெய்வங்களுக்கு பொங்கல் வைத்தல் உள்ளிட்டவைகளை செய்வர்.
அது போல் திருவிழாக்களின் போது நேர்த்திக் கடன் செலுத்துவதாக ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேண்டுதலை முன் வைப்பார்கள். சிலர் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக புடவை சாற்றுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதிலும் ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு நிற புடவை சாற்றி வழிபடுவது நல்ல பலனை தரும் என்கிறார்கள்.
குழந்தைக்கு நன்றாக பேச்சு வர வேண்டும், ஆரோக்கியம் குறையாமல் இருக்கவும் திருமணத் தடை நீங்கவும் வீடு கட்டவும் கடன் தொல்லை நீங்கவும் உள்ளிட்ட பிரார்த்தனைகளுக்கு தீர்வு காண அம்மனுக்கு புடவை அல்லது ஆபரணங்களை சாற்றுவதாக வேண்டிக் கொள்வார்கள்.
இதில் என்னென்ன நிறத்தில் அம்மனுக்கு புடவை சாற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், கண் திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் சிவப்பு நிறப் புடவையை அம்மனுக்கு சாற்றலாம். அது போல் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெற வேண்டும் என வேண்டுதல் இருந்தால் மஞ்சள் நிறத்தில் புடவையை சாற்றலாம்.
பிள்ளைகள் நன்றாக கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பச்சை நிறத்தில் புடவையை அம்மனுக்கு சாற்றலாம். அது போல் கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ளவோ அல்லது நாம் செய்யும் வேலையில் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என வேண்டினால் ஆரஞ்சு அல்லது வெளீர் சிவப்பு நிறத்தில் புடவையை சாற்றலாம்.
குடும்பம் ஒற்றுமையாக இருக்கவும், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஒற்றுமை மேம்படவும் வீட்டில் அன்பும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் சந்தன நிறம் அல்லது எலுமிச்சை மஞ்சளில் சேலையை எடுக்கலாம். நம் வீடுகளில் செல்வம் பெருகவும், வீட்டிற்கு வந்த செல்வம் நிலைத்து இருக்கவும் சகல சவுபாக்கியங்களையும் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்றால் மாம்பழ நிறத்தில் புடவையை அம்மனுக்கு சாற்றலாம். கருப்பு நிற புடவையையும் வெள்ளை நிற புடவையையும் அம்மனுக்கு சாற்றவே கூடாது. மற்றபடி அவரவர் வேண்டுதலுக்கேற்ப சேலைகளை சாற்றலாம்.
வேண்டுதல்களே இல்லை என்றாலும் அம்மனுக்கு புடவை எடுக்க வேண்டும் என்றால் பச்சை, சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் எடுத்து வைக்கலாம். எதுவாக இருந்தாலும் மனதார செய்யும் நேர்த்திக் கடன்களை தெய்வங்கள் ஏற்றுக் கொள்வார்கள். அது போல் இந்த ஆடி மாதத்தில் குலத்தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது.
-
குழந்தை வரம் வேண்டுவோர்.. வைகாசி விசாகம் நாளான்று இப்படி விரதம் இருந்தால் நல்லது! -
வைகாசி 2026: சுப முகூர்த்தங்கள், வாஸ்து நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் முழு பட்டியல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications