ஆடி அமாவாசை! மகன்களே இல்லாத நிலையில் தாய், தந்தைக்கு மகள்கள் தர்ப்பணம் செய்யலாமா?
சென்னை: ஆடி அமாவாசை நாட்களில் தெரியாமல் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் சாபத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும். இதனால் ஆடி அமாவாசை விரதத்தை யாரெல்லாம் இருக்க வேண்டும். அன்று என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம்.
முன்னோர்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணங்கள், திதிகள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலமும் ஆத்ம சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக சொல்வதுண்டு.

அதிலும் இந்த ஆடி அமாவாசை நாளில் தந்தை வழி உறவுகளுக்கான சூரியனும் தாய் வழி உறவுகளுக்கான சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வந்து நிற்கும் நாள்தான் அமாவாசை. மற்ற கிரகங்களைவிட இந்த நாளில் பூமியில் சந்திரன், சூரியனின் ஆதிக்கம் முழுமையாக நிறைந்திருக்கும்.
ஆடி அமாவாசை அன்று கொடுக்கப்படும் தர்ப்பணங்கள் 48 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்களை சென்றடையும். இந்த நாளில் மறைந்த முன்னோர்கள் பூலோகத்திற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அமாவாசை நாளில் சைவ உணவுகளையே சமைக்க வேண்டும். அமாவாசை விரதத்திற்கு சமைக்கும் போது கண்டிப்பாக பூசணிக்காய், அகத்திக்கீரை, வாழைக்காய் உள்ளிட்டவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.
முதலில் முன்னோர்களுக்கு படையலிட்டு பிறகு காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். யாராவது இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். பெற்றோரை இழந்த ஆண்கள், மனைவியை இழந்த ஆண்கள், அப்பா இருந்து அம்மா இல்லாத ஆண்கள் உள்ளிட்டோர் விரதமிருக்க வேண்டும். அப்பா தர்ப்பணம் கொடுத்தாலும் அந்த குடும்பத்தில் உள்ள மகனும் அம்மாவிற்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அம்மா உயிருடன் இருந்து அப்பா மட்டும் இல்லை என்றாலும் அவருடைய மகன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கணவனை இழந்த பெண்களும் அமாவாசை நாளில் விரதம் இருந்து படைக்கலாம். மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாளில் எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
அமாவாசை அன்று முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்ற வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். கணவனை இழந்த பெண்கள் மட்டுமே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் தனது தந்தைக்கோ, மகனுக்கோ, சகோதரனுக்கோ என கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய கூடாது.
அது போல் அமாவாசை அன்று சுமங்கலிகள் விரதம் இருக்கக் கூடாது. நிறைந்த வயிறுடன் உணவை சாப்பிட்டுவிட்டுத்தான் உணவு சமைக்க வேண்டும். அமாவாசை அன்று இரவு உணவின் போது கண்டிப்பாக ஒரு கைப்பிடியாவது சாதத்தை சாப்பிட வேண்டும். அம்மா- அப்பாவுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான் என்றாலும் அவர் தர்ப்பணம் செய்யக் கூடாது. வேண்டுமானால் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துக் கொள்ளலாம். வீட்டிற்கு வந்து உணவு சமைத்து அன்னதானம் செய்யலாம்.
ஆடி அமாவாசை நாளில் நாம் செய்யும் வழிபாடும், கோயிலுக்குச் சென்று நாம் மேற்கொள்ளும் வழிபாடும் புண்ணியத்தை தரும். பித்ருக்களுக்கு பிண்டத்தை வைக்க முடியாதவர்கள் வேறு என்ன செய்யலாம் தெரியுமா? கோயில்களில் கூழ் ஊற்றுவது, கோயில்களில் அன்னதானம் செய்வது, கோயில்களில் சிறப்பு அபிஷேகம் செய்வது, பலி பீட பூஜைகளில் கலந்து கொள்வது, புண்ணியத்தை தரும். கோயில்களுக்கு சென்று கொடி மரம் அருகே மூலஸ்தானத்தில் இருக்கும் கடவுளை மனதார வழிபட்டு உங்கள் மனக்குறைகளை கூறுங்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications