Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூஜை அறையில் என்னென்ன செய்யலாம்! எதை செய்யக் கூடாது? கையில் துளசி வைத்திருந்தால் என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூஜை அறையில் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வணங்கும் தெய்வங்கள் உங்களுடன் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இதுகுறித்து தீபா தங்கராசு என்பவர் தனது சமூலவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒவ்வொருவருடைய பூஜையறையும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருக்கும். வீட்டின் பூஜையறை என்பது நமக்கு வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அறையாகவும் இருக்கிறது.

spirtuality pooja room

நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பதை உணர வேண்டும். அதற்கு உங்களுடைய பூஜையறையில் சில விஷயங்களை சரியாக கடைபிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

நமக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் நேராக பூஜையறைக்கு தான் செல்கிறோம். அந்த வகையில் பூஜையறையில் செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன? மற்றும் செய்ய வேண்டிய சில தகவல்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

  • பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
  • பூஜையறையில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பொருளாக கண்ணாடி இருக்கிறது. கண்ணாடி இல்லாமல் பூஜை செய்யாதீர்கள்.
  • பூஜையறையை எப்போதும் பளிச்சென்று வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். பூஜையறையாக இல்லாமல் ஸ்டாண்டில் வைத்திருந்தால் கூட இருள் சூழ்ந்த நிலையில் ஒருபோதும் இருந்து விடக்கூடாது.
  • பூஜை அறையில் தெய்வப் படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
  • விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், சண்டையிடுதல் கூடாது.
  • வாழைப்பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
  • தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக் கூடாது.
  • பூஜையறையில் கோமதி சக்கரம் வைப்பவர்கள் 11 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். அதற்கு குறைவாக வைக்கக்கூடாது.
  • முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களை கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும்.
  • விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெயிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுவதோ கூடாது.
  • ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலை முடியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக்கூடாது.
  • சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது தவறானதாகும்.
  • பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கும் முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
  • கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான். தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
  • தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை மூடி விட வேண்டும்.
  • புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக் கூடாது.
  • மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டக்கூடாது.
  • வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
  • பூஜையில் வைக்கப்படும் வெற்றிலையை காம்பை கிள்ளி விட்டு தான் வைக்க வேண்டும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது.
  • வெறும் வெற்றிலையை மட்டும் எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது. வெற்றிலையுடன் பாக்கு மற்றும் பூ கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
  • பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+