தேங்காய் உடைக்கும் போது நம் கைப்பிடியிலிருந்து தேங்காய் உருண்டோடிவிட்டால்! என்ன ஆகும்?
சென்னை: தேங்காய் உடைக்கும் போது நம் கைப்பிடியிலிருந்து தேங்காய் ஓடி விட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியுமா? அது போல் கோயிலில் வேண்டிக் கொண்டிருக்கும் போது யாராவது தேங்காய் உடைத்தால் என்ன நடக்கும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதுகுறித்து ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேங்காய் உடைப்பதில் சகுனம் பார்ப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(1) தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்
(2) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்
(3) சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும்
(4) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும்
(5) ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும்
(6) உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் & பொருள் இழப்பு ஏற்படும்
(7) நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும்
(8) முடிப்பாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம்
(9) முடிப்பாகம் இரு கூறாக உடைந்து அந்த இரு கூறுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால் நோய்களினால் துன்பம் ஏற்படும்
(10) சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு & ஆபரண லாபம் உண்டாகும்
(11) ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம் வெற்றியை தரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேங்காய் உடைக்கும் போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி போயிருக்கும். இது போன்றவைகளால் மனம் வேதனைப்படும். சிதறு தேங்காய் உடைக்கும் போதெல்லாம் சகுனம் பார்க்கத் தேவையில்லை.
தேங்காய் உடைக்கும் போது அதனுள்ளே பூ இருந்தால் நினைத்த காரியம் கை கூடும் என்று அர்த்தம். தேங்காய் சரிசமமாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். தேங்காயின் கண் பகுதி சிறியதாகவும் கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்துவிட்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைக்கு உரிய விஷயங்கள் தீர்ந்து வீட்டில் அமைதிபெறும்.
தேங்காயின் கண் பகுதி பெரியதாகவும் அடி பகுதி சிறியதாகவும் உடைந்தால் இல்லத்தில் செல்வம் பெருகும். தேங்காயை உடைக்கும் போது பொறுமையாகவும் நேர்த்தியாகவும் உடைக்க வேண்டும். அவசர கோலத்தில் உடைக்க கூடாது.
பூஜைக்கு உடைக்கும் போது தேங்காய் அழுகிவிட்டால் கவலையே படாதீர்கள், வேறு தேங்காயை வாங்கி உடைக்கலாம். இது அபசகுணம் கிடையாது. அது போல் வீட்டில் பூஜைக்கு எப்போது தேங்காய் வாங்கினால் இரண்டாக வாங்கி வைத்தல் நல்லது. அப்போதுதான் ஒன்று அழுகிவிட்டாலும் இன்னொன்றை உடைக்கலாம். இதனால் சரியான நேரத்தில் பூஜையும் செய்ய முடியும். மனமும் நிம்மதி பெறும்.












Click it and Unblock the Notifications