உங்கள் ஜாதகத்தை பாருங்க! நீங்கள் "இந்த" லக்னமா இருந்தால் திருமண தடை ஏற்படும்!
சென்னை: களத்திர தோஷம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திருமண தடை ஏற்படுவதுதான் களத்திர தோஷமாகும். சிலருக்கு குழந்தை பிறப்புக்கான தடையையும் ஏற்படுத்தும். குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத் தடை ஏற்படும். அந்த லக்னங்கள் எவை எவை என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:
ஜோதிட சாஸ்திரத்தில் சில குறிப்பிட்ட கிரக அமைப்புகளை கொண்ட ஜாதகர்/ஜாதகிகள் முறையான தோஷ நிவர்த்தி செய்யாமல் இருக்கும்பட்சத்தில் களத்திர தோஷத்தால் திருமணம் ஆவதற்கும், நல்ல வரன் கிடைப்பதற்கும் தாமதம் உண்டாவது, மீறி திருமணம் ஆனாலும் சண்டை சச்சரவான கசப்பான நிம்மதியற்ற வாழ்க்கை அமைப்பு, மணமுறிவு / விவாகரத்து (divorce),திருமணம் மூலம் தொல்லைகள், திருமணம் ஆனதில் இருந்து மிகுதியான பணவிரயம், பொருள் சேதம் / உயிர்சேதம், பொருளாதார கஷ்டம் / நெருக்கடி போன்ற அதிகமான கெடுபலன்களை அனுபவிக்கிறார்கள்.

திருமணம் தாமதம் ஆவதற்கு காரணமான களத்திர தோஷம் தரக் கூடிய சில கிரகஅமைப்புகள் உள்ளன. இவை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் உங்களுக்கும் திருமணம் நடக்க தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதில் சில கிரக அமைப்புகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி கூற இருக்கிறேன்.
அந்த கிரக அமைப்புகளை உங்கள் ஜாதகத்துடன் ஒப்பிட்டு பார்த்து முன்னெச்சரிக்கையுடன் விழித்துக் கொள்ளுங்கள்.
1.கடகம், சிம்மம் லக்னத்தை தவிர மற்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் வீட்டில் மந்த கிரகமான சனிபகவான் இருந்தால் திருமணம் நடக்க தாமதம் ஆகும்.
2.மகரம், கும்பம் லக்னத்தை தவிர மற்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்றாம் வீட்டில் மந்தகிரகமான சனிபகவான் இருந்தால் திருமணம் நடக்க தாமதம் ஆகும்.
3.லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் ராகு / கேது போன்ற தீயகிரகங்கள் இருந்தாலும் களத்திர தோஷமே. முறையான தோஷ நிவர்த்தி செய்த பிறகே திருமணம் முடிக்க வேண்டும்.
4.ஏழாம் வீட்டிற்கு உரிய கிரகம் லக்னத்திற்கு 3,6,8,12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தால் களத்திரதோஷம் கழித்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். இது தாரதோஷத்தை கொடுக்கும்.
5.உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தால் கட்டாயம் தோஷம் கழித்தபிறகே திருமணம் செய்ய வேண்டும். இல்லையேல் மணமுறிவு/கண்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
6. உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தாலும் கட்டாயம் தோஷம் கழித்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். இல்லையேல் கண்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
7. 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் களத்திர தோஷம் இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.
8. 4,13,22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு புத்திரதோஷம் / குழந்தைபாக்கியம் பெறுவதில் தடை இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும்.
9. குரு+சந்திரன் சேர்க்கை ஏழாம் வீட்டில் இருந்தால் கடுமையான தாரதோஷம் ஆகும். இதற்கு முறையான ஜோதிட ஆலோசனை பெறுவது அவசியம்.
10. சந்திரனுக்கு எதிரில் ராகு/கேது/சனி போன்ற கிரகங்கள் இருந்தாலும் களத்திரதோஷமே..
11.மற்ற கிரகங்களின் தொடர்பின்றி சுக்கிரன்+சூரியன் சேர்க்கை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணத் தடையை உண்டுபண்ணும்.
12. ஏழாம் இடத்தில் மற்ற கிரகங்களின் தொடர்பின்றி செவ்வாய்+சனி சேர்க்கை இருந்தால் அது மிகக்கடுமையான களத்திரதோஷம் ஆகும்.
இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications