ஆடி அமாவாசைக்கு என்ன சிறப்பு.. யாரெல்லாம் விரதமிருக்கலாம்.. என்ன செய்யலாம்? செய்யக்கூடாது
மதுரை: ஆடி அமாவாசை போன்ற விரத நாட்களில் தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கி விடும். இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதனால் ஆடி அமாவாசை விரதத்தை யாரெல்லாம் இருக்க வேண்டும், அன்று ஆண்கள் என்ன செய்ய வேண்டும், பெண்கள் என்ன செய்ய வேண்டும் யாரெல்லாம் தர்ப்பணம் தரலாம் என்று பார்க்கலாம்.
பித்ரு தர்ப்பணத்தின் பலன்: முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலமும் ஆத்மசக்திகளும் கிடைக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம். நாம் செய்யும் பித்ரு தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் ஆடி அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை சிறப்பு: ஒவ்வொரு அமாவாசையன்றும் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். ஆடி அமாவாசையானது மறைந்த நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்படும் நாளாகும். எனவேதான் தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னோர்களுக்கு படையல்: அமாவாசை நாளில் நாம் சைவ உணவுகளை பெரும்பாலும் சமைக்க வேண்டும். அமாவாசை விரதத்திற்கு சமைக்கும் போது கண்டிப்பாக பூசணிக்காய், அகத்திக்கீரை, வாழைக்காய் உணவில் சேர்க்க வேண்டும். முதலில் முன்னோர்களுக்கு படையிட்டு, பிறகு காகத்திற்கு சாதம் வைத்து விட்டு, யாராவது இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்கி விட்டு தான் அமாவாசை விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.
யாரெல்லாம் விரதம் இருக்க வேண்டும்: பெற்றோரை இழந்த ஆண்கள், மனைவியை இழந்த ஆண்கள். அப்பா இருந்து, அம்மா மட்டும் இல்லை என்றாலும் அமாவாசை விரதம் இருக்க வேண்டும். அப்பா தர்ப்பணம் கொடுத்தாலும் அந்த குடும்பத்தில் உள்ள மகனும் அம்மாவிற்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவருடைய கடமை. அம்மா உயிருடன் இருந்து அப்பா மட்டும் இல்லை என்றாலும் அப்போதும் அவருடைய மகன் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கணவனை இழந்த பெண்களும் அமாவாசை விரதம் இருந்து படையல் போடலாம்.
பசுவிற்கு அகத்திக்கீரை: அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களுக்கு கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றுவது போல கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுக்க வேண்டும்.

பெண்கள் தர்ப்பணம் தரலாமா: கணவனை இழந்த பெண்கள் மட்டுமே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் ஒருபோதும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. சுமங்கலிப் பெண்கள் அமாவாசை நாளில் பட்டினியுடன் சமைக்கக் கூடாது. நன்றாக சாப்பிட்டு விட்டு நிறைந்த வயிற்றுடனேயே விரதத்திற்கான உணவு சமைக்க வேண்டும். அமாவாசை அன்று இரவு உணவின்போது கண்டிப்பாக ஒரு கைப்பிடி அளவாவது அன்னம் சாப்பிட வேண்டும்.
என்ன செய்யக்கூடாது: அம்மா- அப்பாவிற்கு ஒரே பெண் குழந்தை மட்டும் தான் என்றாலும் சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் தரக்கூடாது. அன்றைய தினம் கோவிலுக்கு சென்று, தாய்- தந்தையை நினைத்து பிரார்த்தனை செய்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடலாம். அங்கு யாராவது ஒருவருக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம். வீட்டிற்கு வந்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து யாரையாவது இரண்டு பேரை வீட்டிற்கு அழைத்து அன்னதானம் கொடுக்கலாம்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications