விளக்கு தீபம் ஏற்றுவதற்கும் கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
சென்னை: நெய் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எப்படியும் செய்யலாம் என நினைக்கக் கூடாது. இறைவனுக்கு நேர்த்தியானதை சிரத்தையுடன் செய்ய வேண்டும். அதற்காக காசு, பணம், செலவு செய்ய வேண்டியதில்லை. பூஜை , புனஸ்கார முறைகளை கற்று தேற வேண்டும்.

இது குறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் பாஸ்கர் சேதுபதியின் பதிவில் கூறியிருப்பதாவது: தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் 16 விதம், 32 விதம், 64 விதம் என்பதாக வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அனைத்து விதமான பூஜைகளிலும் (நெய்) தீபம் காண்பிப்பதும், கற்பூரம் காண்பிப்பதும் கட்டாயம் உண்டு.
தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல். அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம்.
அதன் பிறகுதான் பக்தன் இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்வதற்காகக் காண்பிக்கப்படும், கற்பூரம் ஏற்றி காண்பிக்கும் கற்பூர உபசாரம். தீபம் ஏற்றி வழிபாடு, கற்பூரம் காண்பித்து வழிபாடு இரண்டும் வெவ்வேறான பூஜா உபசாரங்கள்.
தற்சமயம் சில கோவில்களில் சில இடங்களில் (கற்பூரத்தால் அந்த இடம் மாசுபடுவதாக, தவறாக எண்ணிக் கொண்டு) இறைவனுக்கு கற்பூரம் காண்பிக்க வேண்டிய சமயத்திலும் கூட, தீபத்தையே ஏற்றிக் காண்பிக்கப்படுகிறது.
ஆனால், இவை இரண்டுக்கும் தனித்தனியே வெவ்வேறு பலன்கள் உண்டு. காந்திர் தீபம் இறைவனுக்கு எவ்வளவு தீபங்கள் ஏற்றுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்தனின் மனதிலும், வாழ்விலும், குடும்பத்திலும் ஒளிப்பிரகாசம் ஏற்படும்.
கற்பூரம் காண்பிப்பதால் மனதிலுள்ள அழுக்குகள் விலகி, மனம் இறைவனிடமே ஒன்றிவிடும். தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது அந்த தீபத்தில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படாது.
கற்பூரம் காண்பிக்கும்போது, அந்தக் கற்பூரம் சிறிது சிறிதாக உருகிக் கரைந்து போகும். இறுதியில் கற்பூரம் முழுவதுமாக எரிந்து போய் எதுவும் மீதமிருக்காது. கற்பூரத்தைப் போல் பக்தர்கள் இறைவனிடத்தில் மனதை செலுத்த வேண்டும். மனது கற்பூரம்போல், கரைந்துவிட வேண்டும்.
மனது கரைந்தால், தான் எண்ணும் எண்ணம் விலகி இறைவனுடனே ஜோதி ஸ்வரூபமாகக் கலந்து விடும். இதையே இறைவன் பக்தனுக்கு அருளுவார். இந்தத் தத்துவத்தை உணர்த்தவே இறைவனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications