விளக்கேற்றிய திரிகளை என்ன செய்யலாம்? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விளக்கேற்றியதும் மீதமிருக்கும் திரியில் என்ன செய்யலாம் தெரியுமா? இதை செய்தால் உங்க வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் அனைத்தும் ஒழிந்துவிடும்.

பொதுவாக வீடுகளில் மாலை வேளைகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். ஊதுபத்தி ஏற்றாவிட்டாலும் மாலை 6 மணிக்கு விளக்கேற்றினால்தான் லட்சுமி கடாட்சம் என்பார்கள்.

spirtuality

5 எண்ணெய் கலந்த எண்ணெய்யையோ அல்லது வெறும் நல்லெண்ணெய்யையோ அல்லது பசும் நெய்யையோ வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அது போல் பண்டிகை காலங்கள், நாள் கிழமைகளிலும் விளக்கேற்ற வேண்டும்.

பஞ்சு திரியை கொண்டுதான் விளக்கேற்ற வேண்டும். எப்போதும் விளக்கானது கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ ஏற்ற வேண்டும். இந்த திரியும் பஞ்சு திரியாக இருத்தல் வேண்டும். தீபம் ஏற்றினால் அது திரி முழுவதும் எரிய கூடாது என்பார்கள். எனவே தீபம் ஏற்றியதும் சில மணி நேரம் எரியவிட்டுவிட்டு பிறகு குளிர வைக்க வேண்டும்.

அதாவது எரியும் போது விளக்கின் திரியை பின்னோக்கி இழுத்து எண்ணெயில் தோய்த்துவிட்டால் தீபம் குளிர்ந்துவிடும். ஏற்றிய திரியையே ஏற்றக் கூடாது. இதனால் தினமும் திரியை மாற்ற வேண்டும். அவ்வாறு தினமும் மாற்று திரியை என்ன செய்யலாம் என்பது குறித்து குவோராவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது:

விளக்கேற்றும் திரியை என்ன செய்வது தெரியுமா?

* தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும், அல்லது வாரம் ஒரு முறை மாற்றினாலும் உபயோகித்த திரிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து வைத்து வாருங்கள்.

* கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாகப் பார்த்து உட்கார வையுங்கள்.

* இதனை இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் தூங்கச் செல்லும் முன் செய்வது நல்லது. அந்த திரிகளைத் தூபக் காலில் போட்டுக் கொள்ளுங்கள்.

* பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழித்து விடுங்கள்.

* திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனைக் கொளுத்தி விடுங்கள்.
திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அல்லது தண்ணீர் ஊற்றி சமையலறை சிங்கில் ஓட விட்டு விடுங்கள்.

* திரிகள் முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும். உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நன்மை கிடைக்கும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+