கோதுமை விளக்கு பரிகாரம்.. அரசு வேலை வேணுமா? வெற்றிகளை பெற கோதுமை பால்.. நன்மையை தரும் கோதுமை தானம்
சென்னை: பெண்கள் தங்களது கையால் செய்யக்கூடிய காரியம் எதுவானாலும் அது விருத்தி அடையும் என்பது நம்பிக்கையாகும்.. எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அதை வீட்டிலுள்ள பெண்களே தங்கள் கையால் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் என்பதால், மகாலட்சுமிக்குரிய அத்தனை வழிபாடுகளையும் பெண்கள் செய்யும்போது கூடுதல் பலன் கிடைக்கும்.. அந்தவகையில், கோதுமை பரிகாரம், கோதுமை தானம் பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பொங்கல் தினத்தன்று, ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்வது சிறந்தது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.. ஏனெனில், சூரிய பகவானுக்கு கோதுமை மிகவும் பிடிக்கும். கோதுமை பண்டங்களை அவருக்கு நைவேத்யம் செய்வதும் இதற்காகத்தான்.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை நினைத்து வழிபாடு செய்தால் வீட்டில் நிதி நெருக்கடியை தவிர்க்கலாம்..

கோதுமை விளக்கு
செய்யக்கூடிய காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டுமானால், ராகுகாலத்தில் விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். இந்த கோதுமை விளக்கை ஏற்றும்போது, இன்னல்கள் தீர்ந்து, பதவி உயர்வு கிடைக்கும்.. தலை மற்றும் கண்கள் சம்பந்தப்பட்ட நோய்களை போக்குபவர் சூரிய பகவான் என்பதால், கோதுமையினால் விளக்கு ஏற்றி உங்கள் வேண்டுதலை கோரலாம்.
அதாவது, ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரம் 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரைக்குள், விளக்கேற்ற வேண்டும்.. கோதுமையை ஒரு கைப்பிடி எடுத்து, தரையில் பரப்பி, அதன்மீது மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சிகப்பு துணி, தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும்.
பிறகு சூரிய பகவானை நினைத்து உங்களது வேண்டுதலை சொல்லி, பிரார்த்திக்க வேண்டும்... மறுநாள் திங்கள்கிழமை பசுவுக்கு அகத்திக்கீரை, தவிடு, புண்ணாக்கு தந்து வரவேண்டும். ஞாயிறுகளில் இந்த விளக்கை ஏற்றி வரும்போது, நிச்சயம் உங்களது கடன், இன்னல்கள் தீர்ந்து வாழ்வில் மாற்றம் தென்பட ஆரம்பிக்கும்.
அதேபோல பணக்கஷ்டம் தீர்ந்து, குடும்பம் செழித்தோங்க மற்றொரு கோதுமை பரிகாரத்தை செய்யலாம்.. இதை பெண்கள் தங்கள் செய்யும்போது, பூரண பலன் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை பூஜை
அதாவது, வெள்ளிக்கிழமையில் செய்யப்படும் பூஜையின்போதுவழக்கமான ,, 1 ரூபாய் நாணயத்தை மகாலட்சுமி தாயின் பாதங்களில் வைத்து பூஜிக்க வேண்டும்.
ஒரு கண்ணாடி பாட்டிலில் 2 கைப்பிடி கோதுமையை போட்டு, அதில், பூஜை செய்த 1 ரூபாய் நாணயத்தை போட்டு புதைத்து மூடி சமையலறையில் ஓரிடத்தில் வைத்து விட வேண்டும். பிறகு, உங்களது கோரிக்கையை சொல்லி வேண்டிக் கொண்டால் போதும். இதை 6 மாதத்துக்கு அப்படியே விட்டுவிட வேண்டும். 6 மாதம் கழித்து, அந்த கோதுமையை பறவைகளுக்கு போட்டுவிட்டு, புது கோதுமையை மாற்றி வைக்கலாம்.
அரசு வேலை நிச்சயம்
அதேபோல அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கோதுமை பால் பரிகாரம் செய்யலாம்.. இதற்கு வீட்டில் வன்னி செடியை வளர்க்க வேண்டும்..பிறகு ஊற வைத்த கோதுமையை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி வரும் வரும் பாலை, வீட்டில் வளர்த்து வரும் வன்னி மரத்திற்கு ஊற்றிவிடவேண்டும்.
வாரம் ஒருநாள் கோதுமை பாலை வன்னி செடிக்கு ஊற்றி, அந்த செடி சிறிது வளர்ந்ததுமே சிவன் கோயிலுக்கு தானமாக தந்துவிடலாம். அந்த வன்னி மரத்தை உங்கள் கைகளாலேயே நட்டு வைத்து, அது நன்கு வளரும்வரை தேவையானதை செய்ய வேண்டும். இதனால் அரசு வேலை கிடைக்குமாம்.
சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமை தானமாக தரலாம்... கன்னி ராசிக்காரர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுத்து வந்தால் முன்னேற்றம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications