தைப்பூசம் எப்போது கொண்டாடப்படுகிறது? ஒரு டம்ளர் பால் இருந்தால் போதும்! தலைவிதியையே மாற்றும்
சென்னை: தைப்பூசம் இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை வருவதால் ரொம்ப விசேஷம். இதனால் பக்தர்கள் வீட்டில் பால் காய்ச்சி வழிபாடு நடத்துங்கள் என ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கேட்டுக் கொண்டுள்ளார்.
முருகனுக்கு மிகவும் விசேஷமான தைப்பூசம் என்பது தை மாதத்தில் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து வரக் கூடியதாகும். அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.

தைப்பூசம் எப்போது?: பூச நட்சத்திரமானது பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 6.01 மணிக்கே தொடங்குகிறது. பூச நட்சத்திரம் முடிவடையும் நேரம் பிப்ரவரி 11 ஆம் தேதி மாலை 6.34 மணிக்கு முடிகிறது. எனவே இந்த நேரத்திற்குள் தைப்பூச வழிபாடுகளை முடித்துக் கொள்வது நல்லது.
மேலும் அந்தநாளில் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தனது யூடியூப் சேனலான ஆத்ம ஞான மையத்தில் கூறியிருப்பதாவது: தைப்பூச தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபாடு செய்ய வேண்டும்.
முருகனுக்கு பூஜை: முருகன் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தைப்பூச நாளில் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இதனால் காலை முதல் பூஜைகளை செய்து மாலை 6 மணிக்கு முருகனுக்கு நெய்வேத்தியம் செய்யலாம்.
வீடுகளில் விளக்கேற்றும் போது பழைய திரிகளை தூக்கி போடுறீங்களா? இனி செய்யாதீங்க
முருகனை வழிபடுவது எப்படி: காலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனுக்கு மாலை அணிவித்து முடிந்த அளவிற்கு சிவப்பு நிற பூக்களால் ஆன மாலை அணிவிக்கலாம். இல்லாவிட்டால் மற்ற நிறங்களில் கூட அணிவிக்கலாம். சிலை இருந்தால் பால் அபிஷேகம் செய்யலாம். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் பால் வைத்து வழிபாடு நடத்தலாம்.

தைப்பூசத்திற்கு விரதம் இருப்போர் 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் மாலை அணிந்து கோயில் செல்வார்கள். விரதம் இருக்கும் அன்றைய தினம் நாள் முழுவதும் எதையும் சாப்பிடாமல் இருந்து விரதம் மேற்கொள்ளலாம்.
முடியாதவர்கள் பழம், பால் போன்றவற்றை சாப்பிட்டு விரதத்தை தொடங்கலாம். காலையில் விரதத்தை தொடங்கி மாலை சுவாமி கும்பிட்டதும் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
முருகனுக்கு நெய்வேத்தியம்: முருகனுக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பை படைக்கலாம். குழந்தை இல்லாதவர்கள் விரதம் இருக்கலாம். கடன் தொல்லை, திருமணத் தடை உள்ளிட்டவைகளை தீர்க்கும் தைப்பூசத்தன்று விரதம் இருந்து வழிபடலாம்.
வீட்டில் சாமி கும்பிட்டு விரதத்தை முடிப்பவர்கள் எளிமையாக பால் அபிஷேகம் செய்யலாம். இல்லாவிட்டாலும் ஒரு டம்ளர் பால், இனிப்பு வைத்து படைக்கலாம். சிவப்பு நிற மலர்கள் முருகனுக்கு சூட்டி வழிபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தைப்பூசம் என்பது தலைவிதியையே மாற்றும் என்கிறார்கள். அது போல் 48 நாட்கள் விரதம் இருக்க முடியாவிட்டாலும் 6 நாட்கள் விரதம் இருக்கலாம் என்கிறார்கள்.
எங்கெல்லாம் கொண்டாட்டம்: தைப்பூசம் அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டார். இந்த தைப்பூசத் திருவிழா இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
அது போல் உலக நாடுகளிலேயே தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுவது மலேசியாவில் மட்டும்தான். தைப்பூசத்தன்று முருகன் , நரகாசுரனை வதம் செய்த நிகழ்வும் ஒரு சிறப்பு விழாவாக பழனியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications