வீடுகளில் விளக்கேற்றும் போது பழைய திரிகளை தூக்கி போடுறீங்களா? இனி செய்யாதீங்க
சென்னை: வீடுகளில் விளக்கேற்றும் போது பழைய திரியை மாற்றிவிட்டு புதிய திரியை மாற்றும் போது அந்த பழையதை தூக்கி போடாமல் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் கௌசி எனும் ஐடியில் வெளியான பதிவில் கூறியிருப்பதாவது: தெய்வங்களை சாதாரணமாக வழிபடுவதை விட விளக்கேற்றி வழிபடுவது மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தெய்வத்தின் படமோ, சிலையோ இல்லாத பட்சத்தில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வழிபட்டால் நாம் வேண்டும் குறிப்பிட்ட அந்த தெய்வம் விளக்கின் சுடரில் ஆவாகணம் ஆகி அல்லது எழுந்தருளி நமக்கு அருள் செய்வதாக நம்பிக்கை.

விளக்கு என்பது தெய்வீக சக்தி வாய்ந்தது என்பதால் விளக்கேற்றி வழிபடும் இடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, தெய்வீக ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை.
விளக்கேற்றுவது நம்முடைய கலாச்சாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இருந்தாலும் விளக்கேற்றுவதில் பலருக்கும் தொடர்ந்து பல சந்தேகங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது.
எந்த திசையில் விளக்கேற்ற வேண்டும், எத்தனை முகங்கள் விளக்கேற்ற வேண்டும், எந்த உலோகத்தால் ஆன விளக்கை ஏற்ற வேண்டும் போன்ற பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்தாலும், விளக்கேற்றிய பிறகு வாரத்திற்கு ஒரு முறையாவது விளக்கினை சுத்தம் செய்வோம். அப்படி சுத்தம் செய்யும் போது விளக்கேற்ற பயன்படுத்திய திரியை என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது.
சிலர் தினமும் விளக்கேற்ற பயன்படுத்தும் திரியை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சிலர் திரி முழுவதுமாக எரியும் வரை பயன்படுத்துவார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் விளக்கை சுத்தம் செய்யும் போது மட்டுமே பழைய திரிகளை மாற்றி விட்டு, புதிய திரியை மாற்றுவார்கள்.
எப்படி மாற்றினாலும் விளக்கேற்ற ஒருமுறை பயன்படுத்திய திரியை என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும் அல்லது வாரம் ஒருமுறை மாற்றினாலும் உபயோகித்த திரிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து வைக்க வேண்டும். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாகப் பார்த்து உட்கார வைத்து இந்த திரிகளை பயன்படுத்தி திருஷ்டி சுத்த வேண்டும். இரவு சாப்பிட்டு முடித்த பிறகு தூங்கச் செல்வதற்கு முன்பாக, திரிகளை தூபக் காலில் போட்டு, அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி கழிக்க வேண்டும்.
திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனைக் கொளுத்தி விடுங்கள். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அல்லது தண்ணீர் ஊற்றி சமையலறை சிங்கில் ஓட விட்டு விடுங்கள்.
திரிகள் முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் எரிந்து சாம்பலாகி விடும். உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நன்மை கிடைக்கும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக திருஷ்டி கழிக்க பூசணிக்காய், கற்பூரம், எலுமிச்சை பழம், கல் உப்பு, மிளகாய் உள்ளிட்டவைகளில் சுத்தி போடுவது வழக்கம். அந்த வகையில் எரிந்த திரிகளை கொண்டும் சுத்தி போடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மண்ணை சாப்பிட்டாலும் மறைவாக சாப்பிடணும் என சொல்வார்கள். எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் திருஷ்டி கழிப்பது என்பது அவசியமானதொன்று!
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications