புத்தர் சிலையின் தலையில் அதென்ன 108 நத்தைகள்? புத்தர் சிலைகளை வீட்டில் இப்படிதான் வெக்கணும்.. வாவ்
சென்னை: புத்தர் சிலையை வீடுகளில் வைத்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் என்னென்ன தெரியுமா? வீட்டு வாயிலில் வைத்திருக்க வேண்டிய புத்தர் சிலை எது? ஏன் தெரியுமா?
புத்தர் ஒருநாள் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபோது, அதே சிந்தனையில் மூழ்கிவிட்டர்.. இதனால், சூரியக்கதிர்கள் புத்தரின் தலையில் படர்ந்தன.. அந்த நேரத்தில், ஒரு நத்தை தரையில் சென்று கொண்டிருந்தது.

புத்தரின் தியானத்தை கவனித்த நத்தை, சூரியக்கதிர்களால் கவனச்சிதறல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், உடலிலுள்ள உஷ்ணமும், வெளியிலிருந்து உஷ்ணமும் புத்தரை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக, சிறிதும் யோசிக்காமல், புத்தரின் தலை வரை சென்று அமர்ந்தது.. இதைப்பார்த்த மற்ற நத்தைகளும், புத்தரின் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டன.. நத்தைகளின் ஓடுகள் புத்தரின் தலையை சூழ்ந்து கெர்ணடதால், பார்ப்பதற்கு நேர்த்தியான தொப்பி போல் காணப்பட்டன.
குளிர்ச்சி: நத்தையின் குளிர்ச்சியான மற்றும் ஈரமான உடல்கள் புத்தரின் தியானத்தை மணிக்கணக்கில் தொடர உதவியது... அத்துடன், சூரியக் கதிர்களின் கடுமையான வெப்பத்தால் நத்தைகள் காய்ந்து இறந்தன .. மாலையில், புத்தர் தன்னுடைய தியானத்தை கலைத்து பார்த்தபோது, 108 நத்தைகளும் தங்கள் உயிரையும் துறந்து, கவசம் போல தன்னை காத்ததை அறிந்தார்... அந்தவகையில், நத்தைகளின் தியாகத்தை நினைவூட்டும் வகையில்தான், புத்தர் சிலைகளிலும், அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார்கள்.
இயல்பாகவே புத்தர் சிலையை பார்க்கும்போது, ஒருவித அமைதியும், சாந்தமும் தென்படும்.. புத்தர் சிலையை பார்க்க பார்க்க, நம்முடைய மனதிலும் நல்லெண்ணமும் கருணையும் பிறக்கும்..
புத்தர் சிலை: எனவே, அமைதி முகம் கொண்ட இந்த புத்தரின் சிலை முன்பு தியானம் செய்வது, என்பது நம்முடைய மனத்தையும் அமைதியாக வைத்திருக்க உதவும். அந்தவகையில், வீடுகளில் புத்தரின் சிலைகளை வைத்திருப்பது, அமைதி, செழிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், வாஸ்து பிரகாரம், புத்தர் சிலையை பார்த்து வைத்தால், நேர்மறை ஆற்றல் குடும்பத்தில் பெருகும். எனவே, புத்தரின் சிலையை கிழக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். கிழக்கு திசையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகவலை அகலும்.. அத்துடன் செல்வம் பெருகி, வெற்றிகள் கிடைக்கும்.. முக்கியமான நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.
வடக்கு திசை: அதேபோல, வடக்கு திசை நோக்கியும் வைக்கலாம்.. குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமானால், கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசை நோக்கி சிலையை வைக்கலாம். கைகளை மடக்கிய புத்தர் சிலைகளை பூஜை அறையில் வைக்கலாம்.
சிரிக்கும் புத்தர் சிலையை ஹால், டைனிங் ஹால், படுக்கையறை என எங்கு வேண்டுமானாலும், தென் கிழக்கு திசையை நோக்கி வைத்தால், எதிர்பாராத அதிர்ஷ்டமும், வருமானமும் வரும் என்பார்கள். மனதை லேசாக்கவும், மன அழுத்தம் குறைக்கவும், இந்த சிரிக்கும் புத்தர் சிலை பேருதவி புரிகிறது..
சிரிக்கும் புத்தர்: அதேபோல, எதிர்மறை ஆற்றலை தடுக்கக்கூடிய சிரிக்கும் புத்தர் சிலையை, நுழைவு வாயிலில் வெளிப்புறம் பார்த்ததுபோல் வைக்க வேண்டும். மற்ற புத்தர் சிலைகள், வீட்டின் உட்புறத்தை நோக்கி வைக்க வேண்டுமாம்.
இன்னும் இதுபோல, பல வகையான புத்தர் சிலைகள் உள்ளன... ஒவ்வொன்றுக்கும், சரியான திசைகளும், அதன் பலன்களும் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், எந்த புத்தர் சிலையாக இருந்தாலும், அதனை முறையாக பராமரிக்க வேண்டும். இதுகுறித்தும் வாஸ்துவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. புத்த மதத்தில் இந்த சிலையை கடவுளாக மதித்து வழிபடுவதால், ஒருபோதும் இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.
கடைப்பிடிக்க வேண்டியவை:
- வீடுகளில் சிலைகளை வைத்திருப்போர், எப்போதுமே ஜன்னல் அல்லது கதவுக்கு எதிரே புத்தர் சிலையை வைக்கக்கூடாது.
- சிறிய மரச்சாமான்களிலும், ஃபிரிட்ஜ் மீதோ அல்லது பெரிய சாதனங்களுக்கு பக்கத்திலோ வைக்கக்கூடாது... ஏனென்றால், பெரிய பொருள்கள் நேர்மறை அதிர்வுகளை தடுத்து விடுமாம்..
- புத்தர் சிலையை தரையில் வைத்து வழிபட கூடாது. -தரைத்தளத்திலிருந்து குறைந்தது 3 முதல் 4 அடி உயரத்தில் வைத்திருக்க வேண்டும். சுத்தமான மேஜை மீதோ அல்லது அலமாரியிலோ வைக்கலாம்.. குழந்தைகள் படிக்கும் அறையிலும் வைக்கலாம்..
- - புத்தர் சிலைக்கு முக்கியத்துவம் தரும்வகையில், மற்ற பொருட்களிலிரந்து உயரமான இடத்திலேயே வைக்க வேண்டும்.
- கிச்சன், பாத்ரூம், ஸ்டோர்ரூம், வாஷிங் ரூம்களில் போன்ற இடங்களில் வைக்கக்கூடாது
- புத்தர் சிலையும், புத்தர் சிலைகள் வைக்கப்படும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
- வெளிச்சம் நிறைந்த இடத்தில் சிலையை வைக்க வேண்டும்..
- வெள்ளை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறங்கள்ல புத்தர் சிலையை அழகுப்படுத்தலாம்.
- புத்தர் சிலைகளுக்கு அருகில், பித்தளை, அல்லது பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் நீரை நிரப்பி, ஏதாவது பூக்களையும் போட்டு வைக்கலாம்
- புத்தர் சிலையைச சுற்றியுள்ள காற்றை சுத்தப்படுத்துவதற்காக, மெழுகுவர்த்திகள் அல்லது ஊதுபத்திகளை பயன்படுத்தலாம்.
நேர்மறை ஆற்றல்: தூங்கும் கோலத்தில் உள்ள புத்தர் சிலையை, மேற்கு திசையை நோக்கி வைக்கலாம்.. இதனால், வீட்டில் அமைதி நிலவும்.. மேற்கு நோக்கியும், வலது பக்கம் சாய்த்தும் வைக்க வேண்டும்.. இப்படி வைப்பதால், அமைதி, நேர்மறை ஆற்றல் கிடைக்கிறது.. அதேபோல, புத்தர் சிலையை வீட்டின் வாயிலில் வைத்தாலும், நன்மையை பிறக்கும்... குழந்தைகள் இருக்கும் அறையில் புத்தர் சிலையை வைத்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தை கூட அமைதித்தன்மையை பெற்றுவிடுவார்களாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications