ஐப்பசி மாத பவுர்ணமியில் மட்டும் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் ஏன்? மெய்சிலிர்க்க வைக்கும் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவலிங்கத்திற்கு மட்டும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த காரணத்தை அறிந்தால் உங்களுக்கு மெய்சிலிர்த்து போகும்.

மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் சித்ரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. அது போல் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

spirtuality annabishegam sivan

சிவன் கோயில்களில் தினந்தோறும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். இந்த அன்னாபிஷேகத்தை கண் குளிர பார்த்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பார்கள்.

அது போல் கோடி சிவலிங்கங்களை பார்த்த புண்ணியமும் கிடைக்கும். இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த நாளுடன் ஐப்பசி மாதம் முடிந்து அடுத்தது கார்த்திகை மாதம் தொடங்குகிறது.

நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை 3.53 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 3.42 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. இந்த பவுர்ணமி தினத்தன்று அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களும் இணைந்து வருகிறது.

இது போன்ற சிறப்பான நாளில் சிவன் கோயில்களில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.லிங்கம் முழுவதும் அன்னம் சாத்தப்பட்டிருக்கும். இந்த அன்னத்தை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும்.

வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சந்திர பகவானின் சாபம் நீங்கப்பட்ட நாளும் ஐப்பசி மாத பவுர்ணமிதான். இந்த நாளில்தான் சந்திரனுக்குரிய தானியமான அரிசியில் சிவனுக்கு அன்னமிட்டு அபிஷேகம் செய்தால் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும். பிரதோஷத்திற்கு பால், இளநீர், தேன், தயிர் உள்ளிட்டவை வாங்கித் தருவது போல் அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கிக் கொடுத்தால் நம் வீட்டில் உணவு தட்டுப்பாடு இருக்காது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அது போல் தரிசனத்திற்கு செல்லும் வழியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லாம் சரி, சிவலிங்கத்திற்கு அன்னத்தால் மட்டும் அபிஷேகம் செய்யப்படுவது ஏன் என்பதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா?

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில்தான் சந்திரன் தன்னுடைய சாபம் நீங்கப் பெற்றார். பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று மட்டும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அதாவது சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. காற்றின் துணையுடன் தீ எரிகிறது.

நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்சபூதங்களின் சேர்க்கை என்பதால்தான் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+