திருப்பதி மொட்டை! முடி காணிக்கை கொடுப்பது ஏன் தெரியுமா? வேண்டிகிட்டா வாங்காம விடமாட்டார் ஏழுமலையான்
திருப்பதி: திருப்பதியில் முடி காணிக்கை கொடுப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? இந்த நடைமுறையை யார் தொடங்கி வைத்தது? முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டி கொண்டால் நிச்சயம் கொடுத்தே ஆக வேண்டும்.
திருப்பதி என்றாலே எல்லோரின் நினைவுக்கு வருவது லட்டு, மொட்டைதான். லட்டு பிரசாதம் திருப்பதிக்கென காலம் காலமாக செய்யப்பட்டு வரும் பிரசாதம் ஆகும். மொட்டை தலையை பார்த்ததும் என்னப்பா திருப்பதியா, எங்க லட்டு என கேட்பார்கள்.

அது போல் திருப்பதிக்கு நிறைய சிறப்புகள் உள்ளன. அவற்றில் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் பெருமாளை சுற்றி எப்போதும் கடல் அலைகளின் ஓசைகள் கேட்டுக் கொண்டே இருக்கும் என்கிறார்கள். அது எப்படி என்பது இன்று வரை தெரியவில்லை.
ஏழுமலையானின் சிலை எப்போதும் ஈரப்பதத்தோடு இருக்கும் என்கிறார்கள். அதை அர்ச்சகர்கள் எப்போதும் ஒத்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அது பெருமாளின் வியர்வை என சொல்லப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் முன்பு அணையா விளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டே இருக்கு. அந்த விளக்கை யார் ஏற்றினார் என இதுவரை தெரியவில்லை.
வாரத்திற்கு ஒரு முறை பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட அணிகலன்கள் மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்படும். அப்போது அந்த நகைகள் சூடாக இருக்கும் என்கிறார்கள். அது போல் திருப்பதிக்கு போனாலே பலர் மொட்டை போடுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.
இது ஏன் என்ற வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். பெருமாள் பூலோகத்திற்கு பயணம் செய்த போது தனது கூந்தலை இழந்துவிட்டாராம். இதற்காக நீலிதேவி என்ற இளவரசிதான் தனது முடியை காணிக்கையாக கொடுத்து ஏழுமலையானை வழிபாடு செய்துள்ளார். இதனால் மகிழ்ந்த ஏழுமலையான் முடியை காணிக்கையாக கொடுத்து வழிபாடு நடத்துபவர்களுக்கு வேண்டுதலை நிறைவேற்றுவேன் என வரம் அளித்துள்ளார்.
இதனால்தான் முடி காணிக்கையை பக்தர்கள் தொன்று தொட்டு கொடுத்து பெருமாளை வணங்கி வருகிறார்கள். அது போல் முடி காணிக்கை கொடுக்கிறேன் என சொல்லிவிட்டு கொடுக்காமல் இருக்கவே கூடாது. உண்டியல் காணிக்கையை கூட விட்டுவிடுவார். ஆனால் பெருமாள் முடி காணிக்கையை மட்டும் விடவே மாட்டார். அந்த வேண்டுதலை நினைவுப்படுத்தி முடி காணிக்கையை பெற்று விடுவார்.












Click it and Unblock the Notifications