துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றுவது ஏன்?
சென்னை: துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவது ஏன்?
எலுமிச்சை பழம் உடல்நலனுக்கு உகந்த பழம். இது குளிர்ச்சியை தரும். மேலும் இது ஆன்மீக ரீதியாகவும் நல்ல பலன்களை கொடுக்கிறது. கோயில்களில் எலுமிச்சை பழம் கொடுக்கிறார்கள். அது போல் கண் திருஷ்டிக்காகவும் இந்த எலுமிச்சைகள் பயன்படுகின்றன.

அம்மன் கோயில் திருவிழாக்களில் சாமியாடிகளுக்கு அருள் வருவதற்காக எலுமிச்சை பழத்தை பிழிவார்கள். பொதுவாக எலுமிச்சை பழத்தை தேவகனி என்றும் தெய்வ கனி என்றும் அழைப்பார்கள்.
எலுமிச்சை பழம் நல்ல சக்தியை பெற்று தீய சக்தியை ஏவிவிடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில்களில் இந்த எலுமிச்சை பழங்கள் நல்ல சக்தியை கொடுக்கின்றன. இதே வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை கெட்ட சக்தியை ஒழித்துவிட்டு நேர்மறை சக்தியை அதிகரிக்கிறது.
அது போல் இந்த எலுமிச்சைக்கு வேத மந்திரங்களை உள்ளே கிரகித்துக் கொள்ளும் சக்தியும் உண்டு. இந்த எலுமிச்சை பழங்கள் நல்ல காரியங்கள் கை கூட உதவுகிறது. தெய்வ வழிபாட்டில் இந்த எலுமிச்சையை கொண்டு மாலையாக சாத்தும் பழக்கமும் உண்டு. துர்க்கை அம்மன், பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களுக்கு இந்த எலுமிச்சை மாலை சாத்துவார்கள்.
உக்கிர தெய்வங்களான துர்க்கை, பத்ரகாளி ஆகிய தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சாத்துவதால் நீண்ட நாள் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும் என்று சொல்வதுண்டு. அது போல் துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சையால் விளக்கு ஏற்றினாலும் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
துக்க நிவாரணி- துன்பங்களை தீர்ப்பவள் துர்க்கை என கூறப்படுகிறது. நவக்கிரகங்களல் முக்கியமானவரான ராகுவின் அதிபதியும் துர்க்கை அம்மன்தான். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால், ஜோதிடத்தில் இருக்கும் பிரச்சினை விலகும் என்பது ஐதீகம். மேலும் துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.
எலுமிச்சையை பாதியாக அறுத்து! ஒரு மூடியில் குங்குமம்! மறுமூடியில் மஞ்சள் தடவி வைப்பது ஏன்?
ராகு காலத்தில் விளக்கு என்றால் அதற்கும் சில கிழமைகள் உள்ளன. அந்த கிழமைகளில் வரும் ராகுல் காலத்தில்தான் எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை மாலை 3 டூ 3.30 மணி வரையும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் ராகு காலத்தில் விளக்கேற்றலாம்.
இந்த கிழமைகளில் விளக்கு ஏற்றும் போது துர்க்கையின் அருள் நமக்கு நேரடியாக கிட்டும் என்கிறார்கள். எலுமிச்சையை இரண்டாக அறுத்து அதன் சாற்றை மரத்தில் விட்டுவிடுவார்கள். பின்னர் அதை அப்படியே திருப்பி, அதாவது மஞ்சள் நிறத்தை வெளிப்புறமாக திருப்பி அதன் ஓரங்களில் மஞ்சள், குங்குமம் இட்டு விளக்கேற்றினால் நமது வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என்பது ஜோதிட ரீதியில் தெரிவிக்கப்படுகிறது. திருமணத் தடை, குழந்தை பாக்கியத்திற்கு இந்த எலுமிச்சை விளக்கு கைக் கொடுக்கும் என்கிறார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications