திருப்பதி லட்டு உள்பட கோயில் பிரசாதங்களில் பச்சை கற்பூரத்தை ஏன் சேர்க்கிறார்கள்?
சென்னை: கோயில் பிரசாதங்களில் ஏன் பச்சை கற்பூரம் சேர்க்கிறார்கள் தெரியுமா? இதை சாப்பிட்டால் தொண்டையில் தொந்தரவு ஏற்படுவது ஏன்?
இதுகுறித்து கோரா இணையத்தில் ஆறுமுகம் குருசாமி என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஆமாம். பச்சைக் கற்பூரம் கலந்த லட்டு, ஊறுகாய் உண்பது நல்லதல்ல. அமிர்தாஞ்சனம், விக்ஸ்வேபரப், டாபர் ஆயூர்வேதிக் பற்பசைகளில், ரூம் ரெஃப்ரஷனர், கற்பூரம் கலந்திருப்பார்கள். சில தடை செய்யப்பட்ட இருமல் டானிக் களிலும் உபயோகப்படுத்துவர். கற்பூரம் வெளிஉடம்பில் பூசும் கிரீம், மூட்டு வலிகளுக்கு எண்ணெயுடன் கலந்து தடவுவது அல்லது மஜாஜ் செய்வது ஆயூர்வேத மருந்து.
வாய் எரிச்சல், தொண்டை கரகரப்பு, வயிற்றுவலி, அஜீரணம், மூச்சடைப்பு நுரையீரல் , சம்பந்தமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதிகம் உட்கொண்டால் வயிறு, குடல் பகுதிகளில் உள்ள நல்ல, கெட்ட பாக்டீரியாக்களை முழுவதும் அழித்துவிடும்.
ஏன் உணவுப்பொருட்களில் கலக்கிறார்கள் ?

தென்னிந்தியாவின் சிலபகுதிகளில் மணம், ருசிக்காக சாம்பார், ரசங்களில் வெல்லம், சர்க்கரை , கருவேப்பிலை கலப்பர். மற்றும் ஊறுகாய், லட்டு, இனிப்பு பதார்த்தங்களில் வேறுபாடு, மணம், ருசிக்காக கற்பூரத்தைக் கலப்பர். வட இந்தியாவில் வெற்றிலை, பாக்குடன் கற்பூரத்தையும் கலப்பர். பிரியாணி ஐடங்களில் பட்டை இலை போன்றவைகளை மணம் ருசிக்காகக் கலப்பர்.
Camphor (C10 H160) பச்சைக்கற்பூரம் இரண்டு வகைகள்.
சமையலில் உபயோகிக்க சாப்பிடக்கூடியவை. எடிபிள். Edible. சாப்பிடக் கூடாதவை. நான் எடிபிள். கற்பூரம் ஆயூர்வேதத்தில் ஒரு மருந்து. பெரும்பாலும் உடலுக்கு வெளியே எண்ணெய் கலந்த பூச்சாக, உபயோகிக்கச் சொல்வார்கள். அதிகமாக நேரடியாக சாப்பிட்டு தின்று உட்கொண்டால் மூச்சுத்திணறல் மரணத்தைக்கூட உண்டு பண்ணக்கூடிய விஷம்.
மறுபடியும் இங்கு இயற்கை மரங்களிலிருந்து தயாரிப்பவை. செயற்கை இரசாயனப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவை என இரண்டு வகைகள். ஆகையால் உங்களுக்கு ஒவ்வாமை, வாய் தொண்டை, வயிறு, எரிச்சல் இருந்தால் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது போல் சஞ்சய் ஐயங்கார் என்பவர் கூறியிருப்பதாவது: பச்சை கற்பூரம் நல்ல வாசனையை கொடுக்கும். இது மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பதில் லட்டில் சர்க்கரை மீதான ஆசையை கட்டுப்படுத்த இது பயன்படுகிறது.
மலை உச்சியின் மீது ஏறும் போது சளியால் மூக்கு அடைத்துக் கொண்டால் அதை சரி செய்ய இந்த பச்சை கற்பூரம் பயன்படுகிறது. பச்சை கற்பூரத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்தில் முடியும். எனவே குறைவான அளவில் பச்சை கற்பூரத்தை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு என ஒரு சக்தி இருக்கிறது என சொல்லப்படுகிறது. பச்சை கற்பூரத்தின் வாசனை வீட்டில் மகாலட்சுமி அருளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களுக்கும் பச்சை கற்பூரம் இருக்க வேண்டும். இதற்கு பணத்தை ஈர்க்கும் குணம் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாகக் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காட்டி வழிபட்டால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications