சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா?
பத்தினம்திட்டா: சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்லும் போதும் அங்கிருந்து வீடு திரும்பும் போதும் தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா? வீட்டை விட்டு கிளம்பும்போது ஐயப்ப மாலை அணிந்த சாமிமார்கள் தேங்காயை உடைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் செல்வார்கள்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள வனத்தில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு ஆண்டுதோறும் 5 முறை மட்டுமே நடைத் திறந்திருக்கும்.

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த சன்னதியை அடைய இரு வழிகள் உள்ளன. பெரு வழி பாதை, சிறு வழி ஆகியவை ஆகும். இது 75 கி.மீ. தூரம் கொண்டதாகும்.
பம்பையில் இருந்து 7 கி.மீ. தூரம் கொண்டது சிறு வழி பாதை. இந்த பாதையை 4 அல்லது 5 மணி நேரத்தில் அடைந்துவிடலாம். தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்கள் 4 வழிகளில் சென்றாலும், பெரும்பாலும் செங்கோட்டை-புனலூர் வழியாக பட்டனம்திட்டா சென்று அங்கிருந்து பம்பை செல்வதையே விரும்புகின்றனர்.
பெருவழிப் பாதை என்று சொல்லப்படும் எரிமேலியில் தொடங்கி, பேரூர்தோடு, காளைகட்டி, அழுதா மலை, அழுதா நதி, கல் இடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, மூக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கலிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என பாதங்களை பதம் பார்க்கும் சிறு கற்கள், உயர்ந்த மரங்களின் வேர்தடங்கள் அடங்கிய கரடு முரடான காட்டு வழிப்பாதையில் நடந்த சென்று பம்பையை அடைய வேண்டும்.
அங்கிருந்து சிறு வழிப்பாதையில் நடந்து சென்று சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை அடைய வேண்டும். அந்த பாதையின் மொத்த தூரம் சுமார் 75 கி.மீ ஆகும். மேற்கண்ட பெருவழிப்பாதை என்பது பெரும்பாலும் கரடு முரடான மலைப்பிரதேச காட்டு வழிப்பாதை என்பதால் குறைந்தபட்சம் 2 நாட்களாவது ஆகும்.
இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு குடும்பத்தினரை விட்டு சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் போது வீட்டிற்கு வெளியே சிதறு தேங்காய் உடைப்பார்கள். அது போல் சுவாமி தரிசனம் பார்த்துவிட்டு வீடு திரும்பியதும் ஒரு தேங்காயை உடைப்பார்கள். இது ஏன் என்பது தெரியுமா?
அதாவது கல், முள் பாதைகளில் தன்னை நாடி வரும் பக்தர்களை ஐயப்பன் பத்திரமாக பார்த்துக் கொண்டு அவர்களை வீட்டிற்கு திரும்ப அனுப்புகிறார். ஆனால் வீட்டை விட்டு கோயிலுக்கு ஆண் சென்றுவிட்ட பிறகு, அவருடைய குடும்பத்தினர் தனியாக இருப்பார்கள்.
எனவே அவர்களை எப்படி பாதுகாப்பது என யோசித்த ஐயப்பன், கருப்பசாமியிடம் போய் "கருப்பா! என்னை நாடி வரும் பக்தர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினரை நீ பத்திரமாக பார்த்துக் கொள். அவர் வந்தவுடன் நீ திரும்ப வந்துவிடு" என்றாராம். அதற்கு கருப்பன், "அவர் சபரிமலைக்கு செல்வதும் வீடு திரும்புவதும் எனக்கு எப்படி தெரியும்" என்றாராம்.
அதற்கு ஐயன், "சபரிமலைக்கு செல்லும் போது வீட்டிலிருந்து கிளம்பும் பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள். அந்த சப்தத்தை கேட்டு நீ அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டதை தெரிந்து கொள். அது போல் சன்னிதானத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஒரு தேங்காய் உடைப்பார்கள். அப்போது நீ திரும்பி வந்துவிடு" என்றாராம். இதனால்தான் இன்றும் பக்தர்கள் தேங்காய் உடைக்கும் பழக்கம் இருக்கிறது.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications