Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவபெருமான் சுடுகாட்டிற்கு ஏன் காவல் இருக்கிறார் தெரியுமா? இதோ பார்வதியிடம் அவரே சொன்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவபெருமான் சுடுகாட்டிற்கு ஏன் காவல் இருக்கிறார் தெரியுமா? இந்த காரணத்தை அவரே பார்வதி தேவியிடம் விளக்கியிருக்கிறார். அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

இதுகுறித்து av tamil story எனும் இன்ஸ்டாகிராம் ஐடியில் கூறியிருப்பதாவது: சிவபெருமான் சுடுகாட்டிற்கு ஏன் காவல் இருக்கிறார் தெரியுமா? பார்வதி தேவிக்கும் இதே கேள்வி எழுந்தது. இந்த பூமியில் எவ்வளவோ இடம் இருக்கையில் நீங்கள் இந்த சுடுகாட்டில் தங்குவதற்கான காரணம் என்ன என பார்வதி, சிவபெருமானிடம் கேட்டார்.

spirtuality sivan parvati

அதற்கு சிவன் சொல்கிறார், எல்லா மனிதர்களும் இறந்த பிறகு வரக் கூடிய ஒரே இடம் சுடுகாடுதான். தான் உயிருடன் இருக்கும் போது கடவுளிடம் வந்து உண்மையான அன்போடு யாரும் வேண்டுவதில்லை.

எனக்கு இதை கொடு, அதை கொடு என்றுதான் வேண்டுகிறார்கள். அவர்கள் இறந்த பிறகு அவர்களை நினைத்து உறவினர்கள் சிறிது காலமே கவலைப்படுகிறார்கள். பிறகு அந்த நபர் சேர்த்து வைத்த சொத்து சுகங்களை தேடி போக ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்போதுதான் அந்த ஆன்மா உணரும், வாழ்நாள் முழுவதும் செல்வத்தை நோக்கி ஓடி வீணடித்துவிட்டோம். மோட்சத்திற்கான புண்ணிய பலனை சேர்த்து வைக்காமல் விட்டுவிட்டோம் என அந்த ஆன்மா கலங்கும். ஆனால் நான் அந்த ஆன்மாவை தனியாக விடமாட்டேன்.

மயான பூமியில் அந்த ஆன்மாவிற்கு துணையாக இருப்பேன். இந்த ஜகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் நானே தந்தையாக இருக்கிறேன். எனவே காயமடைந்து வலியால் துடிக்கும் குழந்தைக்கு என்னை அடைய உதவுவது எனது கடமையாகும். அதனால்தான் நான் ருத்ரபூமியிலே தங்கி அங்கே தவிக்கும் ஆன்மாக்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுடுகாட்டில் ஹரிசந்திரனுக்கு கோயில் இருப்பதாக சொல்வதுண்டு. அந்த கோயிலில் சடலத்தை வைத்து சில பூஜைகளை செய்து பிறகு புதைக்கவோ எரிக்கவோ கொண்டு செல்வார்களாம்.

ஹரிசந்திரா என்ற பழைய திரைப்படத்தில் கூட நன்றாக வாழும் ஒரு ராஜாவுக்கு போதாத காலம் என்பதாலும் அவரை கடவுள் சோதிக்க நினைத்ததாலும் அந்த அரசன் தனது சொத்துகளை இழந்து மனைவி மகனுடன் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்.

அப்போது அவர்களை ஏலம் எடுத்து வீட்டு வேலைக்கு பயன்படுத்துவர். அந்த வகையில் அந்த படத்தில் ஹரிசந்திர மகாராஜாவாக நடித்த சிவாஜி, சுடுகாட்டை பாதுகாக்கும் ஒருவரிடம் வேலைக்கு செல்வார். அது போல் அவரது மனைவியும் மகனும் வேறு இடத்தில் வேலைக்கு செல்வார்கள்.

சிவாஜியின் மனைவியின் திருமாங்கல்யம் அவரது கணவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. சிவாஜி தினமும் இரவு நேரத்தில் சுடுகாட்டில் காவல் காப்பார். வாய்க்கரிசியை சிவாஜியும் அதில் போடப்படும் பணம் உரிமையாளருக்கு என பிரித்து எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு நாள் சிவாஜியின் மகன் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்துவிடுவார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாய், தனது முதலாளியிடம் குழந்தையை புதைக்க பணம் கேட்பார். அவரோ அதெல்லாம் முடியாது என சொல்லிவிடுவார்.

இதையடுத்து இறந்த மகனின் உடலை கொண்டு செல்லும் அந்த தாய், அங்கு புதைக்க முற்படுவார். அப்போது சிவாஜி வந்து தடுப்பார். அவர் சத்யவான் என்பதால் இங்கு புதைக்க காசு கொடுக்க வேண்டும் என கறாராக இருப்பார். ஆனால் அந்த தாயோ தன்னிடம் அது போல் இல்லை என கெஞ்சுவார். அப்போதுதான் அந்த பெண்ணின் முகத்தை பார்க்காத சிவாஜி, என் உரிமையாளருக்கு நான் விசுவாசமாக இருக்க வேண்டும்.

உங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை விற்று பணம் கொண்டு வாருங்கள் என்பார். இதை கேட்ட அந்த தாய், என் கணவருக்கு மட்டுமே தெரியும் திருமாங்கல்யம் இன்று உனக்கு தெரிகிறதா என அழுவார். அப்போதுதான் சிவாஜி, யாரென அந்த பெண்ணின் முகத்தை பார்த்து அதிர்ச்சி அடைவார். இதெல்லாம் ஹரிசந்திரன் பொய் சொல்கிறாரா என பார்ப்பதற்கு தெய்வங்கள் செய்த திருவிளையாடலாக இருக்கும். இது உண்மையில் நடந்த கதை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+