சும்மாவே முளைக்கும் இந்த தப்புச் செடிக்கு இத்தனை மகத்துவமா? வாடாமல்லியை கண்டால் விடாதீர்கள்
சென்னை: வாஸ்து பிரச்சினைகளை தீர்க்க வாடாமல்லி பூக்களும் செடிகளும் அதிகமாக பயன்படுகிறது என்பதால் அதை மாடித் தோட்டங்களிலும் வீடுகளிலும் வளர்ப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
பொதுவாக வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் தேவையில்லாத வாக்குவாதங்கள், வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நல குறைபாடு உள்ளவர்கள் என இருந்தால் வீட்டில் ஏதேனும் வாஸ்து பிரச்சினையா என பார்க்க வேண்டும்.

அதாவது வாழ்க்கையில் முன்னேற ஜாதகத்தின் வலிமை மட்டும் பத்தாது, வீடு, அலுவலகம், தொழிற்சாலை, விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் வாஸ்துவும் முக்கியமானதாகும். இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் முன்னேற்றமானது தடைபடும். இதை நீக்க தாவரங்களை வளர்க்கும் பரிகாரங்களை முன்னோர்கள் நமக்கு அருளியுள்ளார்கள்.
பெண்கள் தங்கள் நேரத்தை சமையலறையில்தான் செலவிடுவார்கள். அதிலிருந்து நிவாரணம் பெற வாடாமல்லி செடியை வளர்த்தெடுக்க வேண்டும். அவற்றை ஒரு முறை வாங்கி வந்து அக்னி மூலையில் பதியமிடுவார்கள்.
இந்த செடியின் பெயர் வாடாமல்லி என்பதால் இதை பராமரிக்காமல் விடலாம் என நினைத்தால் வாடிவிடும். இந்த செடி வாடினால் பெண்களுக்கு உஷ்ணம் ஏற்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். எனவே இந்த செடியை வாடவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் சந்திர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் நீங்கி மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.இந்த வாடாமல்லி பூவை பூஜைக்கு பயன்படுத்தலாம்.சுவாமிக்கும் வைக்கலாம். இதை பலர் காரிய சித்தி பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.
அதாவது ஒரு காரியம் ஈடேற கடவுளுக்கு பூஜை செய்வதாகும். இது குறைந்தபட்சம் 6 நாட்கள் செய்வார்களாம். அப்படி செய்யும் போது தினமும் ஒவ்வொரு பூக்களை பயன்படுத்தக் கூடாதாம். ஒரே பூக்களைத்தான் பயன்படுத்த வேண்டுமாம். இதற்கு இந்த வாடாமல்லி பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள்.
அது போல் இந்த வாடாமல்லி மலர் மீது வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்து தேன் குடிப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மண்ணின் வளத்திற்கும் நன்மை ஏற்படும்.
அது போல் உங்கள் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் சோம்பேறித்தனம் இருந்தால் ஆயுள் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மந்தமான நிலையும் இருக்கும். இப்படி இருந்தால் சங்குப் பூச்செடியை வளர்க்கலாம்.
அது போல் வீட்டின் குடும்பத் தலைவரின் வளர்ச்சி என்பது தடைப்பட்டாலும், தாம்பத்ய வாழ்க்கையில் குறைபாடு ஏற்பட்டாலும் இதிலிருந்து முழுமையான நிவாரணம் பெற கோழிக் கொண்டை பூ செடியை வளர்க்க வேண்டும். உங்கள் வீட்டில் தென் மேற்கு பகுதி எப்போதும் சற்று மேடானதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பகுதி சற்று பள்ளமாக இருந்தால் ராகு பகவானால் பிரச்சினை ஏற்படும்.
வீட்டில் வசிக்கும் கன்னிப் பெண்களிடம் சுய ஒழுக்கத்தை கெடுத்துக் கொள்வர். அதிக பிடிவாதம் இருக்கும். இப்படியிருந்தால் வீட்டில் மருதாணிச் செடியை வளர்க்கலாம். வீட்டில் மன நிம்மதி தொலைந்து வீட்டை விட்டே ஓடி விடலாமா என எண்ண தோன்றும், மேலும் நீதிமன்ற வழக்குகள், காவல் நிலைய விசாரணைகள் என வரிசைக் கட்டும். இதிலிருந்து மீள தொட்டாசிணுங்கி செடியை வளர்க்கலாம்.
அது போல் வீட்டில் பொருளாதார பிரச்சினை, மனக்குறை ஏதேனும் இருந்தால் அவர்கள் மூங்கில் செடியை வளர்க்கலாம்.
இது போன்ற வாஸ்து செடிகள் பற்றிய குறிப்புகள் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை, இவற்றை பின்பற்றுவது அவரவர் சொந்த விருப்பத்தை பொருத்ததாகும்.












Click it and Unblock the Notifications