வாழை மரத்தை வணங்குவது ஏன்? வியாழனுக்கும் - வாழைக்கும் சம்பந்தம்? அடேங்கப்பா பெண்ணுக்கு இவ்ளோ நன்மையா
சென்னை: இளம் பெண்கள் வாழை மரத்தை வழிபடலாமா? எப்படி வழிபட வேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? வியாழக்கிழமைகளில் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
கடவுள்களுக்கு வாழையிலையில் படையல் செய்வது, கடவுளின் ஆசீர்வாதத்தை எளிமையாக பெற முடியும் என்பது ஐதீகமாக உள்ளது. அந்தவகையில், விஷ்ணு, விநாயகர், மகாலட்சுமி, துர்கை போன்ற தெய்வங்களுக்கு வாழையிலையில் படையல் வைப்பார்கள்.

வாழைத்தண்டில் மகாவிஷ்ணுவும் லட்சுமி தாயாரும் வசிப்பதால், விஷ்ணுவுக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்வதால், சகல ஆசிகளையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. இதன்மூலம் திருமண தடைகள் நீங்குவதுடன், குடும்பத்திலுள்ள வறுமையும் நீங்கும் என்பார்கள்.
வாழைப்பழம்: விநாயகருக்கு வாழைப்பழம் பிடிக்கும் என்பதால், விநாயகருக்கும் வாழை இலையில் அர்ச்சனை செய்வதுண்டு. இதனால் குடும்ப கஷ்டங்கள் நீங்கி, புதன் தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
லட்சுமி தேவிக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்தால், பணக்கஷ்டங்களிலிருந்து விடுபடலாம்.. அதேபோல, மா ஜெகதம்பாவிற்கு வாழையிலையில் அர்ச்சனை செய்து, அவரது ஆசிர்வாதத்தை பெறுவதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும்.
பெருமாள்: பெருமாளுக்கும் வியாழக்கிழமைகளில் வாழை மரத்தில் வழிபாடு செய்யலாம். அதாவது, வீட்டிலேயே வாழை மரங்கள் இருந்தால், அல்லது கோயிலுள்ள வாழை மரத்தை பூஜித்து வணங்கி வரலாம்... வியாழக்கிழமையில் குரு பகவானை வழிபடுவதால் செல்வம் சேருவதுடன், திருமண தடைகள் நீங்கும்.. எனவே, கன்னிப்பெண்கள் வியாழக்கிழமையில் விரதம் இருந்து, வாழை மரத்தை சுற்றி வந்து வழிபடலாம்..
ஆனால், வடகிழக்கு திசை நோக்கி பெருமாளை வழிபட்டு, அதற்கு பிறகுதான் வாழை மரத்தை வழிபட வேண்டும்.. ஆனால், தெற்கு, கிழக்கு, தென்மேற்கு திசைகளை நோக்கி பார்த்து வழிபடுவதை தவிர்க்க வேண்டும்.
நெய் விளக்கு: வியாழக்கிழமைகளில், இந்த வாழை வழிபாட்டின்போது, வாழை மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, கொண்டைக் கடலை, இனிப்பு, அட்சதை அரிசி, மலர்கள் படைக்கலாம்.. அதேபோல, வாழை மரத்தின் அடிப்பகுதியில் நெய் விளக்கேற்றி, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். வாழை மரத்தில் குரு பகவான் வாசம் செய்வதால், குரு பகவானின் அருளும், பெருமாளின் அருளும் கிடைக்கக்கூடும்.
ஆனால், வியாழக்கிழமை இந்த பூஜையின்போது, பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது... துணி வைப்பது, வீட்டை துடைப்பது, தலைமுடி, நகம் வெட்டக்கூடாது. நீலம், கருப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம். வியாழக்கிழமைகளில் வாழைப்பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்..
3 குண்டு மஞ்சள்: பொதுவாக, திருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில், 3 குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும்.. இப்படி 3 சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குணமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டுமாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications