ஈசான்ய மூலையில் இதை வைத்து பாருங்க.. மகிழ்ச்சி, பணம், நன்மை கிடைக்க செய்யும் ஈசான மூலை.. அதிசய பலன்
சென்னை: வீட்டிலுள்ள அளவுகடந்த வறுமை நீங்க வேண்டுமானால், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பொங்க வேண்டுமானால், ஒரு சில விஷயங்களில் கவனத்தை செலுத்தினாலே போதும் என்கிறார்கள் முன்னோர்கள்.. இதுகுறித்து வாஸ்து சாஸ்திரத்தில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. அந்தவகையில், ஈசான மூலை அல்லது ஈசான்ய மூலையில் வைக்க வேண்டிய பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம்.
வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடமான வடகிழக்கு மூலையைதான், இதற்குதான் ஈசான்ய மூலை அல்லது சனி மூலை என்பார்கள்.. ஒவ்வொரு விட்டிலும், ஈசான்ய மூலை சரியாக இருந்தாலே, அந்த குடும்பம் முன்னேற்றத்தை சந்திக்கும்.

ஈசான்ய மூலை: எனவேதான், பூஜை அறையை ஈசான்ய மூலையில் அமைக்க வேண்டும் என்கிறார்கள்.. கடவுளுக்கான இடமாக ஈசான்ய மூலை கருதப்படுவதால், பூஜையறையை இங்கு அமைப்பதே சிறந்தது. ஒருவேளை அதற்கான அமைப்பு இல்லாவிட்டால், வீட்டின் கிழக்கு பக்கத்தில் அதாவது வடகிழக்கு தென்கிழக்கு நடுவில் பூஜை அறையை அமைக்கலாம்.
ஈசான்ய பகுதியின் தரையின் மட்டமானது, வீட்டின் மற்ற தரை இடங்களை விட உயரத்தில் இருக்கக்கூடாது. இங்கு பாத்ரூம், செப்டிக் டேங்க்குகளையும் வைக்கக்கூடாது. அப்படி அமைந்தால், குடும்பத்தின் ஆரோக்கியம் சீர்குலையும். எனவேதான் பெரும்பாலும் மாடிப்படிகளை இங்கு அமைக்க மாட்டார்கள். ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசான்ய மூலையில் படிப்பறை, வரவேற்பறை முதியவர்களுக்கான படுக்கையறையை அமைக்கலாம்.
சூரியக்கதிர்கள்: எப்போதுமே, கிழக்கிலிருந்து சூரியக்கதிர்கள் ஈசான மூலைக்குள் வரும்படி இருக்க வேண்டும். கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி சாமி படங்கள் வைக்கலாம். ஈசானிய மூலை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.
இருட்டாகவும், அடைப்பாகவும் இல்லாமல், எந்நேரமும் வெளிச்சம் இருக்கும்படியாக பார்த்து கொள்ள வேண்டும். சூரிய கதிர்கள், காற்றோட்டம் இவை இரண்டும் இருந்தாலே, அந்த வீட்டில் செழுமை தேடி வரும்.. அதேபோல, ஈசான்ய மூலையில் ஒரு சிறிய குடத்தில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்க வேண்டும்.
கனமான பொருட்கள் அதாவது, அம்மிக்கல், ஆட்டுகல், பழைய பொருட்கள், பீரோ போன்றவை இங்கே வைக்கக்கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.
பரிகாரம்: பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாகவே இருக்க வேண்டும். தவறாமல் மாலை நேரங்களில் விளக்கேற்றி வர வேண்டும்.. ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. ஆனால், உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது. அதேபோல, ஈசான்ய மூலையில் ஒரு செம்பில் நீர் ஊற்றி அதன் மீது, ஒரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்கலாம்.. இதனால், வீட்டில் ஏதாவது வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.












Click it and Unblock the Notifications